கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டும் கருமிளகு பரிகாரம்.

milagu1
- Advertisement -

கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சனை இருந்தால் என்ன செய்வது? முதலில் நாம் ஒரு நல்ல வேலையை தேடிக்கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் நல்ல வருமானத்திற்கு வழியை தேட வேண்டும். நாம் செய்யும் தொழில் சிறப்பாக நடக்க வேண்டும். வரக்கூடிய வருமானத்தை வைத்து கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பிக் கொடுத்துவிடலாம். அடுத்தபடியாக நமக்கு வரக்கூடிய பணவரவில் தடை இருக்கக் கூடாது. பணவரவு தங்கு தடையில்லாமல் வந்து கொண்டே இருக்க வேண்டும். நல்ல வருமானத்திற்கு வழி, தங்கு தடையில்லாத பணவரவு, இந்த இரண்டும் ஒரு மனிதனுக்கு கிடைத்துவிட்டால் போதும் கடன் பிரச்சனையில் இருந்து வெளியே வந்துவிடலாம். இந்த 3 பிரச்சனைக்கு உண்டான பரிகாரம் இந்த பதிவில் உங்களுக்காக.

முதலில் தங்குதடை இல்லாத பணவரவிற்கு என்ன செய்வது? சமையல் அறையில் அஞ்சரை பெட்டியில் இருக்கும் சாதாரண மிளகு 1 ஸ்பூன் எடுத்து ஒன்றும் இரண்டுமாக நசுக்கி கொள்ள வேண்டும். இந்த மிளகை ஒரு சிறிய டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும். அதே டப்பாவில் கொஞ்சமாக பச்சைக்கற்பூரம், ஒரு ரூபாய் நாணயம், இந்த 3 பொருட்களையும் போட்டு மூடாமல் இதை அப்படியே பீரோவில் வைத்துவிட்டால், பணம் நம் கைக்கு தங்குதடை இல்லாமல் வந்து போகும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் நசுக்கிய மிளகு, சிறிய துண்டு பச்சை கற்பூரம், ஒரு ரூபாய் நாணயம் போட்டு பீரோவில் வைத்திடுங்கள். அவ்வளவு தான்.

- Advertisement -

அடுத்தபடியாக நாம் செய்யும் தொழில் நமக்கு வருமானத்தை கொடுக்க வேண்டும். கடனை அடைப்பதற்கு தேவையான அளவு நாம் சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். இதற்கு என்ன செய்வது? நாம் தொட்ட காரியம் வெற்றி அடைய வேண்டும். அப்போது உங்கள் கையில் எப்போதுமே 10 மிளகை வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய வெள்ளைத் துணியில், சிறிய முடிச்சாக பத்து மிளகை மூட்டை கட்டி எப்போதும் பர்சிலோ, பாக்கெட்டிலோ அல்லது முந்தானையிலோ உங்கள் ஹாண்ட் பேக்கிலோ வைத்துக் கொள்ளுங்கள். பெரியதாக எந்த தடையும் வந்து உங்கள் வருமானத்தை தடுக்காது.

இறுதியாக கைக்கு வருமானமும் வறுகின்றது. தொழிலும் ஓஹோவென செல்கிறது. வரும் வருமானத்தை வைத்து சரியான முறையில் வருமானத்தை வீண் செலவு செய்யாமல், முதலில் கடனை அடைத்துவிட வேண்டும். இதற்கு என்ன செய்வது. கட்டுக்கடங்காத கடன் பிரச்சனைக்கு தீர்வு பெற பரிகாரம். ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு கைப்பிடி சிலரை காசு, ஒரு கைப்பிடி வால் மிளகு இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி இந்த முடிச்சை அப்படியே பூஜை அறையில் வைத்து தினம்தோறும் பூஜை செய்து வரவேண்டும். விளக்கு ஏற்றும் போது இந்த முடிச்சுக்கு ஊதுவத்தி காண்பித்து, கடன் சீக்கிரம் கரைந்து போக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு நிச்சயம் இந்த மூன்று மிளகு பரிகாரங்களும் நல்ல பலனைத் தரும்.

- Advertisement -

மிளகுகிற்க்கு இருக்கக்கூடிய மருத்துவ குணங்களையும், மகத்துவத்தையும் அவ்வளவு சுலபமாக எளிதில் நம்மால் சொல்லிவிட முடியாது. நச்சுத்தன்மையை, விஷத்தை, கெட்ட சக்தியை அழிக்கக் கூடிய இந்த மிளகிற்க்கு எப்போதுமே ஒரு தனி சக்தி உண்டு. அந்த காலத்தில் ஒருவர் வீட்டில் விருந்து உபசாரம் நடக்கின்றது என்றால், அந்த விருந்தில் இறுதியாக மிளகு ரசம் கட்டாயமாக இருக்கும். காரணம் நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் மூலம் அஜீரண கோளாறு வந்துவிடக்கூடாது. உணவு சீக்கிரம் ஜீரணம் ஆக வேண்டும் என்பதற்காக மிளகு ரசம் வைக்கப்படும். இது எல்லோருக்கும் அறிந்த ஒரு விஷயம் தான்.

ஆனால் அந்த காலத்தில் இந்த மிளகு ரசத்திற்கு ஒரு வரலாறே சொல்லப்பட்டுள்ளது. எதிரியை பழி வாங்க முடியவில்லை என்றால், அந்த குறிப்பிட்ட எதிரியை வீட்டிற்கு விருந்திற்காக அழைத்து, சாப்பாட்டில் மருந்தை கலந்து வைத்துவிடுவார்களாம். அதாவது, ‘முன்னேற்றத்தை தடுக்க அடுத்தவர் நன்றாக வாழக்கூடாது என்பதற்காக, சாப்பாட்டில் ஏதோ வசியம் மருந்து வச்சுட்டாங்க. மருந்து வச்சுட்டாங்கன்னு’ நாம் கேள்விப்பட்டு இருப்போம் அல்லவா? அந்த காலத்தில் விருந்து சாப்பாட்டில் மருந்து வைத்திருந்தால், அந்த விருந்தில் இறுதியாக மிளகு ரசம் வைக்க மாட்டார்களாம். ஒரு வீட்டிற்கு நாம் விருந்துக்காக செல்கின்றோம். அந்த வீட்டில் நமக்கு வயிறார சாப்பாடு போட்டு விட்டு, இறுதியாக மிளகு ரசம் ஊற்றவில்லை என்றால், நிச்சயமாக அந்த வீட்டு விருந்தில் ஏதோ ஒரு தவறு உள்ளதாக நம்பப்பட்டது.

இது இந்த காலத்திற்க்கு பொருந்தாது. அந்த காலத்தில் சொல்லப்பட்ட ஒரு விஷயம். இதை எதற்காக இந்த இடத்தில் நினைவு கூறுகின்றோம் என்றால், மிளகுக்கு எந்த ஒரு கெட்ட சக்தியையும், மருந்தையும், விஷத்தையும் அழிக்கக் கூடிய ஆற்றல் மிக மிக அதிகம் என்பதை உணர்த்துவதற்காக தான். படிகாரத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள், இந்த மிளகு பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -