வாழ்க்கையில் உங்களுக்கு பெரியதாக எந்த கஷ்டமும் வரக்கூடாது என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த நாளில் மட்டும் கோவிலுக்கு போக மறக்காதீங்க.

temple-prayer
- Advertisement -

பக்தர்கள் இந்த நாளில் மட்டும் கோவிலுக்கு சென்று இறைவனிடம் வேண்டுதல் வைத்தால், அந்த வேண்டுதலை கடவுள் உடனடியாக நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று கட்டளை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு சக்தி வாய்ந்த நாள் எந்த நாளாக இருக்கும் என்று உங்களுக்கும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா. நம்முடைய வாழ்வில் இருக்கும் துன்பங்கள் நீங்க வாழ்வில் படிப்படியான முன்னேற்றத்தைப் பெற இறைவழிபாட்டை எந்த நாளில் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பதிவை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஜென்ம நட்சத்திர இறை வழிபாடு:
ஒவ்வொருவருக்கும் அவர் பிறந்த நட்சத்திரம் என்று ஒன்று இருந்திருக்கும். பெரும்பாலும் இது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவரவருடைய ஜென்ம நட்சத்திரம் என்ன என்று முதலில் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஜென்ம நட்சத்திர நாள் என்பது வருடத்தில் ஒருமுறை வரும். அது நீங்கள் பிறந்த நாள். அது இல்லாமல் மாதம் தோறும் நீங்கள் பிறந்த நட்சத்திரம் ஒரு முறை வரும். அந்த நட்சத்திரத்தன்று நீங்கள் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்து வரங்களை கேட்டால் அந்த வரங்களை இறைவன் கேட்ட உடனே கொடுத்து விடுவார். இது நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கஷ்டங்கள் தீர மாதம் தோறும் உங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று நீங்கள் கோவிலுக்கு சென்று உங்கள் பெயர், கோத்திரம், நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தாலே வாழ்வில் வரும் பல துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். அடுத்தபடியாக வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் பிறந்த தேதியை வைத்து தான் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். ஆனால் அது தவறு.

நம்முடைய இந்து சாஸ்திரப்படி வருடம் தோறும் நீங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் அல்லவா. அந்த ஜென்ம நட்சத்திர அந்த நாளில் தான் பிறந்தநாள் கொண்டாட வேண்டும். அந்த பிறந்தநாள் கொண்டாட கூடிய ஜென்ம நட்சத்திர நாளில் உங்களுடைய வீட்டில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் அல்லது வேறு ஏதாவது ஹோமம் செய்தால் ரொம்ப ரொம்ப நல்லதுங்க.

- Advertisement -

அது மட்டும் அல்லாமல் குழந்தைகளை முதன்முதலாக பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, மேல் படிப்புக்கு படிக்க அனுப்புவது, அல்லது வேலையில் சேருவது, புதுமனை புகு விழா நடத்துவது, போன்ற நல்ல காரியங்களை எல்லாம் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தில் செய்வது ரொம்ப ரொம்ப சிறப்பான பலனை தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஏதாவது சொத்து பத்து வாங்குகிறீர்கள். அசையும் சொத்து அசையா சொத்து, வண்டி வாகனம் வீடு நிலம் இப்படி எது வாங்கினாலும் அந்த ரெஜிஸ்ட்ரேஷனை உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் அன்று வைத்துக் கொள்வது ரொம்ப ரொம்ப சிறப்பு.

இதையும் படிக்கலாமே: பணத்தை கொடுக்கும் போது இந்த ஒரு சூட்சம வார்த்தையை மட்டும் தவறாமல் சொல்லிப் பாருங்கள். உங்கள் கையை விட்டு செல்லும் ஒவ்வொரு ரூபாயும் பல மடங்காக பெருகி உங்களிடமே திரும்ப வரும்.

இந்த ஜென்ம நட்சத்திரத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது. ஜென்ம நட்சத்திரத்தன்று அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது. நம்முடைய ஜென்ம நட்சத்திரத்தன்று அடுத்தவர்களிடம் கைநீட்டி கடன் வாங்கக் கூடாது. நீண்ட தூர பயணம் செய்யக்கூடாது. பெரிய அளவில் ஆப்ரேஷன், மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்யக்கூடாது. மேல் சொன்ன விஷயங்கள் அனைத்தும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவை நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -