நினைத்த காரியம் நினைத்தபடி நடைபெற இந்த ஒரு விரதத்தை மாதத்தில் ஒரு நாள் மட்டும் மேற்கொண்டாலே போதும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் நடந்திடும்.

mouna viratha valipadu
- Advertisement -

வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடித்து அந்தப் பிரச்சினைகளை சரி செய்வதற்காக தான் பலரும் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். நாம் எடுக்கும் முயற்சி எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி அடைந்தால் நம்முடைய பிரச்சனைகள் எளிதில் சரியாகிவிடும். அப்படி எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றி அடைவதற்கு எந்த நாளில் எப்படி விரதம் இருந்து வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கிழமைக்கு ஏற்றவாறு நாம் ஒவ்வொரு தெய்வங்களை வழிபடுவோம். நட்சத்திரத்திற்கு ஏற்றவாறும் நாம் வழிபடுவோம். அதேபோல் திதியை வைத்தும் நாம் வழிபடுவோம். அவ்வாறு நாம் வழிபடும் குறிப்பிட்ட திதிகளாக அஷ்டமி, சதுர்த்தி, பிரதமை போன்ற திதிகள் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அஷ்டமியன்று காலபைரவரையும், சதுர்த்தியன்று விநாயகரையும், பிரதமையன்று சிவபெருமானையும் நாம் வழிபடுவோம். இதில் அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகளிலும் வழிபாடுகளை மேற்கொள்கிறோம். இந்த வரிசையில் மற்றொரு திதியும் இருக்கிறது. அந்த திதி அன்று நாம் மௌன விரதம் இருந்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். அந்த திதி தான் தசமி திதி.

தசமி என்றதும் நம் நினைவிற்கு வருவது விஜயதசமி தான். விஜயதசமி அன்று நாம் செய்யக்கூடிய புது முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். புதிதாக தொழில் தொடங்குவதோ அல்லது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது என்று விஜயதசமி அன்று நாம் சில செயல்களை செய்வோம். இது அன்றைய தினத்திற்கு மட்டும் பொருந்தக்கூடிய ஒன்று அல்ல.

- Advertisement -

மாத மாதம் வரக்கூடிய வளர்பிறை தசமி திதி அன்றும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் கண்டிப்பான முறையில் வெற்றியடையும் என்று கூறப்படுகிறது. அதையும் தாண்டி அன்றைய தினம் மாலை 6:15 முதல் 8:15 வரை நாம் எந்த காரியத்தை நினைத்து மௌன விரதம் இருக்கிறோமோ அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகிவிடும் என்றும் கூறப்படுகிறது.

மௌன விரதம் இருக்கும் முறை:
அன்றைய தினம் காலையிலேயே சுத்தமாக குளித்து வீட்டில் விளக்கேற்றி எப்போதும் வழிபாடு செய்வது போல் செய்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். பகலில் உறங்க கூடாது. மேலும் அன்று மாலை தான் நாம் மௌன விரதம் இருக்கப் போகிறோம் என்பதால் மாலை விளக்கேற்றுவதற்கு முன்பாகவும் குளிக்க வேண்டும்.

- Advertisement -

இந்த விரதத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாக அகலில் ஒரு தீபம் ஏற்றி வைத்து குலதெய்வத்தை மனதார வழிபட்டு நாம் எந்த காரியம் நடைபெற வேண்டும் என்று நினைக்கின்றோமோ அந்த காரியத்தை கூறி சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையிலேயே மௌன விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பிக்கும் பொழுது வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்திருக்க வேண்டும். மேலும் பூஜை அறையை தவிர்த்து வரவேற்புறையிலும் அமர்த்து இருக்கலாம் வேறு எந்த இடத்திலும் அமர்ந்து இந்த விரதத்தை மேற்கொள்ளக்கூடாது.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் பொழுது நாம் பக்தி புத்தகங்களை படித்த வண்ணம் இருப்பது காலச் சிறந்தது. வீட்டில் தேவையற்ற சத்தங்கள் இருப்பதை தவிர்க்க வேண்டும். மனம் அமைதியாக இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அமர்ந்த இடத்தில் இருந்து எழுந்து வேறு எங்கும் செல்லக்கூடாது. வேறு எதையும் செய்யவும் கூடாது. விரதம் முடியும் நேரம் வரும்வரை நாம் ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் எரிந்து கொண்டு இருக்க வேண்டும். விரதம் முடிக்கும் பொழுது ஒரு கற்பூர தீபாரதனை காட்டி விரதத்தை முடித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பர்ஸில் வைத்த பணம் எப்படி தான் காலியாகிறது என்றே தெரியவில்லையா? இந்த ஒரு பொருளை மட்டும் பர்ஸில் வைத்து பாருங்கள். தேவையற்ற வீண் விரயங்களை தவிர்த்து, பர்ஸ் நிறைய பணம் நிறைந்திருக்கும்.

மிகவும் எளிமையான இந்த மௌன விரதத்தை தசமி திதி என்று நாம் மேற்கொண்டால் எந்த காரியத்தை நினைத்து மேற்கொள்கிறோமோ அந்த காரியம் வெற்றி அடையும்.

- Advertisement -