கடனில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறீர்களா? இந்த வழிமுறைகளை பின்பற்றி கடனை அடைக்க முயற்சி செய்தால் எப்பேற்பட்ட கடனாக இருந்தாலும் அது காணாமல் போய்விடும்.

kadan theera
- Advertisement -

கோடீஸ்வர பட்டியலில் இருப்பவர்கள் முதல் தெருக்கோடியில் இருக்கும் அன்றாடம் காட்சி வரை அனைவருக்கும் கடன் என்ற ஒன்று இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறினார்கள். ஆனால் அதையே இந்த காலத்தில் கடனற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறும் அளவிற்கு கடன் பெருகிப் போய் இருக்கிறது. வாங்கிய கடனை திருப்பி அடைப்பதற்காக பலரும் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எந்த வழிமுறைகளை பின்பற்றி தங்கள் கடனை அடைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நவகிரகங்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவிற்கு தான் நாம் வாங்கிய கடனை திரும்ப அடைப்பதற்கும் நவகிரகங்களின் அருள் நமக்கு வேண்டும். அவ்வாறு நவகிரகங்களின் அருள் இல்லாவிட்டால் அதற்குரிய வழிபாட்டு முறைகளையும் பரிகாரங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும். இந்த பதிவில் நாம் கடனை தீர்ப்பதற்காக எந்த பரிகாரத்தையும் கூறவில்லை. அதற்கு பதிலாக எந்த நாளில் கடனை திருப்பி செலுத்த முயற்சி செய்ய வேண்டும் என்றும் மேலும் எந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்றும் தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

பொதுவாக நாம் கடனை அடைக்க வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் கடனை அடைத்தால் விரைவில் நம் கடன் அடையும் என்பது அனைவருக்கும் தெரியும். அதையும் தாண்டி இன்னும் சில நாட்களும் இருக்கின்றன. ராகு கேதுவின் ஆதிக்கத்தால் தான் ஒருவர் கடனை வாங்குகிறார் என்பதால் சூரிய மற்றும் சந்திர கிரகணம் முடியும் நேரத்தில் அசலை திருப்பித் தந்தால் கடன் விரைவிலேயே அடையும். மேலும் சனி பிரதோஷ நாளன்று பிரதோஷ வேளையில் கடனை திருப்பிக் கொடுத்தாலும் விரைவிலேயே அடைந்து விடும்.

செவ்வாய்க்கிழமையும் நவமி திதியும் சேர்ந்து வரும் நாளில் கடனை திருப்பித் தரலாம். அதேபோல் சதுர்த்தசியும் சனிக்கிழமையும் மற்றும் சதுர்த்தசியும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களிலும் கடன் தொகையை திருப்பி தரலாம்.

- Advertisement -

கடனை திருப்பி அடைப்பதற்கு நாம் தோரண கணபதியை வணங்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியும். அவரின் புகைப்படத்தை வீட்டு வாசலின் முன்பாக மாட்டுவதன் மூலம் கடன் நம் வீட்டிற்குள் வருவது தவிர்க்கப்படுகிறது. அடுத்ததாக கடனை திருப்பி அடைப்பதற்கு நாம் நரசிம்மரை வழிபட வேண்டும் என்றாலும் அவரை நாம் அவிட்ட நட்சத்திரத்தன்று வழிபட்டால் அவர் நம்முடைய கடனை விரைவில் தீர்த்து வைப்பார்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெற இந்த ஒரு விரதத்தை மாதத்தில் ஒரு நாள் மட்டும் மேற்கொண்டாலே போதும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் நடந்திடும்.

கடன் சுமையால் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் இந்த நாட்களை நினைவில் வைத்துக் கொண்டு அசல் தொகையில் சிறிதேனும் திருப்பித் தர முயற்சி செய்தால் விரைவிலேயே அவர்களுடைய கடன் தீர்ந்து மன நிம்மதியுடன் வாழும் வாய்ப்பை நவகிரகங்களும், இறைவனும் அருள் புரிவார்கள்.

- Advertisement -