விளக்கிற்குள் இதெல்லாம் போட்டு ஏற்றினால் நல்லதா? தீபம் ஏற்றும் பொழுது இதை செய்தால் கடன் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருகுமாம் தெரியுமா?

vilakku-kalkandu
- Advertisement -

எப்பொழுதும் விளக்கு ஏற்றும் பொழுது நாம் சில விஷயங்களை கடைப்பிடிப்பது உண்டு. குறிப்பாக விளக்கு ஏற்றும் பொழுது விளக்கை சுத்தம் செய்து விட்டு, புதிதாக எண்ணெய் ஊற்றி ஏற்ற வேண்டும். இப்படி நிறைய சாஸ்திரங்கள் உண்டு. அது போல விளக்கிற்குள் சிலர் நாணயங்கள் போடுவது, கற்கண்டு போடுவது போன்ற விஷயங்களையும் செய்வது உண்டு. இதெல்லாம் நல்லதா? கடன் நீங்கி லட்சுமி கடாட்சம் பெருக தீபம் ஏற்றும் பொழுது செய்ய வேண்டியது என்ன? என்பது போன்ற ஆன்மீக தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

எப்பொழுதும் ஒரு முறை ஏற்றிய தீபத்தில் மறுமுறை மீதம் இருக்கும் எண்ணெயிலேயே புதிதாக எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. தீபம் ஏற்றிய எண்ணெயை சேகரித்து வர வேண்டும். இந்த எண்ணெயை அகல் விளக்கில் ஊற்றி தனியாக ஏற்றிக் கொள்ளலாம். ஆனால் அதே எண்ணெயை மீண்டும் காமாட்சி அம்மன் விளக்கு அல்லது குத்து விளக்கு போன்றவற்றில் ஊற்றி ஏற்றுவது முறையல்ல.

- Advertisement -

ஒரு முறை எண்ணெய் முழுவதுமாக தீர்ந்த பின்பு புதிய எண்ணெயை ஊற்றி ஏற்ற வேண்டும். எண்ணெய் ஊற்றிய பிறகு திரி போட வேண்டும். முதலிலேயே திரியை போட்டு வைக்க கூடாது. அது போல தீபம் ஏற்றுபவர்கள் தீபத்தின் அடியில் அல்லது தீபத்தினுள் கூட ஐந்து ரூபாய் நாணயங்களை போடுவது உண்டு. இது நல்ல விஷயம் தான், இதை செய்யக்கூடாது என்று கூறுவதற்கு ஒன்றும் அல்ல! நாணயம் மகாலட்சுமியின் ஸ்ரூபமாக கருதப்படுகிறது எனவே நாணயம் போட்டு தீபம் ஏற்றினால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால் தான் நாணயத்தை போட்டு தீபத்தை ஏற்றுகிறோம்.

மேலும் கற்கண்டு இனிப்பு சுவையை கொடுக்கக் கூடியது. இது மகாலட்சுமிக்கு ரொம்பவே பிடித்தமான ஒரு பொருளும் ஆகும். குறிப்பாக சாதாரண கற்கண்டையை விட டைமண்ட் கல்கண்டு ஆன்மீகத்தில் ரொம்பவே விசேஷமாக கருதப்படுகிறது எனவே இதை போட்டு தீபம் ஏற்றுவதால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, மகாலட்சுமியின் கடாக்ஷம் நமக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் இருந்து வருகிறது.

- Advertisement -

கற்கண்டு போடும் பொழுது உடன் இரண்டு துளசி இலைகளை போட்டு வைத்தால் கடன் தொல்லைகள் முற்றிலுமாக நீங்கும் என்கிற சாஸ்திரங்களும் உண்டு. துளசி இலையில் ஸ்ரீமன் நாராயணன் வாசம் செய்கிறார். எனவே கடன் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமையிலும் தீபம் ஏற்றி அந்த தீபத்தினுள் புதிதாக எண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி இட்டு, அதனுள் கற்கண்டுகள் மற்றும் துளசி இலைகளை போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இவ்வாறு மனதார ஒவ்வொரு சனி மற்றும் வெள்ளிக் கிழமையில் செய்து வர விரைவிலேயே கடன் அடைவதாக நம்பிக்கை உண்டு. அது மட்டும் அல்லாமல் மகாலட்சுமியின் அருளும் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். வீட்டில் பண பிரச்சனை, பண ரீதியான கஷ்டங்கள் இருந்தாலும் அவை நீங்கும். வர வேண்டிய இடங்களில் இருந்து பணவரவு வந்து சேரும். இந்த எளிய விளக்கு ஏற்றும் முறையை கடைபிடித்து வந்தாலே நமக்கு நிறையவே நன்மைகள் உண்டு என்கிறது ஆன்மீகம்.

- Advertisement -