கடவுள் மீது உண்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பதை இதை வைத்து கூட சொல்லலாம்! அது என்னன்னு நீங்களும் தெரிஞ்சுக்கனுமா?

temple-kadavul-irukka
- Advertisement -

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது இங்கு பலருக்கும் இருந்து வரும் குழப்பம் ஆகும். நம்புபவர்களுக்கு கடவுள் எங்கும் வியாபித்து இருக்கிறார். நம்பாதவர்களுக்கு எங்குமே கடவுள் இல்லை என்று அவர்கள் உறுதியாக கூற மாட்டார்கள் தெரியுமா? கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் கூட ஏதோ ஒரு சூழ்நிலையில் கடவுள் நம்பிக்கையை வெளிபடுத்தி விடுவார்கள். இப்படி இருக்க நமக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்கிற ரகசியத்தை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

praying-god1

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதை விட கடவுள் நம்பிக்கை நமக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அறிவியலின்படி ஒரு விஷயத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்கு இன்னொரு விஷயம் தேவை. தானாக எதுவும் உருவாகுவது இல்லை. ஒரு விதையை விதைத்தால் அது நாளடைவில் மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்து விரிந்து நிற்கிறது. சின்ன விதையில் இவ்வளவு பெரிய விருட்சம் எப்படி வந்தது? யார் அதனை அப்படி டிசைன் செய்தது?

- Advertisement -

நீங்கள் கம்ப்யூட்டரில் ஒரு கமேண்ட் கொடுத்தால் அது நீங்கள் செய்து வைத்ததை போல இயங்கும். அதே போல இறைவன் கொடுத்த கமேண்ட் இந்த பூமியில் ஒவ்வொரு அணுவையும் இயக்கி கொண்டிருக்கிறது. ஒரு சிலர் எல்லாம் வீட்டில் விளக்கு ஏற்ற கூட மாட்டார்கள். அவர்களிடம் ஒரே ஒரு சாமி படம் தான் வைத்திருப்பார்கள். ஆனாலும் நன்றாக ஓகோவென்று தான் இருப்பார்கள் அது எப்படி? அவர்களுக்கு எல்லாமே இறைவன் தான் என்கிற புரிதல் உண்டு.

praying god

ஒரு படம் வைத்திருந்தாலும் முழு நம்பிக்கையுடன் அதனை கடவுளாக வணங்குவார்கள். எல்லாவற்றிலும் இறைவன் ஒருவனே என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். அதனால் இவர்கள் எந்த விதமான வழிபாடுகள் செய்யாவிட்டாலும் முழுமையாக இறைவனை நம்பினால் அது நடக்கும் என்பதால் இவர்கள் ஓஹோவென்று இருக்கிறார்கள். இப்படி செய்தால் நடக்குமா? அப்படி செய்தால் நடக்குமா? என்றெல்லாம் யோசிக்க கூடாது. இதை செய்தால் நிச்சயம் இது நடக்கும் என்று நம்ப வேண்டும். நீங்கள் தீர்க்கமாக நம்பும் ஒரு விஷயம் தான் கடவுள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

சிலர் குறிப்பிட்ட காலம் ஒரு இறைவனையும், இன்னும் குறிப்பிட்ட காலம் வேறு ஒரு இறைவனையும் என்று மாற்றிக் கொண்டே இருப்பார்கள். உதாரணத்திற்கு கொஞ்ச காலம் முருகனை நம்புவார்கள், கொஞ்ச காலம் விநாயகரை நம்புவார்கள். இப்படி அவர்களுடைய நம்பிக்கையை கடவுள் மீது மாற்றிக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை என்பது தான் அர்த்தம். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் இது போல் ஒரு பொழுதும் இறைவனை மாற்றிக் கொண்டே இருக்க மாட்டார்கள்.

praying-gopuram

முருகனை வணங்கினாலும், விநாயகரை வணங்கினாலும் எல்லா இடங்களிலும் ஒரே கடவுள் தான் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். சிவனை வணங்குபவர்கள் எல்லா விஷயத்தையும் சிவனாகவே பார்ப்பார்கள். அன்னையை வணங்குபவர்கள் எல்லா கடவுளையும் ஒரே மாதிரியான அன்னையாக பாவிப்பார்கள். அது போல இந்த கடவுளை நான் வணங்கினேன் நடக்கவில்லை, அதனால் வேறொரு கடவுளை வணங்குகிறேன் என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் மீதும் நம்பிக்கை இல்லை, கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று தான் அர்த்தம். இறைவன் இருக்கிறார், அவர் பல உருவங்களில் ஆனால் ஒரே ஜோதியாக உங்கள் நம்பிக்கையாக இருக்கிறார்.

- Advertisement -