எத்தகைய நோயையும் போக்கி உடல் பலம் பெற அனுமன் காயத்ரி மந்திரம்

Hanuman

உலகில் மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழ்கின்றன. இதில் விலங்குகளுக்கு இருக்கும் உடல் வலிமையில் சிறிது கூட மனிதனுக்கு இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டுமே இருக்கும் சிந்திக்கும் திறனால் அவன் ஒட்டுமொத்த உலகையே ஆளுகிறான். ஒரு மனிதனுக்கு உடல் மற்றும் மனம் இரண்டுமே சமநிலையான பலம் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய உடல் மனோபலத்தை தருபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர். அவரை வழிபடுவதற்கான மந்திரம் இது.

Hanuman

ஹனுமான் காயத்ரி மந்திரம்

“ஓம் அஞ்சனிசுதாய வித்மஹி
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ மாருதித் ப்ரசோதயாத்”

உடல் மற்றும் மனம் பலம் பெற வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு மற்ற மந்திரங்களை ஜெபிக்கும் வாடிக்கை இருந்தாலும் இம்மந்திரத்தையும் “ஸ்ரீ ஆஞ்சநேயரை” உளமார நினைத்து, 108 முறை இம்மந்திரத்தை கூறி வணக்க வேண்டும். மேலும் நீண்ட காலம் நோய் பாதிப்பால் அவதியுறுபவர்கள் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இம்மந்திரத்தை 108 முடிந்தால் 1008 முறை கூறி ஆஞ்சநேயரை வணங்க அந்த நோய் பாதிப்புகள் நீங்கும்.

நாம் எந்த ஒரு செயலை செய்யும் போதும் செய்யப்படும் அந்த செயலுக்கான விடயங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே எடுக்கப்பட்ட அந்த செயல் முழுமை பெரும். அது போல் தான் மனிதர்களாகிய நமது உடல் மற்றும் மனமும். இவை இரண்டும் ஆரோக்கியமாகவும் மற்றும் வலிமையாகவும் இருந்தால் மட்டுமே நாம் எப்படிப்பட்ட காரியங்களையும் சிறப்பாக செய்ய இயலும். இவை இரண்டையும் தன்னை வேண்டுபவர்களுக்கு அருள்பவர் தான் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

Hanuman

ஒரு மனிதன் உயிர் வாழ உணவும், சுவாசிக்க காற்றும் அவசியமாகும். அதிலும் இந்த காற்று ஒரு மனிதனுக்கு மிகுந்த பலத்தை தருகிறது. அப்படிப்பட்ட காற்றுக்கு அதிபதியாகிய :வாயு தேவனின்” அம்சம் தான் “ஸ்ரீ ஆஞ்சநேயர்”. பல தேவர்களின் ஆசிகளுடன் பிறந்த ஆஞ்சநேயர், வஜ்ரத்தை போன்ற உடலும், சிங்கத்தை போன்ற தைரியம் மற்றும் மனோதிடம் கொண்டவர். வாயுவான காற்றின் மிகுந்த பலத்தை பெற்றவர். அவருக்குரிய இம்மந்திரத்தை ஜெபித்து அவரை வழிபடுவதால் அவரின் அத்தகைய சக்திகளை நாமும் பெறலாம்.

இதையும் படிக்கலாமே:
காரிய தடை நீங்க விநாயகர் மந்திரம்

English Overview:
Here we have Hanuman Gayatri mantra in Tamil. By chanting this mantra one can get a healthy body and peaceful mind.