இவர்கள் காலில் விழுந்து வணங்கினால், காரிய தடை விலகும். செல்லும் காரியம் வெற்றி அடையும்.

namaskaram
- Advertisement -

நம்பிக்கை தாங்க வாழ்க்கை. இன்று இரவு படுத்து தூங்கினால், நாளை காலை விடியும். நாளை காலையில் கண்விழிப்போம், என்ற நம்பிக்கையோடு தான் இரவு தூங்க செல்கின்றோம். அதே நம்பிக்கையை நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவதிலும் வைக்க வேண்டும். வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறுவோம் என்று முதலில் நம்புங்கள். அந்த நம்பிக்கையே உங்களுடைய வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் சென்று விடும்.

நல்ல வேலை கிடைக்க வேண்டும், நல்ல காலேஜில் சீட்டு கிடைக்க வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், நல்ல தொழில் தொடங்க வேண்டும், என்று நீங்கள் எந்த ஒரு புதிய முயற்சியில், முதல் முறையாக காலை எடுத்து வைக்கும் போதும், யார் காலில் விழுந்து நமஸ்காரம் செய்து கொண்டு ஆசீர்வாதத்தை பெற்றால் வெற்றி கிடைக்கும். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.

- Advertisement -

வாழ்வில் வெற்றி பெற செய்ய வேண்டிய பரிகாரம்

இன்னைக்கு உங்களுக்கு முக்கியமான வேலை இருக்கிறது. அந்த வேலையில் எப்படியாவது வெற்றி உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளித்து விட வேண்டும். சூரியன் உதயமாகும் சமயத்தில் சூரிய பகவானை தரிசனம் செய்து அந்த ஆதவனின் ஆசிர்வாதத்தை முதலில் பெற்றுக் கொள்ளுங்கள்.

பூஜை அறைக்கு வந்து ஒரு விளக்கு ஏற்றி குலதெய்வத்தை மனதார வேண்டி பூஜை அறையில் இருக்கும் குலதெய்வத்தின் முன்பு முதலில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். இரண்டாவதாக உங்களுடைய வீட்டில் முன்னோர்களின் திருவுருவப்படம் இருக்கும் அல்லவா. அவர்களது முன்பாக ஐந்து நிமிடம் அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

- Advertisement -

நீங்கள் எந்த முக்கியமான காரியத்திற்காக வெளியில் கிளம்புகிறீர்களோ, அந்த விஷயத்தை முன்னோர்களிடம் சொல்லி, அந்த வேலை எனக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த போட்டோவுக்கு முன்பு விழுந்து நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். அப்போது அந்த முன்னோர்களின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்கும்.

நமக்கு முன்னால் வாழ்ந்தவர்கள், இறந்து விட்டார்கள். இன்று தெய்வமாக நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்றைக்குமே நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அவர்களை இரண்டு நிமிடம் நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு அவர்களுடைய காலில் விழுந்து நீங்கள் நமஸ்காரம் செய்யும் போது அவர்களுடைய மனது ஆரவாரத்துடன் குளிர்ந்து, உங்களுக்கு ஒரு ஆசிர்வாதத்தை கொடுப்பார்கள் பாருங்கள், அதில் உங்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக செழிப்பாக வாழும்.

- Advertisement -

ஆனால் யாருமே இன்று முன்னோர்களை நினைத்து கூட பார்ப்பது கிடையாது. மாதத்தில் ஒரு நாள் அமாவாசைக்கு வழிபாடு செய்வதை பெரிய விஷயம். வருடத்தில் ஒரு நாள் அவர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்கு கூட நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றோம். தினம் தினம் முன்னோர்களின் நினைத்து ஆசீர்வாதம் வாங்கக் கூடியவர்கள் வாழ்க்கையில் தோல்வி என்பது நிச்சயம் இருக்காது.

அதற்காக இறைவழிபாடு செய்ய வேண்டாமா என்ற கேள்வியை எழுப்ப வேண்டாம். இறைவழிபாடு ரொம்ப ரொம்ப முக்கியம். கூடவே சேர்த்து இந்த முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதன் மூலம் நமக்கு கிடைக்க கூடிய வெற்றி நிச்சயம் இரட்டிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.

பெரியவர்கள் மட்டும் தான் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டும் என்றெல்லாம் கட்டாயம் கிடையாது. தினமும் பள்ளிக்கூடம் செல்லக்கூடிய குழந்தைகள், பூஜை அறையில் சாமி கும்பிட்டு விட்டார்களா? அடுத்து முன்னோர்களையும் வணங்கச் சொல்லி அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள்.

தாத்தா பாட்டியை கும்பிட்டுப்போ நல்லது நடக்கும் என்று சொல்லுங்கள். அதில் ஒன்றும் தவறு கிடையாது. இதில் இன்னொரு சந்தேகம் எழும். அப்பாவுடைய அம்மா அப்பாவை வணங்குவதா அல்லது அம்மாவுடைய அம்மா அப்பாவை வணங்குவதா என்று இருவருமே முக்கியம்தான். மறைந்த முன்னோர்கள் எல்லாமே இறையடி சேர்ந்தவர்கள்.

இதையும் படிக்கலாமே: இந்த நாளில் வங்கி கணக்கை தொடங்கினால் உங்கள் பேங்க் பேலன்ஸை குறைக்க யாராலும் முடியாது.

அவர்களில் யாரை கும்பிடனும் யாரை கும்பிடக் கூடாது என்ற கட்டாயம் எல்லாம் கிடையாது. ஆக மொத்தத்தில் மறைந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டால் நீங்கள் வெற்றி காண்பீர்கள். அவ்வளவுதான். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -