நினைத்த காரியம் நிறைவேற ஆஞ்சநேயர் வழிபாடு

hanuman prayer
- Advertisement -

புதிதாக ஒரு காரியத்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது கைராசி மிக்கவராக பார்த்து அவர்களை ஆரம்பித்து வைக்க சொல்வார்கள். அதற்கு காரணம் அவர்கள் தொடங்கும் செயல் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் என்பது தான். ஒவ்வொரு நாளும் வியாபாரத்தை தொடங்கும் பொழுதும் கைராசி மிக்க நபராக பார்த்து வியாபாரத்தை செய்ய வேண்டும் என்று நினைப்பதும் உண்டு. அதேபோல் சுப காரியங்களுக்கு செல்லும் பொழுது கைராசி மிக்கவர்களை பார்த்துவிட்டு செல்வது என்பது மிகவும் சிறப்பு என்று பலரும் கூறுவார்கள். இப்படி நாம் கைராசி மிக்க நபர்களை பார்ப்பதற்கு பதிலாக ஆஞ்சநேயரை எந்த முறையில் வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆஞ்சநேயரை நாம் அனுதினமும் வழிபடும் போது நமக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். சனி பகவானின் தோஷத்தில் இருந்து வெளிவர முடியும் என்று நாம் கூறிக்கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை நாம் நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு துளசி அல்லது வெற்றிலை மாலையை சாற்றி தங்களால் இயன்ற அளவு வெண்ணையை அவருக்கு சாற்ற வேண்டும். பிறகு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து 11 முறை வலம் வர வேண்டும். இப்படி தொடர்ந்து 11 வாரங்கள் செய்துவர நினைத்த காரியம் நிறைவேறும்.

ஆலயத்திற்கு சென்று வழிபட முடியாது என்னும் சூழ்நிலையில் இருப்பவர்கள் அல்லது தங்கள் இல்லத்திற்கு அருகில் ஆலயம் எதுவும் இல்லை என்று நினைப்பவர்கள் தங்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்யலாம். இதற்கு ஆஞ்சநேயரின் உருவப்படம் ஒன்று வேண்டும். சனிக்கிழமை அன்று அவருடைய உருவப்படத்தை துடைத்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். பிறகு அவருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் தீபத்தை ஏற்றி வைத்து 11, 21 என்ற எண்ணிக்கையில் வெற்றிலையை மாலையாக தொடுத்து அவருடைய முழு படத்திற்கும் வரும் அளவிற்கு அவருக்கு சாற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு துளசி இலைகளை வைத்துக்கொண்டு “ஓம் ஆஞ்சநேயாய நமஹ” என்னும் மந்திரத்தை 11 முறையோ, 51 முறையோ, 108 முறையோ கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அவருக்கு நெய்வேத்தியமாக வெண்ணையை சமர்ப்பிக்க வேண்டும். இப்படி நாம் சனிக்கிழமை தோறும் அவரை வழிபடும் பொழுது அவருடைய அருளால் நாம் நினைத்த காரியம் நிறைவேறும்.

இதில் ஒரு முக்கியமான குறிப்பு என்னவென்றால் பிறருக்கு தீங்கு நினைக்காமல் நாம் செய்யும் எந்த காரியமாக இருந்தாலும் அந்த காரியத்திற்கு ஆஞ்சநேயர் நமக்கு உறுதுணையாக இருப்பார். மேலும் “ஸ்ரீ ராம ஜெயம்” என்னும் மந்திரத்தை 108 முறை எழுதி மாலையாக தொடுத்து ஆஞ்சநேயருக்கு போடுவது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் நன்றாக படிக்க விநாயகர் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிப்பாட்டு முறையை நாமும் பின்பற்றி ஆஞ்சநேயரின் முழு அருளால் நினைத்த காரியத்தை நிறைவேற்றுவோம்.

- Advertisement -