காரப்பொடியை இப்படி அரைச்சு வச்சுக்கிட்டீங்கன்னா குழம்பு வைக்க வேண்டிய அவசியமே இல்லை.

kara podi recipe
- Advertisement -

சமைப்பதே பெரிய வேலை என்றால் இதில் ஒவ்வொரு நேரத்திற்கும் என்ன சமைப்பது என்பது மிகபெரிய கவலையாக இருக்கும். அதிலும் வீட்டில் காய்கறி எதுவும் இல்லாத சமயத்தில் குழம்பு செய்ய வேண்டும் என்றால் தலையை பியித்து கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு டென்ஷன் ஆகி விடுவோம்.

இது போன்ற சமயங்களில் எளிமையாக அதே நேரத்தில் சூப்பராக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த காரப்பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது சாதத்துக்கு மட்டுமல்ல இட்லி, பூரி, தோசை என அனைத்திற்கும் தொட்டுக் கொள்ள அருமையாக இருக்கும். அந்த காரப்பொடியை எப்படி அரைப்பது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

தேவையான பொருட்கள்

காய்ந்த மிளகாய் – 10,
உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
தனியா – 3 மூன்று டேபிள் ஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன் ஸ்பூன்,
பூண்டு பல் தோல் உரிக்காதது – 10
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
புளி – சின்ன கொட்டைப்பாக்கு அளவு
உப்பு – 1/4 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

முதலில் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் காய்ந்த மிளகாய் மட்டும் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாய் கருகி விடக் கூடாது. நிறம் மாறி வந்தவுடன் அப்படியே எண்ணெயிலிருந்து வடித்து எடுத்து விடுங்கள்.

- Advertisement -

அடுத்து அதே எண்ணெயில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு நிறம் மாறியவுடன் தனியா, சீரகம், பூண்டு பல், புளி, கறிவேப்பிலை என அனைத்தையும் சேர்த்து பருப்பு நிறம் மாறும் வரை லேசாக வறுத்து அதையும் ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் வைத்து விடுங்கள்.

இப்போது மிக்ஸி ஜாரில் முதலில் காய்ந்த மிளகாய் மட்டும் போட்டு பல்ஸ் மோடில் ஒரு முறை அரைத்துக் கொள்ளுங்கள். இது கொரகொரப்பாக தான் இருக்க வேண்டும். அடுத்து வறுத்து வைத்த பருப்பு வகைகளை சேர்த்து உப்பையும் சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை மைய அரைக்காமல் பல்ஸ் மோடில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் விட்டு எடுத்தால் போதும். நல்ல கொரகொரப்பான காரப்பொடி அருமையாக தயாராகி விடும். இந்தப் பொடியை சுடச்சுட சாதத்துடன் கொஞ்சமாக சேர்த்து மேலே கொஞ்சம் நெய் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள். சுவை பிரமாதமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: கிராமத்து சுவையில் அட்டகாசமான பச்ச மாங்காய் சுட்ட ரசம்.

அதுமட்டுமின்றி இந்த பொடி இட்லி, தோசை போன்ற டிபன் வகைகளுக்கும் நன்றாக இருக்கும். இந்த பொடியை அரைத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். குழம்பு வைக்க முடியாத நேரத்தில் வீட்டில் காய்கறி இல்லாத சமயத்தில் சட்டுனு இந்த பொடி கை கொடுக்கும்.

- Advertisement -