கடன் தொல்லை தீர வழிபாடு

kadan theera
- Advertisement -

வேண்டுமென்றே பிறரிடம் இருந்து யாரும் கடன் வாங்குவது கிடையாது. தங்களால் இயலாத பட்சத்தில் அவசியமான தேவைக்காக தான் பலரும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி வாங்கப்பட்ட கடனால் பல அவமானங்களையும், அசிங்கங்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கடன் சுமையை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பண பற்றாக்குறை ஏற்படும் பொழுது தான் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. திரும்பவும் அந்த கடனை நாம் திருப்பித் தருவதற்கு அந்த பண பற்றாக்குறை என்பது நீங்கிவிட்டு பண வரவு என்பது அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்காத பட்சத்தில் மேற்கொண்டு மேற்கொண்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இப்படி பண வருமானத்தை அதிகரிக்க கூடிய வழிப்பாடாகவும், அதே சமயத்தில் கடனை தீர்க்கக் கூடிய வழிபாடாகவும் தான் இந்த வழிபாடு திகழ்கிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இருக்கக்கூடிய சுக்கிர ஹோரையில்தான் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை எப்பொழுதும் போல் வீட்டில் பூஜை செய்து முடித்து விட வேண்டும். பிறகு பூஜை அறையில் இருக்கக்கூடிய மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பாக 5 வெற்றிலை, ஐந்து கொட்டைப்பாக்கு, ஐந்து ரூபாய் இதை வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமியின் காயத்ரி மந்திரத்தை கூற வேண்டும்.

“ஓம் மகா லக்ஷ்மீச வித்மஹே
விஷ்ணு பத்னீச தீமஹி
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத்”

இந்த மந்திரத்தை குறைந்தது 27 முறையில் இருந்து அதிகபட்சம் 108 முறை வரை கூறலாம். அவ்வாறு கூறும் பொழுது வாசனை நிறைந்த மலர்களை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரிடம் கடன் விரைவில் தீர வேண்டும் அதற்குரிய பணவரவு ஏற்பட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இயன்றவர்கள் மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்கலாம். இயலாத பட்சத்தில் கற்கண்டையாவது வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த பூஜையை கற்பூர தீப தூப ஆராதனை காட்டி நிறைவு செய்து விட வேண்டும். பிறகு நாம் வைத்திருக்கும் இந்த வெற்றிலை பார்க்க ஐந்து ரூபாய் நாணயம் இவை மூன்றையும் எடுத்து ஒரு உண்டியலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த முறைப்படி தொடர்ந்து 14 வாரங்கள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் பூஜையை முடித்த பிறகு அந்த வெற்றிலை பாக்கு மற்றும் நாணயத்தை அந்த உண்டியலில் சேர்த்து வைக்க வேண்டும்.

14 வாரங்கள் முடிந்த பிறகு உண்டியலில் இருக்கக்கூடிய வெற்றிலை பாக்கை ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும். ஓடுகின்ற நீதி இல்லாதவர்கள் கால் படாத இடத்திலோ அல்லது செடியிலோ போட்டு விடலாம். ஐந்து ரூபாயை ஏதாவது ஒரு சுப செலவிற்காக செலவு செய்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பண பிரச்சனையை தீர்க்கும் வலம்புரி சங்கு பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் நாமும் நம் வீட்டில் செய்து கடன் பிரச்சினையில் இருந்து வெளியில் வரலாம்.

- Advertisement -