அனைவருக்கும் பிடித்த வத்த குழம்பை இப்படி செய்து வைத்தால் போதும், கொஞ்சம் சாப்பிடுபவர்கள் கூட இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்

vaththa
- Advertisement -

நமது பாரம்பரிய சாப்பாட்டு வகைகளில் ஒன்றுதான் குழம்பு. சிலருக்கு சைவ குழம்பு வைத்தால் பிடிக்கும். சிலருக்கு அசைவ குழம்பு வைத்தால் பிடிக்கும். ஆனால் இந்த குழம்பை அனைவருக்குமே பிடிக்கும். அதாவது வத்தக்குழம்பு செய்து வைத்தால் போதும், அடுத்த பேச்சு பேசுவதற்கு முன்னரே சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு இதனை விரும்புவர்கள் பலர் இருக்கின்றனர். அதுவும் விசேஷமான வீடுகளில் செய்யப்படும் வத்த குழம்பு என்றால் போதும் அதற்கு தனி ரசிகர்களே இருப்பார்கள். இப்படி சுவையான வத்தக் குழம்பிற்க்குக்கு பலரும் அடிமையாக இருக்கின்றனர். ஆனால் இதனை முறையாக செய்வது என்பது பற்றி ஒரு சிலருக்கு தெரிவதில்லை. எனவே அவர்கள் விரும்பும் வகையில் இதன் சுவை வருவதில்லை. எனவே தான் கல்யாண வீட்டில் செய்யும் அதே சுவையில் எப்படி வத்த குழம்பை வீட்டிலேயும் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 2, தக்காளி – 1, மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், சுண்டைக்காய் வற்றல் – 50 கிராம், பூண்டு – 100 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், வரமிளகாய் – 5, எண்ணெய் – 6 ஸ்பூன், தனியா – 2 கைப்பிடி, வர மிளகாய் – 6, வெந்தயம் – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், துவரம்பருப்பு – இரண்டு ஸ்பூன், பெருங்காயம் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். பிறகு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து தனியா, வெந்தயம், சீரகம், மிளகு, வரமிளகாய் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் ஒரு கைப்பிடி பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் 50 கிராம் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு இவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, அதன் பின்னர் ஊற வைத்த புளியை கரைத்து, புளி கரைசலையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கொதிக்க விட வேண்டும்

பின்னர் குழம்பு கொதித்து மிளகாய் தூள் வாசனை சென்றதும், அரைத்து வைத்துள்ள பொடியை இவற்றுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து விட்டு, இறுதியாக கொத்தமல்லி தழை சேர்க்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான வத்தக் குழம்பு தயாராகிவிட்டது.

- Advertisement -