வீட்டில் இந்த இரண்டு பொருட்கள் மட்டும் இருந்தால் போதும் உடனே சுவையான அடை தோசை செய்து சாப்பிடலாம்

adai
- Advertisement -

வீட்டில் ஒரு சில நேரங்களில் தோசை மாவு தீர்ந்து விடும். இதுபோன்ற நேரங்களில் சாப்பிட உடனே என்ன செய்ய வேண்டும் என்பது சற்று யோசனையாக இருக்கும். ஏனென்றால் காலை, மாலை என்று இருவேளைகளிலும் பலரும் சாதத்தை தவிர இட்லி, தோசை போன்ற உணவுகளை மட்டுமே அதிகமாக சாப்பிடுகின்றனர். எனவே தோசை மாவு இல்லாத நேரத்தில் வேறு வகை உணவுகளை சமைப்பதற்க்கு சற்று யோசிக்க தான் வேண்டும். ஆனால் வீட்டில் கோதுமை ரவை மற்றும் அரிசி மாவு இருந்தால் போதும் உடனே இந்த சுவையான அடை தோசையை செய்து விடலாம். கோதுமை ரவை இல்லை என்றாலும் உப்புமா செய்ய பயன்படுத்தும் ரவை இருந்தாலும் இந்த அடை தோசையை செய்ய முடியும். வாருங்கள் இந்த சுவையான அடை தோசையை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை ரவை – அரை கப், அரிசி மாவு – கால் கப், சீரகம் – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, வர மிளகாய் – 5, சின்ன வெங்காயம் – 5, பெரிய வெங்காயம் – 1, உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் அரைக்கப் கோதுமை ரவையை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கழுவி, தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் அரை ஸ்பூன் சீரகம், சிறிய துண்டு இஞ்சி, 5 வரமிளகாய் மற்றும் 5 சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.

பிறகு இவை அனைத்தையும் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் கழுவி வைத்துள்ள கோதுமை ரவையை சேர்த்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி இட்லிமாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் இதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொண்டு அதனுடன் கால் கப் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். மாவு கெட்டியான பதத்தில் இருந்தது என்றால் அதனுடன் தோசை ஊற்றும் அளவிற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து, நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதனை 10 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.

பின்னர் ஒரு வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அதன் பின் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு தோசைக்கல் வைத்து, தோசை ஊற்றி, அதன் மீது ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு தோசையை திருப்பிப் போட்டு நன்றாக வெந்ததும், அதனை வேறு தட்டிற்கு மாற்றி, இதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அல்லது வெங்காய சட்னி சேர்த்து கொடுத்து பாருங்கள். இதன் சுவைக்கு பத்து தோசை கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்.

- Advertisement -