நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் வைகாசி அமாவாசை! இந்த 1 பொருளை மட்டும் வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டால் போதும். கழுத்தை நெரிக்கும் கடனை கூட கஷ்டப்படாமல் அடைத்து விடலாம்.

amavasai
- Advertisement -

நாளை வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினம். இந்த அமாவாசை தினத்தில் என்ன சிறப்பு தெரியுமா. வெள்ளிக்கிழமையும் அமாவாசையும் சேர்ந்து வந்திருக்கின்றது. ஆகவே இந்த அமாவாசை தினத்தில் நம்முடைய பண கஷ்டங்கள் எல்லாம் தீருவதற்கு, நம்முடைய வீட்டில் என்ன வழிபாட்டை செய்ய வேண்டும் என்பதை பற்றியும், நாளைய தினம் எந்த ஒரு பொருளை வாங்கி பூஜையறையில் வைத்து மகாலட்சுமியை வழிபாடு செய்தால் கடன் சுமை குறையும் என்பதை பற்றியும் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கடன் தீர வைகாசி அமாவாசை அன்று வாங்க வேண்டிய பொருள்:
வழக்கம்போல நாளை மதியத்திற்குள், அதாவது மதியம் 1 மணிக்குள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண வழிபாடு முறைகளை எல்லாம் நிறைவு செய்துவிட்டு, காக்கைக்கு சாதத்தை வைத்து, நீங்களும் சாப்பாடு சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

நாளைய தினம் மாலை மகாலட்சுமிக்கும் குல தெய்வத்திற்கும் வழிபாடு செய்ய வேண்டிய நேரம், என்ன தெரியுமா. மாலை 6 மணிக்கு மேலாக இந்த வழிபாட்டை நீங்கள் செய்ய தொடங்கலாம். நாளைய தினம் கட்டாயமாக நீங்கள் வாங்க வேண்டிய ஒரு பொருள் கல்லுப்பு.

மகாலட்சுமிக்கு உரிய இந்த உப்பை அமாவாசை காலையிலேயே வாங்கினாலும் தவறு கிடையாது. அப்படி வைத்த நாளை மதியம் 1.00 மணிக்கு மேல் அமாவாசை விரதத்தை முடித்துவிட்டு கூட கடைக்கு சென்று காசு கொடுத்து கல்லுப்பு ஒரு பாக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள். மாலை மகாலட்சுமியை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தையும் மனதார நினைத்து ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த கல்லுப்பை கொட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுக்கு எவ்வளவு கடன் பிரச்சனை இருக்கிறதோ, அந்தத் தொகையை, அந்த காகிதத்தில் எழுத வேண்டும். பிறகு அந்த கடன் பிரச்சனை தீர வேண்டும் என்றும் எழுத வேண்டும். உதாரணத்திற்கு ‘ஒரு லட்ச ரூபாய் கடனை சீக்கிரம் திருப்பி அடைக்க வேண்டும்’ என்று எழுதி மகாலட்சுமி பாதங்களில் வைத்த உப்பிலிருந்து சிறிதளவு உப்பை மட்டும் எடுத்து இந்த காகிதத்தில் வைத்து பொட்டலமாக மடித்து, அந்தக் கிண்ணத்தில் இருக்கும் உப்புக்கு மேலேயே வைத்து விடுங்கள்.

பிறகு சிறிது நேரம் பூஜை அறையில் அமர்ந்து, கடன் சுமை குறைய வேண்டும் என்று குலதெய்வத்தையும் மகாலட்சுமியையும் மீண்டும் பிராத்தனை செய்து கொள்ளுங்கள். வேண்டுதலில்தான் உங்களுக்கு பலன் கிடைக்கப் போகின்றது. ஆகவே வேண்டுதலை மன உறுதியோடு வைக்க வேண்டும். இறுதியாக கற்பூர ஆராதனை காண்பித்து இந்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை முடிந்த பின்பு அமாவாசை இரவு, அதாவது நாளை இரவு 9 மணிக்கு மேல் ஒரு சிறிய டம்ளரில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பேப்பரில் மடித்து வைத்திருக்கும் உப்பை மட்டும் எடுத்து இந்த தண்ணீரில் போட்டு, உங்கள் கையால் கரைக்க வேண்டும். இதே போல என்னுடைய கடன் சுமையும் கரைந்து போக வேண்டும் என்று மகாலட்சுமி தாயை நினைத்துக் கொண்டு, உப்பை தண்ணீரில் கரையுங்கள். அவ்வளவுதான். பரிகாரம் முடிந்தது.

இதையும் படிக்கலாமே: நாளை வைகாசி அமாவாசை! இந்த 3 தானங்களை உங்கள் கையால் செய்து விட்டால் போதும். ஏழேழு ஜென்ம பாவங்கள் தீரும்.

இப்போது பூஜையில் ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு வைத்திருந்தோம் அல்லவா, அதை எடுத்து நீங்கள் உப்பு ஜாடியில் கொட்டி தினமும் சமைக்கும் போது சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த தவறும் கிடையாது. நாளைய தினம் இந்த பரிகாரத்தை மட்டும் நீங்கள் நம்பிக்கையோடு செய்துவிட்டால், நிச்சயம் உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறைய தொடங்கும். மகாலட்சுமி தேவி உங்கள் வீட்டிற்குள் வருகை தந்து எல்லா பண பிரச்சனையையும் தீர்த்து வைப்பாள் என்பது நம்பிக்கை.

- Advertisement -