இந்த மூன்று டிப்ஸ்கள் தெரிந்தால் போதும். நீங்களும் உங்கள் வீட்டில் சுவையான, சத்தான, சாஃப்டான கேழ்வரகு அடையை சட்டென செய்துவிட முடியும்

adai
- Advertisement -

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை ஏதாவது ஒரு வகையில் நமது அன்றாட உணவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கேழ்வரகை வைத்து ஏதாவது ஒரு உணவு வகையை வாரத்திற்கு ஒரு முறையாவது செய்து சாப்பிட்டு வந்தால் அவை உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. முந்தைய காலத்தில் எல்லாம் தினமும் காலை உணவாக கேப்பை கஞ்சி அல்லது கேப்பைக் களி இவற்றை மட்டும் தான் சாப்பிடுவார்கள். அதனால் தான் அவர்கள் தள்ளாடும் வயதிலும் தங்கள் வயதிற்கு மீறின வேலையை அசால்டாக செய்து வந்தார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் வயது ஏற ஏற முட்டி தேய்மானம், முதுகு வலி போன்ற நோய்களுக்கு ஆளாகின்றோம். எனவே கேழ்வரகை வைத்து செய்யக்கூடிய சுவையான முருங்கைக்கீரை அடையை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சாஃப்டாக எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ragi

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – ஒரு கப், முருங்கைக்கீரை – ஒரு கப், பச்சை மிளகாய் – 3, பெரிய வெங்காயம் – 4, உப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு 3 பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் முருங்கைக் கீரையை உருவி தண்ணீரில் அலசி, சுத்தம் செய்து எடுத்து வைக்க வேண்டும். பிறகு சிறிய துண்டு இஞ்சியை தேங்காய் துருவலில் துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

ragi

பின்னர் ஒரு கப் கேழ்வரகு மாவை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் ஒரு கப் முருங்கைக்கீரை மற்றும் பொடியாக நறுக்கிய முக்கால் கப் வெங்காயத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு, அரை ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் துருவிய இஞ்சி சேர்த்து கைகளை வைத்து நன்றாக பிசைந்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

கேழ்வரகு அடை சாஃப்டாக வருவதற்கு முதல் குறிப்பாக எந்த அளவிற்கு கேழ்வரகு மாவு எடுக்கிறோமோ, அதே அளவு முருங்கைக்கீரை மற்றும் வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக இரண்டு அல்லது மூன்று டம்ளர் தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் கொதித்த தண்ணீரை கேழ்வரகு மாவுடன் சிறிது சிறிதாகச் சேர்த்து கரண்டியைப் பயன்படுத்தி நன்றாக கலந்துவிட வேண்டும். வடை மாவு பதத்திற்கு வரும் வரை தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும். தண்ணீரைக் கொதிக்கவைத்து சேர்ப்பதால் கேழ்வரகு அடை சாஃப்டாக வரும்.

murugai-

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைக்க வேண்டும். பிறகு ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, ஒரு உருண்டை கேழ்வரகு மாவை எடுத்து கைகளினால் அடை தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை தோசை கல்லில் போட்டு முதலில் மூடி போட்டு மூடி விட வேண்டும்.

ragi-adai

இவ்வாறு மூடி போட்டு வேக வைப்பதன் மூலம் அடை சாஃப்டாக இருக்கும். ஒரு நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து எண்ணெய் ஊற்றி மறுபக்கம் திருப்பி போட வேண்டும். இவ்வாறு இரண்டு புறமும் நன்றாக வெந்ததும் அடையை எடுத்து ஒரு தட்டில் மாற்றி வைக்க வேண்டும். அவ்வளவுதான் இந்த சுவையான கேழ்வரகு அடையுடன் உங்களுக்கு பிடித்தமான சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அற்புதமான சுவையில் இருக்கும். உடம்பிற்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

- Advertisement -