பழைய காலண்டரில் இருக்கும் சுவாமி படங்களை வெளியே தூக்கிப் போட மனசு வரவில்லையா? என்ன செய்யலாம்?

- Advertisement -

இறைபக்தி அதிகமாக இருப்பவர்களுக்கு இது போல் சுவாமி படங்கள் இருக்கும் காலண்டர்களை வெளியில் தூக்கி போட மனம் வருவதில்லை. சாமி படம் எந்த உருவத்தில் இருந்தாலும், அதற்கும் ஒரு சக்தி உண்டு. இறை உருவத்தை பதித்த கேலண்டர் மட்டுமல்ல, நம் கண் முன்னே எவ்வளவோ விஷயங்களில் இறை உருவம் பதிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு திருமண பத்திரிகையை எடுத்துக் கொள்ளலாம். பத்திரிகைகளில் அச்சிடப்பட்டுள்ள விதவிதமான சாமி படங்களை எத்தனை என்று அடுக்கி வைத்துக் கொள்வது? இப்படி சாமி படங்கள் பதிக்கப்பட்டுள்ள காலண்டர், திருமண பத்திரிக்கை போன்றவற்றை என்னதான் செய்வது? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை நோக்கி தொடர்ந்து பயணியுங்கள்.
calendar

வருடத்திற்கு ஒருமுறை வாங்கி வைக்கும் காலண்டர் பெரும்பாலும் சாமி படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதாக இருக்கும். மகாலட்சுமி, விநாயகர், முருகன், பெருமாள் போன்ற படங்கள் பெரும் அளவில் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வரும். அந்த வருடம் முழுவதும் இறை அருள் கிடைக்க இது போன்ற படங்களை தேடிப்பிடித்து வாங்கி வந்து விடுவோம். ஒரு சிலருடைய வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட காலண்டர்கள் கூட இருக்கும்.

வருடம் முடியும் வரை இவை கண்களுக்கு ஒருவிதமான நேர்மறை ஆற்றலை கொடுக்கும். ஆனால் வருடம் முடிந்த பின்பு இதை வைத்து என்ன செய்வது? என்று தெரியாமல் மனம் குழம்பிப் போகும். வருடா வருடம் வரும் இந்த மாதிரியான காலண்டர் வகைகளை குப்பையில் தூக்கி எறியவும் ஒரு சிலருக்கு மனம் வராது. ஏனெனில் அதில் இருப்பது சுவாமியின் திருஉருவம் ஆயிற்றே! தூக்கி எறிந்தால் தோஷம் வந்து விடுமோ! என்றெல்லாம் மனம் பதற்றம் கொள்ளும்.

- Advertisement -

invitation

இந்த வகையில் திருமண பத்திரிகைகள், நோட்டுப் புத்தகங்கள், நோட்டீஸ்கள் போன்றவற்றில் கூட இறைவனின் திரு உருவம் பதிக்கப்பட்ட பொருட்கள் நம்மிடம் நிறைய இருக்கும். இப்படியான பொருட்களை தூக்கி போடவும் மனம் வராது, வைத்துக் கொள்ளவும் இடமிருக்காது. பின்பு என்ன தான் அதை வைத்து செய்வது? என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்போம். இடம் இருக்கிறது என்பதற்காக திருமண பத்திரிக்கைகளில் வரும் அழகிய சுவாமியின் திருஉருவ படங்களை பூஜை அறைகளில் அடுக்கி வைத்துக் கொள்ளக் கூடாது.

இதில் நவீன யுகத்தின் அடையாளமாக விளங்கும் வாட்ஸ்அப் போன்ற அப்ளிகேஷன்களில் குறுஞ்செய்திகள் மூலம் பெறக்கூடிய இறைவனுடைய திரு உருவங்களை கூட சிலர் அழிப்பதற்கு யோசிப்பார்கள். இப்படி நமக்கு மனம் வராமல் நம்மிடம் இருக்கும் இறைவனுடைய திரு உருவ சிலைகளை வைத்து நாம் ஒன்றுமே செய்ய முடியாது. காலப்போக்கில் அவை கரையான் அரித்து வீணாகி போகும். அல்லது இடப்பற்றாக்குறையால் வழி இல்லாமல் நாம் அதனை அழித்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

praying-god

இறைவன் என்பவர் நம்முடன், நம் மனதில் இருப்பவர். பக்தி மனதில் இருந்தால் போதும். எனவே எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் உங்களுக்கு கிடைக்கக்கூடிய இறைவனுடைய முகம் பதித்த காலண்டர், திருமண பத்திரிகைகள், நோட்டுப் புத்தகங்கள், நோட்டீஸ்கள், பழைய படங்கள் எதுவாக இருந்தாலும் அதனை கொண்டு போய் ஓடும் நீரில் விட்டுவிடுங்கள். ஓடும் நீர் என்பது இயற்கையாக ஒரு விஷயத்தை ஆக்கவும், அழிக்கவும் செய்யக்கூடிய ஆற்றல் படைத்ததாக ஆகும். அதனால் தான் எந்த ஒரு ஆன்மீக காரியங்களுக்கும் ஓடும் நீரை பயன்படுத்துகிறார்கள்.

river aaru

இந்த பிரபஞ்சத்தின் மண்ணிலிருந்து உருவான எல்லா பொருளும் இறுதியில் மண்ணையே சென்றடையும். அதை விடுத்து இது போன்ற விஷயங்களை கொண்டு போய் கோவில் பிரகாரத்தில் வைப்பதை தவிர்க்கவும். ஒவ்வொருவரும் இது போல் கோவில் பிரகாரத்தில் கொண்டு போய் வைத்தால்! அவர்களுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் வீணாகக் குப்பையில் தான் போடுவார்கள். எனவே யாருக்கும் பாதகம் இல்லாமல் நீர் நிலைகளில் விட்டுவிடுங்கள். வீட்டில் இருக்கும் பழைய சுவாமி படங்கள், உடைந்த படங்களை கூட இது போல் நீர்நிலைகளில் விட்டுவிடுவது நல்லது. உடைந்த படங்களை வீட்டில் வைத்திருக்க கூடாது.

- Advertisement -