திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் முறை

- Advertisement -

“கிரி” என்றால் “மலை” என்று பொருள். அந்த கிரி எனும் மலையை வலம் வருவதற்கு பெயர் “கிரிவலம்” ஆகும். நமது நாட்டில் ஆயிரகணக்கான கோயில்கள் இருந்தாலும் மலை பகுதியில் அமைந்திருக்கும் கோயில்கள் வெகு சில மட்டுமே இருக்கின்றன. அப்படியான மலையில் அமைந்திருக்கும் கோயில்களை பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வரும் வழக்கம் பக்தர்களால் மேற்கொள்ள படுகிறது. கிரிவல வழிபாடு செய்வதற்கு புகழ்பெற்ற மலைக்கோயிலாக “திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில்” இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று பல லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சல மலையை கிரிவலம் வந்து சிவபெருமானின் பரிபூரண அருளை பெருகின்றனர். கிரிவலம் முறையாக செல்வது எப்படி என்றும் அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Thiruvannamalai

திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாட்களுமே சிறந்தது என்றாலும் “பௌர்ணமி” தினத்தில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பான பலன்களை கிரிவலம் செல்பவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும். மற்ற எந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினங்களை விட சித்திரை மாதத்தில் வரும் “சித்ரா பௌர்ணமி”, கார்த்திகை மாதத்தில் வரும் “கார்த்திகை பௌர்ணமி” ஆகிய இரண்டு பௌர்ணமி தினங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்வதற்கு மிகவும் சிறந்த தினங்களாக கருதப்படுகிறது.

- Advertisement -

நீங்கள் கிரிவலம் செல்ல விரும்பும் கோயிலுக்கு முடிந்த வரை உங்கள் குடும்பத்தினர் அனைவருடன் சென்று வழிபட்டு பின்பு, கிரிவலம் மேற்கொள்வது. ஆன்மீக ஈடுபாடு அதிகம் உள்ள நபர்களோடு சேர்ந்து கிரிவலம் செல்வதும் சிறந்தது. கிரிவலம் போகும் சமயத்தில் அவ்வப்போது இறைவனின் அம்சமாக இருக்கும் அருணாச்சல மலையை பார்த்தவாறே கிரிவலம் செல்வது சிறப்பு. கிரிவலம் செல்லும் வழியில் இருக்கும் அத்தனை கோயில்களிலிலும், சித்தர்கள் மற்றும் ஞானிகளின் சமாதியில் வழிபடுவதும், தியானம் செய்வதும் நல்லது. மிகவும் நிதானமாக கிரிவலம் செல்ல வேண்டும். அவசர கதியில் வேகமாக நடந்து கிரிவலம் செல்வதால் எந்த ஒரு பலனும் ஏற்படாது.

கிரிவலம் செல்லும் போது ஆண்களும் பெண்களும் நவ நாகரீக ஆடைகளை அணிந்து கொள்வதை விட உங்கள் உடலின் காந்த சக்தியை அதிகம் வெளியேறாமல் தடுக்கும் வேஷ்டி, புடவை போன்ற உடுத்தி கிரிவலம் செல்வது சிறந்தது. சிவ பெருமானுக்குரிய மந்திரங்கள் ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை துதித்த வாறே கிரிவலம் செல்வதால் பல நன்மைகள் உங்கள் வாழ்வில் உண்டாகும். ஒரு சிலர் பாதங்களில் புண்கள் ஏற்படும் என தோல் செருப்பு தவிர்த்தாலும் ரப்பர் செருப்பை அணிந்து கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் செல்வது என்பது உங்கள் உடல் மற்றும் மனவலிமை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள இறைவன் தரும் ஒரு அற்புத வாய்ப்பாகும். எனவே செருப்பு அணிந்து கொண்டு கிரிவலம் செல்வதில் எந்த ஒரு அர்த்தமும், பயனும் இல்லை.

- Advertisement -

girivalam

கிரிவலம் செல்கிற வழியில் இருக்கும் மிகவும் வயதான யாசகர்கள், துறவிகள் போன்றோருக்கு அன்னதானம் அளிப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்த செயலாகும். திருவண்ணாமலை கிரிவல பாதையின் பல இடங்கள் வன பகுதியை சார்ந்து இருப்பதால் குரங்குகள், மயில்கள் போன்றவை திரிவதை சமயங்களில் நாம் காண முடியும். அவற்றிற்கு உணவளிப்பதும் சிறந்தது. வழியில் தென்படுகின்ற பசுமாடுகள், நாய்கள் போன்றவற்றிற்கும் உணவளித்தால் நமது பாவ வினை தீரும். சித்தர்களின் கருத்துப்படி “அஷ்டமா சித்து” கைவர பெற்ற சித்தர்கள் பௌர்ணமி தினத்தில் இங்கு மனித வடிவிலும், விலங்குகள் வடிவிலும் இருந்தவாறு சிவ பெருமானை வழிபட வருவதாக கூறுகின்றனர். எனவே இக்காலங்களில் அன்னதானம் அளிப்பவர்கள் தங்களை அறியாமல் ஏதேனும் சித்தருக்கு அன்னமளிக்கும் பேறு பெற்று அவர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர்.

Sakkadi siddhar

இந்த முறைப்படி கிரிவலம் வந்து இறைவனை வழிபடுபவர்களுக்கு அவர்களின் வாழ்வில் அவர்கள் விரும்பிய நியாயமான விருப்பங்கள், ஆசைகள் போன்றவை நிச்சயம் நிறைவேறும். மேற்கண்ட முறையில் இன்ன பிற மலை சார்ந்த கோயில்களிலும் அந்தந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்களை துதித்தவாறு கிரிவலம் செல்லுதல் சரியான முறையாகும்.

இதையும் படிக்கலாமே:
கிருத்திகை நட்சத்திரகாரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரயமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -