ரோட் சைட் ‘கார தண்ணி சட்னி’ இப்படி தான் செய்யணும். அடுப்பில் கொதிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும் இந்த சட்னி ரெசிபியை மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

kara-chutney
- Advertisement -

சில ரோட்டு கடைகளில் இட்லிக்கு தொட்டுக்கொள்ள தண்ணி காரச் சட்னி வைப்பார்கள். அது சுவைப்பதற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். இந்தச் சட்னியை எப்படி செய்தார்கள் என்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. குறிப்பாக இந்த தண்ணி கார சட்னி ஊர் பக்கம் உள்ள ரோட்டுக் கடைகளில், இட்லி, கல் தோசை, ஆப்பத்திற்கு ஸ்பெஷலாக தொட்டுக்க கொடுக்கப்படும். அந்த ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kara-chutney1

முதலில் அடுப்பில் கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் தோலுரித்த பூண்டு – 15 பல், காய்ந்த மிளகாய் 10 லிருந்து 15, கறிவேப்பிலை – 2 கொத்து, நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, பழுத்த தக்காளிப் பழம் – 3 (வெட்டக்கூடாது) காம்பு மட்டும் நீக்கிக் கொள்ளுங்கள், சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து வதக்கவேண்டும்.

- Advertisement -

பச்சை வாடை போக வதக்க கூடாது. இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக சூடு ஆகும் வரை வதக்கினால் போதும். தக்காளியின் தோல் பிரிந்து வரும்வரை வதக்கினால் போதும். இறுதியாக 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் சேர்த்து இந்தக் கலவையை நன்றாக ஆற வைத்துவிடுங்கள்.

chutney4

ஆரிய இந்த கலவையை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, தாராளமாக தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளலாம். (அதற்காக அரைக்கும் போது நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டால் மிக்ஸி ஜாரில் இருந்து வெளியே வழியும் பார்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.) மிக்ஸி ஜாரில் இருக்கும் இந்த சட்னி அப்படியே இருக்கட்டும். இதற்கு ஒரு தலைப்பு போட்டு, கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் எண்ணெய் 1 ஸ்பூன் ஊற்றி காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், காய்ந்த மிளகாய் தாளித்து, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை இந்த தாளிப்பில் ஊற்றி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, நன்றாக கலந்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவேண்டும். சட்னியில் இருக்கும் பச்சை வாடை போகும் வரை 5 லிருந்து 7 நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த சட்னியோடு சுடச்சுட இட்லியை வைத்து பரிமாறுங்கள் அட்டகாசமான ருசி கிடைக்கும்.

kara-chutney2

இந்தச் சட்னி கொஞ்சம் தண்ணீர் பதத்தில் தான் இருக்கவேண்டும். ரொம்பவும் கெட்டியாக இருக்கக் கூடாது. காரணம் இதன் பெயரே தண்ணி காரச்சட்னி தான். இந்த சட்னிக்கு காரம் கொஞ்சம் தூக்கலாக தான் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இதே சட்டியில் மேலே சொன்ன பொருட்களோடு, கொஞ்சமாக இஞ்சி, கொஞ்சமாக புதினா, கொத்தமல்லி தழை சேர்த்து வதக்கி அரைத்து கொள்வார்கள். சட்னி பச்சை நிறமாக மாற கூடாது. வாசத்திற்கு 2 இனுக்கு புதினா மல்லித்தழை வைக்க வேண்டும். இப்படி செய்தாலும் ருசி இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -