லட்சுமி கடாட்சத்தை தரும் தங்கத்தையும், வெள்ளியையும் கூட நீங்கள் இப்படி பயன்படுத்தினால் உங்களின் கடன் தீரவே தீராது. அது எப்படியென்று தெரிந்து கொள்ளுவோம்.

- Advertisement -

கடன் என்பது இப்போது வெகு சாதாரணமாக எல்லோரும் வாங்கக் கூடிய ஒன்றாகி விட்டது.ஒரு காலத்தில் இல்லாதவர்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்த கடன் வாங்கி வாழ்க்கையை நடத்தினார்கள் என்றால், இன்றோ ஆடம்பரத்திற்காக கடன் வாங்கி வாழ்க்கை நடத்தும் சூழ்நிலை பெருகிவிட்டது. முதலில் எதற்க்கெடுத்தாலும் கடன் வாங்கும் இந்த மனநிலையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து வாழ்ந்து அதில் நிம்மதி அடைய வேண்டுமே தவிர பிறர் வாழ்கிறார்களே என்று நினைத்து அவர்களைப் போல வாழ ஆசைப்பட்டு கடன் வாங்கி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. இப்போது நாம் வாங்கிய கடன் குறையாமல் இருப்பதற்கு நம் வீட்டில் உபயோகி பயன்படுத்தும் நகைகள் கூட காரணம் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

இதை சொன்னவுடன் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் தங்கமும், வெள்ளியும் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள் தானே. இது வீட்டில் எப்படி நமக்கு கடனை ஏற்படுத்தும் என்று ஒரு கணம் யோசிக்க தோன்றுகிறது அல்லவா.

- Advertisement -

எந் ஒரு விஷயத்திலும்நன்மை என்று ஒன்று இருந்தால் தீமை என்ற ஒன்று இருக்கும் தானே. அதே போல தான் எந்த அளவிற்கு இந்த பொருட்கள் லட்சுமி கடாட்சத்தை கொடுக்கிறதோ அதே அளவிற்கு இந்த இரண்டு பொருட்களும் திருஷ்டியையும் ஈர்க்கக்கூடிய தன்மை அதிகம். அந்த திருஷ்டியானது நாம் கழிக்கவில்லை என்றால் கடன் சுமை பெருமளவில் கூடுமே அன்றி குறையாது.

முதலில் வெள்ளி பொருட்கள் வீட்டில் கறுக்கவே கூடாது. வீட்டில் குண்டுமணி அளவிற்கு வெள்ளி இருந்தால் கூட அந்த வெள்ளியையும் சுத்தமாக தேய்த்து வைத்திருக்க வேண்டும். அது விளக்கேற்றும் வெள்ளியாக இருந்தாலும் சரி இல்லை நீங்கள் பீரோவில் பூட்டி வைத்திருக்கும் வெள்ளி பொருளாக இருந்தாலும் சரி, வெள்ளியை பொறுத்த வரையில் வெள்ளி கறுத்தால் கடன் பெருகும். எனவே வெள்ளியை கறுக்க விடாமல் அடிக்கடி சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.வெள்ளி கறுத்தால் குடுபத்திற்கும் ஆகாது.

- Advertisement -

அதே போல் தங்கம் நீங்கள் அணிந்து கொண்டிருக்கும் நகையாக இருந்தாலும் சரி, அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் நகையாக இருந்தாலும் சரி, நீங்கள் ஒரு முறை அணிந்து விட்டு அதை அப்படியே கழற்றி வைத்தால் அந்த நகைகளுக்கும் திருஷ்டியை இருக்கும் தன்மை அதிகமாக இருக்கும். எனவே இதையும் மாதத்திற்கு ஒரு முறை ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த தங்க நகைகளை உப்பு நீரில் அலசி அணிந்து கொள்ளலாம். அல்லது நீங்கள் மறுபடியும் எடுத்து உங்கள் பீரோவில் வைத்து விடலாம். ஆனால் மாதம் ஒரு முறை கட்டாயமாக உப்பு கலந்த நீர் தங்க நகைகளை கழுவி வைக்க வேண்டும். இதன் மூலம் திருஷ்டி கழிந்து கடன் குறைவதோடு லட்சுமி கடாட்சம் அதிகரித்து தங்கம் சேரும் வாய்ப்பு பெருமளவு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: சந்திர கிரகணம் 2022 எப்போது, நேரம்

இந்த இரண்டு பொருட்களையும் சரியான முறையில் பராமரித்து வந்தால் நம் கடன் சுமை பெருமளவில் குறைவதோடு லட்சுமி கடாட்சம் அதிகமாக கிடைத்து, நல்ல ஒரு சுபிட்சமான வாழ்க்கை கிடைக்க இவைகள் உதவி செய்யும்.

- Advertisement -