நாவிற்கு உப்பு உறைப்பை கொடுக்கக்கூடிய சுவையான சட்னி. இட்லிக்கு தொட்டுக்கொள்ள இதைவிட பெஸ்ட் சட்னி எங்கு தேடினாலும் கிடைக்காது.

chutney
- Advertisement -

ஒரு சட்னி ரெசிபி இல்லைங்க. இரண்டு வகையான சட்னி ரெசிபிகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாவிற்கு உப்பு உறைப்பு புளிப்பை கொடுக்கக்கூடிய இந்த மாதிரி ஒரு சட்னியை அரைத்து இட்லிக்கு தொட்டு சாப்பிடுங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும். நாக்கை இழுத்து இழுத்து சாப்பிடும் அளவிற்கு காரமும் சுவையும் கொடுக்கக்கூடிய மதுரை மிளகாய் சட்னி செய்வது எப்படி என்பதை பற்றியும், மாங்காயை வைத்து காரசாரமான ஒரு சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ரெண்டு சட்னியும் இட்லிக்கு செம்ம சைடிஷ்.

மாங்காய் சட்னி:
மீடியம் சைஸில் இருக்கக்கூடிய ஒரு மாங்காயை எடுத்து தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் புளிக்கக் கூடிய மாங்காயை பயன்படுத்தாமல், மீடியம் புளிப்பில் இருக்கக்கூடிய மாங்காயை சட்னிக்கு பயன்படுத்தலாம். ரொம்பவும் புளிப்புள்ள மாங்காயை சட்னிக்கு பயன்படுத்தினால் அதற்கு தகுந்தது போல உப்பு காரத்தை கூட்டிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, வெட்டி வைத்திருக்கும் மாங்காய்களை போட்டு 2 நிமிடம் போல வதக்க வேண்டும். அதன் பின்பு வரமிளகாய் – 10, இஞ்சி – 2 இன்ச் தோல் சீவியது, தக்காளிப் பழம் – 1, வெங்காயம் நறுக்கியது – 1, தோலுரித்த பூண்டு பல் – 4, இந்த பொருட்களை எல்லாம் போட்டு மாங்காயும் தக்காளி வெங்காயம் நசுங்கும் வரை நன்றாக வதக்கி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றாமல் கொஞ்சம் கெட்டியாக சட்னி அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் மிகக் குறைந்த அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். சிறிய தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 2, கருவேப்பிலை ஒரு கொத்து போட்டு, நன்றாக தாளித்து இதை அப்படியே சட்னியில் கொட்டி கலந்து பரிமாறினால் இந்த சட்னி இட்லிக்கு தொட்டு சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும். கவனித்துக் கொள்ளுங்கள். மாங்காய் புளிப்புக்கு ஏற்ற உப்பு காரத்தை சட்னியில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் சட்னியின் சுவை கூடுதலாக இருக்கும். புளிப்பு உப்பு காரம் நிறைந்த இந்த சட்னியை யாரும் மிஸ் பண்ணாதீங்க.

- Advertisement -

மதுரை மிளகாய் சட்னி:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோலுரித்து பூண்டு பல் – 1 கைப்பிடி அளவு, வரமிளகாய் – 10, போட்டு தண்ணீர் எதுவும் ஊட்டாமல் முதலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு நெல்லிக்காய் அளவு – புளி, தேவையான அளவு உப்பு, 1 ஸ்பூன் – வெல்லம், 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி இதை நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரைத்த இந்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.

தாளிப்பு கரண்டியில் நான்கு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு – 1/2 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 2 கொத்து, போட்டு தாளித்து இதை அப்படியே சுட சுட சட்னியில் ஊற்றி நன்றாக கலந்து இந்த சட்னியை இட்லிக்கு தொட்டு சாப்பிட்டால் அத்தனை ருசியாக இருக்கும். நாவிற்கு காரசாரத்தை கொடுக்க இந்த சட்னியை விட வேறு இருக்கவே முடியாது. இந்த சட்னி அரைக்கும்போது கொஞ்சம் அளவில்தான் நமக்கு கிடைக்கும். இருப்பினும் இதை மூன்று பேர் தாராளமாக சாப்பிடலாம். உங்களுக்கு இந்த இரண்டு ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்ல மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. நாலு இட்லி சாப்பிடுறவங்க கூட இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க.

- Advertisement -