- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇது மாதிரி ஒரு ஷாம்புவை எவ்வளவு காசு கொடுத்து, எங்க தேடினாலும் வாங்க முடியாது. இந்த...

இது மாதிரி ஒரு ஷாம்புவை எவ்வளவு காசு கொடுத்து, எங்க தேடினாலும் வாங்க முடியாது. இந்த ஷாம்பூ, எவ்வளவு மோசமான முடி உதிர்வு பிரச்சனையையும் 1 மாதத்தில் குறைத்து விடும்.

- Advertisement -

கெமிக்கல் கலக்காத ஒரு ஹெர்பல் ஷாம்பு என்றால் அது இதுதான். இதைவிட பெஸ்ட் ஷாம்புவை நீங்கள் எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. தலையில் இருக்கக்கூடிய முடி உதிர்வு பிரச்சனையை ஒரு சில நாட்களில் குறைத்து, முடியை வளர செய்ய வேண்டிய வேலையை இந்த ஷாம்பு செய்து விடும். மிக மிகக் குறைந்த செலவில் வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே ஒரு மிக்ஸி ஜாரை வைத்து இந்த ஷாம்புவை தயார் செய்யப் போகின்றோம். நீங்கள் தலைக்கு குளிக்கும் ஷாம்புவுக்கு பதில் இதை பயன்படுத்த போறீங்க அவ்வளவுதான். தலையில் ஹேர் பேக் போட்டு வெயிட் பண்ண வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. சூப்பரான ஹோம் மேட் ஹெர்பல் ஷாம்பூ ரெமிடி இதோ உங்களுக்காக.

ஹோம் மேட் ஹெர்பல் ஷாம்பூ செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் செம்பருத்திப் பூ இலை – 10, செம்பருத்தி பூ – 5, கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் பவுடர் – 2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்த இந்த விழுதை சின்ன பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அரிசி வடுத்த கஞ்சி தண்ணீர் இதற்கு நமக்கு தேவை. முந்தைய நாள் அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் இருந்தால் இன்னும் சிறப்பு. அந்த கஞ்சி தண்ணீரை இதில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்தால் சூப்பரான ஹோம் மேட் ஷாம்பு தயார். இதை மட்டுமே நீங்க தலைக்கு போட்டு குளிங்க. தலையில் இருக்கும் அழுக்கு எண்ணெய் பிசுபிசுப்பு எல்லாம் சுத்தமாக நீங்கிவிடும். (நாம் அரைத்த இந்த விழுதை எடுத்து இரண்டு கைகளில் தேய்த்து, ஈரமான முடியில் அப்ளை செய்து எப்போதும் போல தலையை வாஷ் பண்ணிக் கொள்ளவும்).

உங்களுடைய தலையில் பேன் பொடுகு தொல்லை என்று இருந்தால், இதோடு ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலையை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இதை பெஸ்ட் ஷாம்பு என்று மட்டும் சொல்லி விட முடியாது. உங்களுடைய தலைமுடிக்கு இது ஒரு பெஸ்ட் கண்டிஷன்னராகவும் இருக்கும்‌. பள்ளிக்கூடம் செல்லும் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஷாம்புவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்களும் இதை பயன்படுத்தலாம்.

- Advertisement -

தொடர்ந்து ஒரு மாதமும் இதை தினமும் தலையில் போட்டு குளிக்க கூடாது. வாரத்தில் 2 நாளோ, 3 நாளோ, நீங்கள் எப்போதெல்லாம் தலைக்கு குளிப்பீங்களோ, அப்போதெல்லாம் இதைதான் ஷாம்புவாக பயன்படுத்த வேண்டும். இடையிடையே தலைக்கு குளித்தாலும் இதைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும். வேறு ஷாம்பு போட்டு குளிக்க கூடாது. இந்த குறிப்பை மட்டும் பின்பற்றி பார்த்தால் நல்ல ரிசல்டை எதிர்பார்க்க முடியும்.

இதையும் படிக்கலாமே: கேரளா பெண்களின் கூந்தல் ரகசியம்! கரு கரு என்று நீளமாக அவர்களின் முடி இருக்க காரணம் என்ன? இனி உங்கள் தலைமுடியை எலிவால் மாதிரி இருக்குன்னு யாருமே சொல்ல மாட்டாங்க!

இதோடு சேர்த்து ஊட்டச்சத்து உள்ள பொருட்களையும் சேர்த்து சாப்பிட வேண்டும். வெறும் ஹேர்பேக் போட்டால் மட்டும் முடிக்கு வலிமை கிடைத்து விடாது. நாம் ஆரோக்கியமாக இல்லை என்றாலும் முடி உதிர்வு ஏற்படும். புதிய முடி வளர்ச்சி தடைப்படும். ஆகவே வைட்டமின் சி சத்து நிறைந்த காய்கள், பழங்களை சாப்பிடுங்கள். கீரை வகைகளை அதிகமாக சாப்பிடுங்கள். பயோட்டின் சத்து நிறைந்த பொருட்களை அதிகமாக உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் நிச்சயமாக உங்களுக்கு அழகான ஆரோக்கியமான முடியை கொடுக்கும். இந்த அழகு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா மட்டும் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

சற்று முன்