கொடுமையான கண் திருஷ்டியை கூட எளிமையாக விரட்டி அடிக்க மாதம் ஒரு முறை இந்த பரிகாரம் செய்தாலே போதும். கண் திருஷ்டியால் கண் கலங்கும் கஷ்டம் வரவே வராது.

amavasai
- Advertisement -

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கண்கலங்கும் அளவிற்கு கஷ்டங்கள் வருவதற்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், அதில் முதல் காரணமாக சொல்லப்படுவது இந்த கண் திருஷ்டி தான். நாம் சந்தோஷமாக இருப்பதையும், சந்தோஷமாக வாழ்வதையும், சந்தோஷமாக சிரிப்பதையும் திருஷ்டி கண்ணோடு ஒருவர் பார்த்து விட்டால், அடுத்தது நம்முடைய கண்களில் வருவது கண்ணீராகத்தான் இருக்கும்.

கண்கலங்க வைக்கும் கஷ்டம் எப்படி வந்தது என்றே தெரியாது. இப்படிப்பட்ட கண்திருஷ்டி ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை நிரந்தரமாக அழிக்கக்கூடிய தன்மை கொண்டது. அதிலிருந்து விடுபட மாதம் ஒரு முறை அமாவாசை நாள் அன்று குடும்பத்திற்கே திருஷ்டி கழிக்க வேண்டிய வழக்கத்தை நாம் கொண்டு வர வேண்டும். அந்த வரிசையில் எளிமையான முறையில் கடுமையான கண் திருஷ்டியை போக்குவதற்கு ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

- Advertisement -

கண் திருஷ்டி நீங்க அமாவாசை செய்ய வேண்டிய பரிகாரம்:
அம்மாவாசை வரப்போகிறது என்றாலே கடைகளில் இந்த திஷ்டி பூசணிக்காய் நமக்கு சுலபமாக கிடைக்கும். அமாவாசைக்கு ஒரு நாள் முன்பே ஒரு திருஷ்டி பூசணிக்காயை வீட்டிற்கு வாங்கி வந்து விடுங்கள். அமாவாசைக்கு முந்தைய தினம் அந்த திருஷ்டி பூசணிக்காயில் ஒரு சின்ன ஓட்டையை போட்டு, அதன் உள்ளே ஒரு பாக்கெட் நவதானியத்தை கொட்டி, அந்த வெட்டிய ஓட்டையை மூடி உங்களுடைய வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் இந்த திருஷ்டி பூசணிக்காயை அப்படியே வைத்து விடுங்கள்.

மறுநாள் அமாவாசை பிறக்கும். வழக்கம் போல காலையில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளை செய்து முடித்துவிட்டு, விரதத்தை முடித்து விடுங்கள். அமாவாசை தினத்தன்று மதியம் 12 மணி அளவில் திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதற்காக ஆட்கள் இருப்பார்கள் அல்லவா, அவர்களை கூப்பிட்டு உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நிற்க வைத்து உங்களுக்கும் உங்கள் வீட்டிற்கும் இந்த பூசணிக்காயை சுற்றி கொண்டு போய் முச்சந்தியிலோ அல்லது வீதியிலோ உடைத்து விட வேண்டும்.

- Advertisement -

உடைத்த பூசணிக்காயை நடுவீதியில் முச்சந்தியில் அப்படியே விடக்கூடாது. அதை கையோடு எடுத்து குப்பைத்தொட்டியில் அல்லது ரோடு ஓரத்திலும் போட்டு விடுங்கள். பசு மாடு வந்து சாப்பிட்டுக் கொள்ளும் அல்லது துப்புரவு தொழிலாளர்கள் அதை அகற்றி விடுவார்கள். நடுவீதியில் பூசணிக்காயை உடைத்து விட்டு அப்படியே போடுவது தவறான செயல். அது அடுத்தவர்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணிவிடும்.

இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சனையை நினைத்து இனி கவலையே கிடையாது. இந்த மூன்று நாட்கள், இவரை போய் பாருங்கள். கஷ்டத்துக்கு மேல் கஷ்டத்தை கொடுக்கும் கடன் தொல்லையும் காணாமல் போகும்.

இப்படி மாதம் தோறும் ஒரு பூசணிக்காயை திருஷ்டி சுற்றி உடைத்து விட்டால் உங்கள் குடும்பத்திற்கு கண் திருஷ்டி பெரிய அளவில் நிச்சயம் வராது. இது தவிர நம்முடைய பாட்டி சொல்லிக் கொடுத்த பரிகாரங்கள் நிறைய நமக்கு தெரியும். உப்பு சுற்றி போடுவது, கற்பூரம் சுற்றி போடுவது, மிளகாய், கடுகு, கல்லுப்பு போன்ற பொருட்களை சுற்றி நெருப்பில் போடுவது போன்ற சின்ன சின்ன திருஷ்டி கழிக்கும் பரிகாரங்களை வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் அப்பப்போ குழந்தைகளுக்கு செய்வது ரொம்ப நல்லது. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -