காரிய தடை விலக உதவும் தீபம்

vinayagar deepam
- Advertisement -

ஒரு நல்ல செயலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து அதை நல்லபடியாக முடிக்கும் நேரம் வரை எந்தவித தடைகளும் ஏற்படாமல் அந்தக் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுவார்கள். ஆனால் ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த காரியத்தை நம்மால் செய்து முடிக்க முடியாமல் ஏதாவது தடைகள் ஏற்பட்டால் அதைத்தான் நாம் காரிய தடை என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட காரியதடையை நீக்குவதற்கு மாதத்தில் ஒரு நாள் மட்டும் விநாயகரை எப்படி தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமானை வழிபட்டு விட்டு எந்த ஒரு காரியத்தை நாம் செய்தாலும் அந்த காரியத்தில் தடைகள் எதுவும் இருக்காது என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் வெளியூர் செல்பவர்கள் தங்களுடைய பயணத்தை தொடங்குவதற்கு முன்பு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று சிதர் தேங்காய் உடைத்து விட்டு செல்லும் பொழுது அந்த பயணத்தில் எந்தவித தடைகளோ அல்லது தவறுகளோ எதுவும் ஏற்படாமல் நல்லபடியாக அந்த பயணம் வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. இப்படி பல வழிபாட்டு முறைகளை நாம் விநாயகப் பெருமானுக்கு செய்து பலனடைந்திருப்போம்.

- Advertisement -

அந்த வகையில் இந்த பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய காரிய தடைகளை நீக்கும் என்றுதான் கூற வேண்டும். இந்த பரிகாரத்தை யார் செய்கிறார்களோ அவர்களுடைய பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் தான் மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை நாம் விநாயகர் ஆலயங்களிலும் சென்று செய்யலாம் அல்லது நம் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகப் பெருமானுக்கும் செய்யலாம்.

இந்த வழிபாட்டிற்கு நமக்கு ஒரு பூவரசன் இலையும், பசுஞ்சானமும் தேவைப்படும். பிறந்த நட்சத்திர நாள் அன்று காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பிரம்ம முகூர்த்த வேளையில் பூஜையறையில் இருக்கும் விநாயகரின் புகைப்படத்தை துடைத்துவிட்டு சந்தனம் குங்குமம் வைத்து அவருக்கு பூக்களை சுட வேண்டும். செம்பருத்திப் பூ அருகம்புல் வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வைத்து அலங்கரித்த பிறகு ஒரு பூவரச இலையை எடுத்து அதை மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து விநாயகரின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். பிறகு பசுஞ்சானத்தை எடுத்து வந்து அதை விளக்கு போல் செய்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கு செய்ய தெரியாதவர்கள் பசுஞ்சாணத்தின் மேல் ஓர் அகல் விளக்கை வைத்தும் தீபம் ஏற்றலாம்.

இவ்வாறு ஏற்றிய பிறகு விநாயகப் பெருமானை மனதார வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து இத்தனை மாதங்கள் செய்ய வேண்டும் என்ற எந்த கணக்கும் இல்லை. நம் வாழ்நாள் முழுவதும் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நம் வாழ்க்கையில் எந்தவித காரிய தடைகளும் ஏற்படாது என்று தான் கூற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நாளை தனுர் சங்கராந்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

வாழ்நாள் முழுவதும் மேற்கொள்ள இயலாதவர்கள் எந்த காரியத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்த காரியத்தை செய்வதற்கு முன்பாகவே இந்த வழிபாட்டை செய்து விட்டு அந்த காரியத்தை தொடங்கினால் கண்டிப்பான முறையில் அந்த காரியம் வெற்றி அடையும்.

- Advertisement -