அரிசி ஊற வைக்காமல் மாவு அரைக்காமல் நினைத்த உடனே இட்லி செய்ய இந்த இன்ஸ்டன்ட் இட்லி மாவை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாமா

idli
- Advertisement -

இப்பொழுதெல்லாம் அனைவர் வீட்டிலும் காலை, மாலை உணவிற்காக ஃப்ரிட்ஜில் எப்பொழுதும் இட்லி மாவு தயாராக இருக்கும். அப்படி ஏதேனும் ஒரு சமயம் இட்லி மாவு தீர்ந்துவிட்டால் என்ன சமைப்பது என்ற குழப்பம் வந்துவிடும். இதுபோன்ற நேரத்தில் கோதுமை மாவை பிசைந்து சப்பாத்தி, பூரி செய்வதற்கு பதிலாக இந்த இன்ஸ்டன்ட் இட்லி மாவினை உடனே தயார் செய்தால் போதும். சுவையான பஞ்சு போன்று இட்லியை பத்தே நிமிடத்தில் செய்திடலாம். வாருங்கள் இந்த உடனடி இட்லி மாவை எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

fridge3

தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், தயிர் – அரை கப், பெரிய உருளைக்கிழங்கு – 1, பச்சை மிளகாய் – 3, சோடா மாவு – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து அதன் மேல் உள்ள தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் 3 பச்சை மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் சேகரித்து அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு

அதன்பின் ஒரு கிண்ணத்தில் ஒரு கப் ரவை எடுத்துக்கொண்டு அதனுடன் அரை கப் தயிர், அரை ஸ்பூன் சோடா மாவு, மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை இதனுடன் சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு அரை கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, 10 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

அதன்பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பின் மீது வைத்து விட்டு, இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி கொண்டு, தயார் செய்து வைத்துள்ள மாவினை ஒவ்வொரு கரண்டியாக எடுத்து இட்லி தட்டின் குழிக்குள் ஊற்றிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு 10 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

Idli

அதன் பிறகு இட்லி பாத்திரத்தை திறந்து இட்லி தட்டை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்து, அவை சிறிது ஆறியதும் ஒரு கத்தியை பயன்படுத்தி இட்லிகளை வெளியே எடுத்து வைக்க வேண்டும் .

பிறகு இட்லியுடன் தொட்டுக்கொள்ள தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை இவற்றை நன்றாக வதக்கி அதனுடன் சிறிதளவு புளி தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்தெடுத்து, தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து விட்டால் போதும் சுவையான தக்காளி சட்னி தயாராகிவிடும்.\

Idli

அதன்பின் உருளைக்கிழங்கு, பச்சைமிளகாய் மசாலா சேர்த்து செய்த பஞ்சு போன்ற மிருதுவான இட்லியுடன் இந்த தக்காளி சட்னியையும் சேர்த்து பரிமாறிக் கொடுத்தால் போதும். நாவில் எச்சில் ஊறும் சுவையுடன் வீட்டில் உள்ள அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.

- Advertisement -