1000 வருடங்களுக்கு முன்பே பிள்ளையார் சிலை முன்பு தோன்றிய நீர் ஊற்று – வீடியோ

pillayar
- Advertisement -

ஆன்மீக அதிசய பூமியான பாரதத்தில் இறைவனின் அதிசய செயல்களுக்கு என்றுமே குறைவு ஏற்பட்டதில்லை. இயற்கையையும், பஞ்சபூதங்களையும் தெய்வமாக கருதி வழிபடும் பண்பாடு கொண்டது இந்து மதம். அந்த வகையில் உயிர்கள் அனைத்தும் உயிர் வாழ்வதற்கு அவசியமான நீர் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும் ஒரு கோவில் தான் கமண்டல கணபதி கோவில். அக்கோவிலின் இந்த ஆச்சர்ய காணொளியை இங்கு காண்போம்.

- Advertisement -

இக்காணொளி கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற “ஸ்ரீ ஆதிசங்கரர்” ஸ்தாபித்த சைவ மத பீடம் இருக்கும் ஊரான “சிருங்கேரியிலிருந்து” சற்று தொலைவில் இருக்கும் “கேசவே” என்ற ஊரில் இருக்கும் “கமண்டல கணபதி” என்கிற கோவிலில் படமாக்கப்பட்டது. இதில் ஒரு விநாயகர் விக்கிரகத்தின் கீழே இருக்கும் ஒரு துளையிலிருந்து தண்ணீர் பொங்கி வந்த படியே இருக்கிறது. இதில் அதிசயம் என்னவென்றால் பல ஆயிரம் வருடங்களாகவே இப்படி சுனை போன்ற நீர் அந்த கமண்டல கணபதியின் சிலைக்கு ஆதியிலிருந்து வந்துகொண்டிருப்பது தான்.

வேத காலத்தில் உலகம் முழுவதுமே கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு தாகத்தை தணிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் அனைத்து உயிர்களும் தவித்த போது, அன்னை உமாதேவி இந்த கோவிலில் வீற்றிருக்கும் தன் மூத்த மைந்தன் ஆன கமண்டல கணபதி விக்ரகத்திற்கு அடியில், வற்றாத தண்ணீர் சுனையை ஏற்படுத்தி உலக உயிர்களின் தாகத்தை தீர்த்ததாக தல வரலாறு கூறுகிறது.

- Advertisement -

சில நேரங்களில் பொங்கியும் சில நேரங்களில் சாதாரண அளவிலும் இந்த துளையிலிருந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது. இந்த சுனை நீரைக்கொண்டு இங்கிருக்கும் தெய்வ விக்கிரகங்கள் அனைத்திற்கும் அபிஷேகம் செய்ய படுகிறது.இந்த புனித தீர்த்தமாக கருதி பக்தர்கள் குடுவைகளில் பிடித்து செல்கின்றனர்.
இங்கு உற்பத்தியாகும் புனித நீர் இங்கிருந்து 14 கிலோமீட்டர் ஓடி சற்று தொலைவில் ஓடிக்கொண்டிருக்கும் துங்கா நதியில் கலக்கிறது.

தமிழில் வாட்ஸாப் ஸ்டேட்டஸ் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

English Overview:
Here we have Kamandala ganapathi sunai video. This sunai was formed several thousand years ago.

- Advertisement -