முகத்தை வெள்ளையாக நாம் இது வரை எத்தனையோ வகையான அழகு குறிப்புகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் இந்த அழகு குறிப்பு பதிவில் இருக்கும் அழகு குறிப்பு இதுவரை நீங்கள் கேள்விப்படாத அதே நேரத்தில் வித்தியாசமான ஒரு பேக்காக இருக்கும். திடீரென எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என நினைத்தால் பத்து நிமிடத்திற்குள்ளாகவே இந்த பேக்கை தயார் செய்து போட்டு விடுங்கள். பார்லர் சென்று மேக்கப் போட்டதை போன்று முகம் அவ்வளவு அழகாக மாறி விடும்.
முகம் வெள்ளையாக மாற ஃபேஸ் பேக்:
இந்த பேக்கை தயாரிக்க ஒரு சுத்தமான கண்ணாடி பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு முகத்திற்கு பயன் படுத்த கூடிய சுத்தமான மஞ்சள் பயன்படுத்துங்கள். மஞ்சளை பயன்படுத்தும் போது அது முகத்தில் உள்ள கிருமிகளை எல்லாம் அழித்து சருமத்தை எப்போதும் பாதுகாத்து வைத்திருக்கும். நாம் அந்த காலத்தில் இருந்து பயன்படுத்தி வரும் அழகு சாதன பொருட்களில் இந்த மஞ்சளுக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு.
அடுத்து இதில் சேர்க்கப்படும் ஒரு பொருள் தான் ஷாம்பூ இதற்கு வெள்ளை அல்லது நீல நிறத்தில் இருக்கும் ஷாம்பை மட்டும் பயன்படுத்துங்கள். கருப்பு நிறத்தில் இருக்கும் ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. என்ன முகத்திற்கு ஷாம்பு போட வேண்டுமா? என்று நீங்கள் யோசிப்பது தெரிகிறது. முடியில் இருக்கும் அழுக்குகள் நீக்கி முடி சைனாக பயன்படுத்தும் இது இந்த ஷாம்பு நம் முகத்தில் இருக்கும் அழுக்குகளையும் வெளியேற்றி நல்ல ஒரு பளபளப்பை கொடுக்கக்கூடிய தன்மை இதில் உண்டு.
இந்த மஞ்சள் உடன் ஷாம்புவை கலந்த பிறகு இதில் சேர்க்கும் இன்னொரு முக்கியமான பொருள் பேஸ்ட். இதற்கு நாம் கோல்கேட் பேஸ்ட்டை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். வேறு எந்த பேஸ்டையும் பயன்படுத்தக் கூடாது. அதுவும் கால் டீஸ்பூன் குறைவாக கொஞ்சமாக தான் சேர்க்க வேண்டும். அதிகமாகவும் சேர்த்து விடக் கூடாது.
இப்பொழுது மஞ்சள், ஷாம்பு ,பேஸ்ட் இவை மூன்றும் நன்றாக கலந்து குழைத்த பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரில் துடைத்த பின்பு, இதை முகத்தில் தேய்த்து லேசாக மசாஜ் செய்த பின்பு பத்து நிமிடம் அப்படியே முகத்தில் ஊற விடுங்கள். பத்து நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவிய பின்பு மெல்லிய காட்டன் துணி வைத்து முகத்தை துடைத்த பின் பாருங்கள் முகம் அப்பொழுது நம்ம பளிச்சென்று பிரகாசமாக மாறி இருப்பதை உணர்வீர்கள்.
இதையும் படிக்கலாமே: ஒத்தையா இருக்கிற முடியை கத்தையா வளர வைக்கும், கருப்பு கொண்டை கடலை! ஊட்டச்சத்து இல்லாமல் உதிரும் முடியை கூட, உதிராமல் பாதுகாக்கும் ஹார்பேக்.
இந்த பேக்கை வாரம் இரு முறை உபயோகித்தாலே போதும் உங்கள் முகம் எப்பொழுதுமே நல்ல கலராக பார்க்க பொலிவுடன் அழகாக இருக்கும் இதை பயன்படுத்திய பிறகு உங்களுக்கே அழகு நிலையம் செல்ல வேண்டும் என்று எண்ணம் வரவே வராது அந்த அளவிற்கு உங்கள் முகம் பிரகாசமாக இருக்கும்.