இந்தக் கிழமையில், இந்த கடவுளை, இப்படி வழிபடுங்கள் உங்களை வெல்ல எவராலும் முடியாது தெரியுமா?

praying-gopuram
- Advertisement -

இந்து மதத்தைப் பொறுத்தவரை பல்வேறு கடவுளரை வணங்குவது மரபு! எந்த கடவுளை எப்படி வழிபட்டாலும் பலன் உண்டு என்பது நிச்சயம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட கடவுளை வணங்கும் பொழுது அதற்குரிய பலன்கள் என்ன என்பதும் ஆன்மீக ரீதியாக வழிவகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் எந்த கிழமையில்? எந்த கடவுளை? எப்படி வழிபட வேண்டும்? என்கிற தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஞாயிற்றுக்கிழமை:
ஞாயிற்றுக் கிழமையில் பொதுவாக சூரியனை வணங்குவது விசேஷமான பலன்களைக் கொடுக்கும். சூரியன் உதிக்கும் பொழுதும், சூரியன் மாலையில் அஸ்தமனம் ஆகும் பொழுதும் சூரிய நமஸ்காரம் செய்வது தடையில்லாத வெற்றியை கொடுக்கும். மன உளைச்சல் இருப்பவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் கட்டாயம் சூரியனை வணங்கி வர நல்ல பலன் உண்டாகும்.

- Advertisement -

திங்கட்கிழமை:
திங்கட் கிழமையில் பொதுவாக சிவபெருமானை வழிபடுவது மரபு! சிவனுக்கு உகந்த சோம வாரம் ஆகிய இந்த திங்கட் கிழமையில் வில்வார்ச்சனை செய்து சிவனை வழிபடுபவர்களுக்கு மோட்சம் நிச்சயம் என்கிறது ஆன்மீகம்! அத்தகைய அற்புதமான இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை நினைந்து, அவருடைய மந்திரங்களை உச்சரித்து வழிபட்டு வந்தால் சகல தோஷங்களும் நீங்கும். சனி தோஷம் நீங்கவும் சோமவார விரதம் இருப்பது வழக்கம். மேலும் திங்கட் கிழமையில் மன ஆரோக்கியம், மன வலிமை பெற சந்திரனை வழிபடுவார்கள். திங்கட் கிழமையில் சந்திர தரிசனம் செய்து, சந்திரனுக்கு அர்ச்சனை புரிந்து, சந்திர பகவானை வழிபட்டு வந்தால் முகத்தில் பொலிவு உண்டாகும். மனக் கஷ்டங்கள் அகன்று தெளிவான சிந்தனை தோன்றும்.

செவ்வாய்:
செவ்வாய் கிழமையில் பொதுவாக ராகு கால துர்க்கை பூஜை மேற்கொள்வது மரபு! தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி அடையவும், திருமண வைபவங்கள் கைகூடி வருவதற்கும், குடும்ப பிரச்சனைகளுக்கும் துர்க்கை அம்மனை வேண்டி விரதமிருந்து செவ்வாய் கிழமைகளில் ராகுகால வேளையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அதுமட்டுமல்லாமல் செவ்வாய் கிழமையில் பூமி காரகனாக விளங்கும் செவ்வாய் பகவான் வழிபாடு செய்வது சொந்த வீடு கட்டும் யோகத்தை கொடுக்கும்.

- Advertisement -

புதன் கிழமை:
புதன் கிழமை தோறும் முழுமுதற்கடவுளான விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவார்கள். காரிய வெற்றியை கச்சிதமாக பெற்றுக் கொடுக்கும் இந்த புதன் கிழமை விநாயகர் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு புதன் கிழமையும் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வந்தால் நினைத்தது நினைத்தபடி நடக்கும்.

வியாழன் கிழமை:
வியாழன் கிழமை என்றாலே குரு பகவானுக்கு மிகவும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. குரு பகவான், குரு தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் வியாழன் கிழமையில் வழிபடும் முக்கியமான வழிபாடாகும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க எல்லோருடைய பெயரிலும் குரு தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நல்ல பலன் கொடுக்கும். குருவுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி கொண்டைக்கடலை நைவேத்தியம் படைத்து வழிபட்டு வந்தால் சுபகாரியத் தடைகள் விலகும்.

வெள்ளிக்கிழமை:
வெள்ளிக் கிழமையில் குடும்பத்தில் சுபிட்சம் நிலைத்து நிலைத்திருக்க, செல்வ வளம் பெருக, மகாலட்சுமியை வழிபடுவது வழக்கம். ராகு காலத்திலும் மகாலட்சுமியை வழிபடுவார்கள்.

சனிக்கிழமை:
சனிக்கிழமையில் விஷ்ணு வழிபாடு செய்வது வழக்கம். அன்றைய நாளில் விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி தீர்த்தம் பருகி வந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம். மனக்கவலை நீங்கி, தொழில் வளம் சிறக்கும். பெருமாளை மட்டும் அல்லாமல் ஹனுமாரையும், பைரவரையும் சனிக்கிழமையில் வழிபடுவது சிறப்பு. மன பயம் நீங்க அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றலாம். கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு பைரவரை வழிபடுவது அனுகூல பலன் கொடுக்கும்.

- Advertisement -