பௌர்ணமி நாட்கள் 2019

chitra pournami sivan

பௌர்ணமி தினத்தில் விரதம் இருந்து இறைவனை வழிபடுவதென்பது மிகவும் சால சிறந்தது. குறிப்பாக பௌர்ணமி ஒளியில் மலையை சுற்றி அந்த மூலிகை கார்டை சுவாசிப்பது நமது உடலிற்கும் உள்ளத்திற்கும் பலத்தை தரும். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டின் பௌர்ணமி நாட்கள் எவை என்று பார்ப்போம் வாருங்கள்.

Pournami 2019 Date and time

DateDayStarting TimeEnding Time
20 January 2019SundayJan 20 - 01:17 pmJan 21 - 11:08 pm
18 February 2019MondayFeb 18 - 11:53 pm Feb 19 - 09:32 pm
20 March 2019WednesdayMar 20 - 09:45 amMar 21 - 07:28 am
18 April 2019ThursdayApr 18 - 07:05 pm
Chitra Pournami 2019
Apr 19 - 05:35 am
17 May 2019FridayMay 17 - 04:32 amMay 18 - 03:40 am
16 June 2019SundayJun 16 - 03:10 amJun 17 - 03:00 pm
15 July 2019MondayJuly 15 - 03:00 amJuly 16 - 03:00 am
14 August 2019WednesdayAug 14 - 04:30 pmAug 15 - 06:10 am
13 September 2019FridaySep 13 - 08:15 amSep 14 - 10:20 Pm
12 October 2019SaturdayOct 13 - 01:20 amOct 14 - 02:15 am
11 November 2019MondayNov 11 - 06:30 pmNov 12 - 07:40 am
11 December 2019WednesdayDec 11 - 11:10 amDec 12 - 11:05 am

Sashti 2019  Ashtami 2019  Navami 2019

Pournami days in Tamil Calendar

எந்த தேதியில் எந்த நிமிடத்தில் இருந்து பௌர்ணமி தொடங்கி எந்த தேதியில் முடிகிறது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். அதை வைத்து நீங்கள் உங்கள் பௌர்ணமி விரதத்தை துவங்கலாம். அதோடு மிக முக்கிய பௌர்ணமியான சித்ரா பௌர்ணமி 2019 ஆண்டில் என்று வருகிறது என்பதும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் நமது வீடுகளில் பெண்கள் மட்டுமே பௌர்ணமி அன்று விரதம் இருந்து கடவுளினை பூஜிப்பது வழக்கம். அவ்வாறு பூஜிக்கும் போது கடவுளின் ஆசி நமக்கு முற்றிலுமாக கிடைக்கும் என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஒரு உண்மை.

சித்திரா பௌர்ணமி :

சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி கண்ணனுக்கு உகந்த பௌர்ணமி ஆகும். அதனையே நாம் சித்திரா பௌர்ணமி என்று அழைக்கிறோம். இவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை வரும் இந்த சித்திரா பௌர்ணமி அன்று கண்ணன் வசந்தமாக தனது வசந்தகாலத்தில் இருப்பார் என்று பகவத்கீதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரா பௌர்ணமி உருவானதன் காரணம் :

ஒரு சமயம் பார்வதி தேவி தனது ஓய்வு நேரத்தில் ஒரு சித்திரம் ஒன்றை வரைந்தார். அந்த சித்திரம் அவருக்கு மிகவும் பிடித்து போக அந்த சித்திரதிற்கு உயிர் கொடுக்குமாறு தனது துணைவனான சிவபெருமானிடம் கோரிக்கை ஒன்றினை வைத்தார். அந்த கோரிக்கையினை ஏற்ற சிவபெருமான் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுத்தார். அந்த சித்திரம் உயிர் பெற்ற நாளே சித்திரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது என்று புராணங்களில் ஒரு குறிப்புண்டு.

இந்த சித்திரா பௌர்ணமிக்கு மற்றொரு பெயர்காரணமும் உள்ளது. அது யாதெனில், சித்திர மாத பௌர்ணமி அன்று நீர் நிலைகளில் நிலவின் முழுவடிவமும் பிரகாசமாக தெரியும் என்பதனால் அது சித்திரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது என்ற ஒரு கருத்தும் உள்ளது.

chitra pournami

சித்திரா பௌர்ணமியின் பலன்கள் :

சித்திரை மாதம் ஏற்படும் பௌர்ணமி அன்று சந்திர பகவான் பூமிக்கு மிக அருகில் தனது முழுபிரகாசத்துடன் காட்சியளிப்பதால் அன்று நாம் சந்திர பகவானை வேண்டினால் நாம் வேண்டிய வரம் நமக்கு நிச்சயம் கிடைக்கும். மேலும் அந்த வழிபாடுகள் மூலம் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கும் என்ற ஐதீகம் உண்டு.

மேலும் சித்திரா பௌர்ணமி ஏற்படும் நாள் அன்று சூரிய பகவான் தனது முழுசக்தியுடன் பலம் பெற்று நிற்பார். அன்று சந்திரனும் சூரியனும் துலாம் ராசியின் ராசியான செவ்வாய் நட்சத்திரமான சித்திரையில் சமபலத்துடம் ஒருவரை ஒருவர் துணை நின்று சமபலத்துடம் அந்த இடத்தினை பகிர்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

பௌர்ணமி விரதம் :

பௌர்ணமி அன்று அதிகாலை எழுந்து குளித்து வீட்டின் வாயிலில் மாவுக்கோலம் இட்டு பூஜை செய்வது சிறந்த பலனை தரும். மேலும் தெற்கு பக்கம் பார்த்தவாறு அமைந்த பூஜை அறைகளில் மாவுக்கோலம் இட்டு அந்த மாவுக்கோலம் சித்ரகுப்தர் போன்று இருந்தால் அது மேலும் பூஜைக்கு பலம் சேர்க்கும்.

இவ்வாறு சித்திரகுப்தன் வடிவ கோலம் போட்டு நாம் நடத்தும் பூஜையின் பலனாக நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரகுப்தர் பிறப்பு :

ஏழு வண்ணங்கள் இணைந்து பிறந்தவளான நீனாதேவிக்கு பிறந்ததால் சித்திரகுப்தருக்கு ஏழு வண்ண நிறத்தினால் ஆன வஸ்திரத்தினை சாற்றுவது வழக்கம். மேலும் அவரின் வருகைக்கு சான்றாக தேங்காய் சாதம், தயிர் சாதம் மற்றும் உளுந்து வடை போன்றவற்றினை நெய்வேத்தியம் செய்வது சிறப்பம்சமாகும்.

chithra guptan

சித்திரகுப்தர் பெயர் வரலாறு :

சிவா பெருமான் சிவலோகத்தில் சித்ரகுப்தருக்கு அளித்த பதவி யாதெனில் மக்கள் மற்றும் தேவர்கள் ஆகியோர் செய்யும் புண்ணியங்களை குறித்து வைப்பது. “சித்” என்றால் மனம் “குப்த” என்றால் மறைவு அதாவது மனதில் புண்ணியகாரியத்தினை மறைத்து வைத்து நாம் செய்யும் செயலினை குறித்து வைப்பவர் சித்ரகுப்தர் என்று அவரின் பெயர் வரலாறு நமக்கு தெளிவுபடுத்துகிறது.

எமனின் உதவியாளர் :

தனது வேலைப்பளு மிகுதியின் காரணமாக எமன் சிவபெருமானிடம் வேண்டியதாகவும் அதனால், சிவன் அவர் கோரிக்கையினை ஏற்று அவருக்கு உதவியாளராக யாரை நியமிக்கலாம் என்று கற்பனை கொண்ட போது அவரின் நினைவில் பட்டவர் தான் எழுதுகோளுடன் பிறந்த இந்த சித்ரகுப்தர். எனவே அவரை சிவன் எமனின் வேலைப்பளுவினை குறைக்க அவருக்கு சித்ரகுப்தரை உதவியாளராக நியமித்தார்.

சிவசக்தி வழிபாடு :

சிவனின் அம்சமும் சந்திரனின் சக்தியான சூரியனை சிவசக்தி என்று அழைப்போம். பௌர்ணமி நாளில் சூரியனை வழிபடுதலையே சிவசக்தி வழிபாடு என்கிறோம். அவ்வாறு பௌர்ணமி தினத்தில் நடைபெறும் சிவசக்தி வழிபாடு மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகவும், மேலும் சிறப்பான வழிபாடாகவும் கருதப்படுகிறது.

மேலும் 2019 மாத காலண்டர் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

English Overview:
Here we have given pournami date 2019. It covers pournami in January 2019, pournami in February 2019, pournami in March 2019, pournami in April 2019, pournami in May 2019, pournami in June 2019, pournami in July 2019, pournami in August 2019, pournami in September 2019, pournami in October 2019, pournami in November 2019 and pournami in December 2019, Pournami viratham dates in 2019, Pournami pooja dates in 2019 or Girivalam dates in 2019 and Chitra Pournami date in 2019.