இந்த மரத்திடம் உங்கள் கடன் பிரச்சினையை இப்படி சொல்லித்தான் பாருங்களேன்! 11 நாட்களில், தீர்க்கவே முடியாத கடன் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.

shivan

நமக்கு ஏதோ ஒரு போதாத காலம் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த கடன் வட்டி போட்டு, குட்டி போட்டு, பல மடங்கு பெருகி நிற்கிறது. அந்த கடனை அடைக்க முடியாமல் தவித்து வருபவர்களுக்கு செலவே இல்லாமல் ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய வேண்டுதல்களை இந்த பூமியிலிருந்து, கடவுளுக்கு கொண்டுபோய் சேர்க்கக் கூடிய சக்தி இயற்கையாகவே சில பொருட்களுக்கு உண்டு. அந்த வரிசையில் இந்த பூமியில் இருந்து நேரடியாக பிரபஞ்சத்தில் தொடர்பு வைத்திருக்கும் பொருட்களின் பட்டியலில் விருட்சங்களுக்கு முதலிடம் உண்டு. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் கூட கடன் பிரச்சினைக்கு விடிவு காலம் பிறக்க வில்லை! மரத்திடம் பிரச்சனையை சொல்லி, கடன் பிரச்சனை தீர்ந்துவிடுமா? நிச்சயம் தீரும். அந்த சூட்சும ரகசியத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tree

பொதுவாகவே இந்த மரங்களுக்கு நாம் சொல்வதை கேட்கக்கூடிய சக்தி இருக்கிறது என்று சொல்லுவார்கள். அதிலும் குறிப்பாக ஸ்தல விருட்சங்களிடம் நம்முடைய வேண்டுதலை வைத்தால், அது உடனே பலிக்கும். நாம் வைக்கக்கூடிய வேண்டுதலை ஸ்தலவிருட்சங்கள் தங்களுடைய செவிகளில் வாங்கிக் கொண்டு, அந்த வேண்டுதலை இந்த பிரபஞ்சத்தில், இறைவனிடம் நேரடியாக கொண்டு போய் சேர்க்கும் என்று சொல்கிறது விருட்ச சாஸ்திரம்.

ஆக நீங்கள் தினமும் பழமையான கோவில்களுக்கு சென்று, அந்தக் கோவிலின் ஸ்தல விருட்சத்தின் அடியில் அமர்ந்து மனதார தியானம் செய்ய வேண்டும். உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று, குறிப்பாக நீங்கள் யாருக்கு கடன் தொகையை கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் பெயரை உச்சரிக்க வேண்டும். அந்த நபருக்கு எவ்வளவு கடன் தொகையைக் கொடுக்க வேண்டுமோ அந்த கடன் தொகையை உச்சரித்து மனதிற்குள்ளேயே தியானம் செய்ய வேண்டும்.

vilva-maram

கடனை திருப்பித்தருவதற்கான வழியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு காட்ட வேண்டும் என்று வேண்டுதல் வையுங்கள். குறிப்பாக, சிவன் கோவில்களில் இருக்கும் வில்வ மரத்தின் அடியில் அமர்ந்து 11 நாட்கள் இந்த முறைப்படி தியானம் செய்தால் கடனை தீர்ப்பதற்கு நல்ல வழிகள் கிடைக்கும். சிவன் கோவில்கள் வீட்டின் அருகில் இல்லை எனும் பட்சத்தில், உங்கள் வீட்டின் அருகில் எந்த பழைய கோவில் இருந்தாலும் அந்த கோவிலில் எந்த ஸ்தல விருட்சம் இருந்தாலும், இந்த தியானத்தை அந்த மரத்தினடியில் மேற்கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. இது ஒரு வழி.

- Advertisement -

அடுத்தபடியாக உங்கள் வீட்டு பூஜையறையில் அமர்ந்து ஒரு தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளை நிற பேப்பரில் நீங்கள் யாருக்கு கடன் கொடுக்க வேண்டுமோ அந்த நபரின் பெயர், எவ்வளவு தொகையை கொடுக்க வேண்டுமோ அந்த தொகையை எழுதி விடுங்கள். அந்த பேப்பருக்கு நடுவே ஒரு ருத்ராட்சத்தை வைத்து மடித்து எடுத்துக்கொள்ளுங்கள். எத்தனை முக ருத்ராட்சமாக இருந்தாலும் பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ruthratcham

இந்த காகிதத்தை ருத்ராட்ச தோடு சேர்த்து சிவன் கோவிலில் வில்வ மரத்தின் அடியில் புதைத்து வைத்து விட வேண்டும். அப்படி இல்லை என்றால் ஒரு நூலை போட்டுக் காட்டி அந்த மரத்தில் கொஞ்சம் உயரமான பகுதியில் கட்ட முடிந்தால், அந்த காகிதத்தை ருத்ராட்சத்தோடு கட்டி விட்டு வரலாம். சிவன் கோவில் வீட்டின் அருகில் இல்லை என்பவர்கள் உங்கள் வீட்டினருகில் எந்த பழமையான கோவில்கள் இருக்கின்றதோ அந்த கோவிலில் இருக்கும் ஸ்தல விருட்சத்தின், கீழ் உள்ள மண் பகுதியில் இந்த காகிதத்தை புதைத்து வைக்கலாம். இப்படி செய்தாலும் உங்களுடைய கடன் பிரச்சனை சுலபமாக தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

meditation

இப்படியாகத் தொடர்ந்து 11 நாட்கள் உங்களுடைய பிரச்சனையை அந்தத் ஸ்தல விருட்சத்திடம் சொல்லி வாருங்கள். 11 நாட்களில், ஒரு நாள் இந்த காகிதத்தை அந்த மரத்தின் அடியில் புதைத்து வைத்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் நம்பவே முடியாத ஏதாவது ஒரு அதிசயம் நிச்சயம் நடக்கும். அந்த அதிசயத்தின் மூலம் நீண்ட நாட்களாக கழுத்தை நெரித்து வந்த கடன் பிரச்சினை நிச்சயம் தீரும்.

kadan

உங்களுடைய கடன் சுமை மிகவும் பெரியதாக இருந்தால், 11 நாட்களில் இந்த பரிகாரத்தை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து 48 நாட்கள் செய்வது நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால், நம்பிக்கையோடு செய்தால் மட்டுமே முழுமையான பலனைப் பெறமுடியும். நம்பிக்கை இல்லாமல் இப்படி செய்தால் கடன் பிரச்சினை தீர்ந்து விடுமா? என்ற ஒரு துளி சந்தேகம் உங்கள் மனதில் இருந்தாலும் பரிகாரம் பலன் தராது என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.