கடன் தீர்க்கும் அருகம்புல்

arugampul vinayagar
- Advertisement -

கடன் பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற வாசகம் நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். யார் ஒருவர் வாழ்வில் கடன் என்ற ஒன்று இருக்கிறதோ? அவர்கள் வாழ்வில் நிம்மதி என்பதே இருக்காது என்று தான் கூற வேண்டும். கடன் என்றதும் நம் நினைவிற்கு பணம் மட்டும்தான் ஞாபகம் வரும் அல்லவா? அது மட்டும் கடனாகாது. அதையும் தாண்டி பித்ருகளுக்கு நாம் முறையான பரிகாரங்கள் செய்யவில்லை என்றாலும் அது கடனாகவே கருதப்படுகிறது. தெய்வத்திடம் வைக்கும் நேர்த்திக்கடன், நன்றி கடன் என்று கடன்கள் பல வகைகளில் கூறப்படுகிறது. எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் அந்த கடனை தீர்ப்பதற்கு விநாயகப் பெருமானை அருகம்புல்லை வைத்து எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

விநாயகப் பெருமான் 54 அவதாரங்களை எடுத்து இஇருக்கிறார். ஒவ்வொரு அவதாரத்திலும் ஒவ்வொரு வகையான உருவ அமைப்பிலும் ஒவ்வொரு வகையான பெயர்களிலும் அருள்புரிகிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானின் 27வது அவதாரம் தான் ருண விமோசன கணபதி. ருணம் என்றால் கடன், விமோசனம் என்றால் விடை பெறுவது, நம்முடைய கடனிலிருந்து விடை பெறச் செய்யக்கூடிய கணபதி என்பதுதான் பொருள். அப்படிப்பட்ட கணபதியை எப்படி வழிபடுவது?

- Advertisement -

பொதுவாக இந்த ருண விமோசன கணபதி என்பவர் அனைத்து ஆலயங்களிலும் இருக்க மாட்டார். இந்த கணபதியிடம் சென்று தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. நம் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகரை வழிபடலாம் அல்லது அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்றும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை நல்ல நாளாக பார்த்து ஆரம்பித்துக் கொள்ளுங்கள். ஆரம்பிக்கும் நாள் சதுர்த்தியாக இருந்தால் மிகவும் விஷேசமாக இருக்கும்.

எந்த நாளில் இந்த வழிபாட்டை நாம் தொடங்குகிறோமோ அதற்கு முந்தைய நாள் இரவு தயிரில் 16 அருகம்புல்லை போட்டு ஊற வைக்க வேண்டும். அருகம்புல்லின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். குறைந்தது மூன்று இலைகளாவது இருக்க வேண்டும். அப்படி பார்த்து தான் பறிக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் விளக்கேற்றிக் கொள்ளுங்கள். தயிரில் ஊற வைத்திருந்த அருகம்புல்லை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு காய்ச்சாத பசும்பாலில் 10 நிமிடம் அந்த அருகம்புல்லை ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு அதை அப்படியே எடுத்து வந்து பூஜையறையில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு “ஓம் ருண விமோசன கணபதியே போற்றி” என்று கூறி ஒவ்வொரு அருகம்புல்லாக அர்ச்சனை செய்ய வேண்டும். ஆலயத்திற்கு சென்று வழிபடுபவர்களாக இருந்தால் மூன்று முறை விநாயகப் பெருமானை வலம் வந்த பிறகு இந்த அர்ச்சனையை செய்ய வேண்டும்.

இப்படி தொடர்ந்து 27 நாட்கள் செய்ய வேண்டும். நிறைவு செய்யும் நாளன்று விநாயகப் பெருமானுக்கு பிடித்தமான பொருட்களை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும். அருகம்புல்லை வைத்து விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் குபேரருக்கு இணையான வாழ்க்கையை பெற முடியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமியின் அம்சம் கொண்ட பொருட்கள்

இந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து வகையான கடன்களும் தீர்வதற்குரிய நல்ல வாய்ப்பை அருள்வார்.

- Advertisement -