1 வாரம் காத்திருக்க வேண்டாம். 10 நாட்கள் காத்திருக்க வேண்டாம். க்ளாஸி லுக்கிற்கு வெறும் 5 நிமிடம் போதுமே! இப்படி மட்டும் செஞ்சிப் பாருங்க அப்படியே, உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்.

face4

நிறைய பெண்களுக்கு முகம் வாடி வதங்கிப் போயிருக்கும். அவர்களது சருமத்தில் ஒரு முகப்பொலிவே இருக்காது. ஈரத்தன்மை இல்லாமல் வறட்ச்சியடைந்த முகத்தைக்கூட வெறும் 5 நிமிடத்தில் பளபளவென அழகாக மாற்றி விட முடியும். உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே, நேரமும் அதிகமாக எடுக்காது. இதில் நாம் பயன்படுத்த போகும் பொருட்களுக்கும் விலை அதிகம் இல்லை. ஆனால் ரிசல்ட் பெரியதாக தான் இருக்கும். ஒரு வாரம் காத்திருக்க வேண்டாம். பத்து நாட்கள் காத்திருக்க வேண்டாம். உடனடி பொலிவை பெற என்ன செய்வது?

face

ஒரு சிறிய பொருள் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தயிர் – 1 ஸ்பூன், அரிசி மாவு – 1/2 ஸ்பூன், காபி பவுடர் – 1/2 ஸ்பூன், தேன் – 1/2 ஸ்பூன், கடலை மாவு – 1/2 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த பேஸ்ட் அப்படியே இருக்கட்டும். முதலில் உங்களது முகத்தை வெந்நீரால், அதாவது வெதுவெதுப்பான நீரால் கழுவி துடைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு உங்கள் கைகளாலேயே, தயார் செய்த பேஸ்ட்டை தொட்டு முகம் நெற்றி கழுத்து பகுதிகளில் வட்டவடிவமாக ரொம்ப ரொம்ப மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வரை மசாஜ் செய்து விட்டு, வெறும் இரண்டு நிமிடங்கள் கழித்து அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் உங்களது முகத்தை கழுவி துடைத்து விடுங்கள்.

face2

இன்ஸ்டன்டா இதை செய்ய வெறும் 5 லிருந்து 10 நிமிடங்கள் போதும். அதாவது பேக்கை தயார் செய்து முகத்தில் போட்டு கழுவுவதற்கு வெரும் 10 நிமிடங்கள் தான் தேவை. அதன் பின்பு ஐஸ் க்யூப்ஸை முன்பாகவே பிரிட்ஜில் ஊற்றி வைத்து விடுங்கள். அந்த ஐஸ் கியூபை எடுத்து உங்களது முகத்தில் ஜென்டிலாக வட்ட வடிவத்தில் இரண்டு நிமிடங்கள் வரை மசாஜ் செய்தால் போதும்.

- Advertisement -

தேவைப்பட்டால் இந்த ஐஸ் க்யூப் செய்ய தண்ணீர் ஊற்றி வைக்கும் போது, அந்த தண்ணீரில் இரண்டு சொட்டு பாதாம் எண்ணெய் ஊற்றி கூட ஐஸ் க்யூப் செய்து வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம் தான். அதன்பின்பு உங்களிடம் நல்ல Moisture Cream இருந்தால் அதை எடுத்து முகத்தில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.

face9

5 நிமிடத்திற்கு முன்பாக உங்கள் முகம் இருந்த பொலிவுக்கும், இப்போது உங்களது முகம் இருக்கும் பொலிவுக்கும் வித்தியாசத்தை உங்கள் ஊரே பேசும். அந்த அளவிற்கு பளபளவென மாறி இருப்பீர்கள். வெளியே கிளம்ப வேண்டும். முகத்திற்கு இன்ஸ்டன்ட் அழகு கிடைக்க வேண்டும் என்றால், இப்படி செய்து விட்டு அதன் பின்பு மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை தனித்தனியாக பயன்படுத்தினால் ரிசல்ட் வேறு. மேலே சொன்ன அளவில் தண்ணீர் ஊற்றாமல் பேக் செய்து பயன்படுத்தி தான் பாருங்களேன் உங்கள் முகத்தில் ஏற்படக்கூடிய வித்தியாசத்தை!

இதையும் படிக்கலாமே
வெள்ளை முடியை, வேரிலிருந்தே நிரந்தரமாக கருப்பாக மாற்ற இந்த 1 காய் போதுமே. வெறும் 7 நாட்களில் மாற்றத்தை பார்த்து நீங்களே நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.