முன்பெல்லாம் நாற்பது வயதை கடந்தவர்களுக்கு கூட லேசாக தான் நரை முடிகள் தெரிய ஆரம்பிக்கும். ஆனால் இப்போதெல்லாம் சிறு குழந்தைகளுக்கு கூட இந்த நரைமுடி பிரச்சனை தொடங்கி விடுகிறது. இதற்கு பெரும்பாலும் நம் உணவு வகை தான் காரணம் என்றாலும் அதற்காக அதை அப்படியே தவிர்த்து விட்டு செல்லவும் முடியாது. பெரியவர்களுக்கு வந்தாலே இப்போதெல்லாம் டை போன்ற வைத்து உபயோகிக்க வைத்துக் கொள்ள நினைக்கும் போது குழந்தைகளுக்கு இது போல இருந்தால் வயதான தோற்றத்தை தந்து அவர்களின் தன்னம்பிக்கையை குலைத்து விடும். இதற்கு தீர்வாக நாம் தினமும் தேவை இல்லை என்று தூக்கி போடும் வெங்காயத்தோலை வைத்தே இள முடியை மாற்றக்கூடிய ஒரு அருமையான ஸ்பிரே வீட்டிலே தயார் செய்து விடலாம் அது எப்படி என்று பதிவை தொடர்ந்து தெரிந்துகொள்வோம்.
இதற்கு முதலில் நீங்கள் தினமும் உபயோகிக்கும் வெங்காயத்தின் தோலை ஒரு தட்டில் போட்டு ஆற வைத்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். நன்றாக ஒரு கைப்பிடி அளவு கிடைத்தவுடன் அதை வைத்து இள நரை மறையும் செய்யும் ஸ்பிரே தயாரிக்க ஆரம்பித்து விடலாம். இதற்கு சின்ன வெங்காயம் தோல் உபயோகித்தால் இதற்கான பலன் இன்னும் சீக்கிரம் கிடைக்கும் சரி இப்போது இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதை செய்ய கருவேப்பிலை இலையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து கொள்ளுங்கள். கருவேப்பிலையை காய வைக்க வேண்டாம் அப்படியே பச்சை இலையை எடுத்துக் கொள்ளலாம். இரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு இந்த இலையும் தோலும் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வையுங்கள். தண்ணீர் பாதியாக வற்றி வரும் வரை தண்ணீர் நன்றாக கொதிக்க விடுங்கள். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆற விடுங்கள்.
தண்ணீர் ஆறிய பிறகு வடிகட்டி எடுத்து அதை ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்பிரே தினமும் உங்கள் தலையின் வேற்கால்களில் படும் படி அடித்துக் கொண்டால் போதும் உங்கள் நரைமுடி மாறி கருமையாக மாற தொடங்கிவிடும். ஆனால் சைனஸ் தொந்தரவுகள் இருந்தால் இப்படி தலையில் தினமும் தேய்ப்பது வேண்டாம் . அதற்கு பதில் இதை வாரத்துக்கு இரண்டு நாள் வேர் கால்களில் தேய்த்து மசாஜ் செய்து பிறகு ஷாம்பு போட்டு குளித்து விடலாம்.
இதில் கறிவேப்பிலையும் சேர்ப்பதால் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும். தினமும் நான்கு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தாலே முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும். இத்துடன் வெங்காய தோலும் சேரும் போது இதன் பலன் இன்னும் அதிகமாவே கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: அதிவேகமாக முடி வளர்ச்சியை பெற அழகான ஹேர் பேக். தலைக்கு எண்ணெய் வைக்கிறதை விட இந்த ஹேர் பேக்கை போடுவது அவ்வளவு ஈசி.
இது இளநரையை மறைய வைப்பது மட்டுமில்லாமல் முடி உதிர்ந்து அந்த இடத்தில் புதிய முடி வராமல் இருப்பவர்களுக்கும் புதிய முடி வளர செய்யும். கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் கலந்த டைகளை வாங்கி உபயோகித்தால் கூட இள நரை மறைத்து கொள்ளலாமே தவிர மாறாது. ஆனால் இதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.