- Advertisement -
Homeஜோதிடம்வாஸ்து சாஸ்திரம் | Vasthu sasthram Tamilகேஸ் அடுப்பு வைக்க அதிர்ஷ்ட திசை

கேஸ் அடுப்பு வைக்க அதிர்ஷ்ட திசை

- Advertisement -

வீட்டில் வாஸ்து முறைப்படி ஒரு சில பொருட்களையும், ஒரு சில அமைப்புகளையும் சரியாக அமைக்கும் பொழுது அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் சொல்லுகிறது. அதிலும் குறிப்பாக சமையலறை வாஸ்து சரியாக அமைந்திருந்தால், வீட்டில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அந்த வகையில் சமையலறையில் கேஸ் அடுப்பு எந்த திசையில் இருப்பது சுப பலன்களை கொடுக்கும்? என்னும் வாஸ்து சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் தொடர இருக்கிறோம்.

வாஸ்து ரீதியாக சமையலறையில் கேஸ் அடுப்பு சரியான திசையில் வைத்திருந்தால், பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது. கேஸ் அடுப்பு வைப்பதற்கு தென்கிழக்கு திசை சரியான திசையாக தேர்ந்தெடுக்கப்படுகிறது. தென்கிழக்கு சுக்கிரனுக்கு உரியது, அதனால் செய்யும் சமையலும் ருசியுடன் இருக்குமாம். சூரிய ஒளி அதிகமாக அந்த இடத்தில் கிடைக்கும் என்பதால், நேர்மறை ஆற்றல்கள் பெருகும். வெப்பம், குளிர் இரண்டையும் சமநிலையில் வைத்திருக்கக் கூடியது தென்கிழக்கு திசை. இதனால் இங்கு வைக்கப்படும் பொருட்களும் நீண்ட நேரம் நன்றாக இருக்கும். தென்கிழக்கு திசையில் கேஸ் அடுப்பை வைப்பதன் மூலம் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். அங்கு சமைப்பவர்களுடைய ஆற்றலும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

- Advertisement -

தெற்கு திசையை ஆட்சி செய்பவர் செவ்வாய் பகவான் என்பதால், அந்த இடத்தில் கேஸ் ஸ்டவ்வை வைப்பது தவிர்க்க வேண்டும். சரியாக தெற்கு திசையில் கேஸ் அடுப்பு இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அடிக்கடி உடல்நல கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தெற்கு பகுதியில் எப்பொழுதும் வெப்பம் அதிகமாக இருக்கும்.

தென்மேற்கு திசையில் கேஸ் அடுப்பை வைத்தால் விரயங்கள் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரங்கள் சொல்லுகிறது. வீண் விரயங்களும், பணி சுமையும் கூடும். ராகுவிற்கு ஆட்சி திசை என்பதால், இந்த இடத்தில் கேஸ் அடுப்பை வைத்து சமைத்தால், சமைக்கும் உணவு எதிர்பார்த்த ருசியை தராது. வீட்டில் எதிர்மறை எண்ணங்களும், வேண்டாத செலவுகளையும் அடிக்கடி செய்ய வாய்ப்பு உண்டு. செலவு செய்வதோடு மட்டுமல்லாமல் சேமிப்பும் கரைய துவங்கும். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் பிரச்சனைகள் உண்டாகும். வேறு வழியில்லை அந்த திசையில் தான் வைக்க வேண்டும் என்பவர்கள், அனுமனுடைய படத்தை அடுப்பை பார்த்தவாறு வையுங்கள், பிரச்சனை தீரும்.

- Advertisement -

மேற்கு திசையில் சரியாக கேஸ் அடுப்பை வைத்தால் அது லாபத்தை கொடுக்கும். குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். அந்த இடத்தில் வெள்ளை நிறம் கொண்ட பெயிண்ட் இருப்பது நல்லது. சிகப்பு நிற பெயிண்ட் இருந்தால் பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். தன லாபம் அதிகரிக்க மேற்கு திசையில் சரியாக கேஸ் அடுப்பை அமையுங்கள்.

இதையும் படிக்கலாமே:
குழந்தை பாக்கியம் பரிகாரம்

வடமேற்கு திசையில் கேஸ் அடுப்பு இருப்பது அசுப பலன்களை கொடுக்கும். அடிக்கடி விருந்தாளிகளின் வருகையால் குடும்பத்தில் பிரச்சனைகளும் எழும் வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்குள் தீராத சண்டைகள் நிகழும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு தைராய்டு போன்ற பிரச்சனைகள் உருவாகும், மேலும் அவர்கள் எப்போதும் விரக்தியுடன் காணப்படுவார்கள். மனநிலையில் தடுமாற்றம் இருக்கும். வேறு வழி இல்லை என்பவர்கள், வடமேற்கு திசையில் கேஸ் அடுப்பை மஞ்சள் நிற மேடையின் மீது வைக்கலாம். அல்லது அடுப்பிற்கு கீழே மஞ்சள் நிற கல் ஒன்றை வைக்கலாம். இவை தவிர மற்ற திசைகள் சாதாரணமான சுப பலன்களை கொடுக்கும்.

சற்று முன்