வெள்ளிக்கிழமை இந்த எண்ணெயில் தீபம் ஏற்றினால், தீபத்திலிருந்து வரும் வாசத்திற்கு, மகாலட்சுமி விரும்பி உங்கள் வீட்டிற்குள் தான் முதலில் காலடி எடுத்து வைப்பாள்.

mahalakshmi
- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமியின் வருகையை எதிர்பார்த்து தான் நம் எல்லோரது வீட்டிலும் பூஜை செய்கின்றோம். அந்த மகாலட்சுமி நம் வீட்டிற்குள் எந்த மன சஞ்சலமும் இல்லாமல், மனம் விரும்பி நுழைய வேண்டுமென்றால், வெள்ளிக்கிழமை அன்று நம்முடைய வீடு எப்படி இருக்க வேண்டும். குறிப்பாக எந்த தீப சுடரின் ஒளிக்கு, எந்த தீபத்தின் வாசத்திற்கு மகாலட்சுமி நம் வசியம் ஆகிவிடுவாள் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதோடு மட்டுமல்லாமல் இந்த தீபச்சுடரில் இருந்து வரும் வாசம் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சரி அது எந்த தீபம் அதை எப்படி ஏற்றலாம் என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

karpura-ennai

வெள்ளிக்கிழமை காலை நம்முடைய வீடு எப்படி இருக்க வேண்டும். நிலை வாசலில் கோலமிட்டு, நிலைவாசல் படிக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வீட்டிற்குள் நுழையும் போதே நம் வீடு மங்களகரமாக இருக்க வேண்டும். வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் போட்டு கமகம வாசத்தோடு இருக்க வேண்டும். அழுக்குத் துணிகள் இருக்கக்கூடாது. எச்சில் பாத்திரமும் இருக்கக் கூடாது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் நம்முடைய வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம் ‘கற்பூர எண்ணெய் தீபம்’. சில கடைகளில் கற்பூர எண்ணெய் கிடைக்கின்றது. ஆனால் அந்த கற்பூர எண்ணெய் எல்லோருக்கும் சுலபமான முறையில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆகையால் உங்களுடைய வீட்டில் இறைவனுக்காக ஏற்றும் சூடம் இருந்தாலே போதும். இந்த கற்பூர எண்ணெய் தீபத்தை மகாலட்சுமிகாக நம்முடைய, வீட்டில் ஏற்று விட முடியும். மெழுகு கற்பூரத்தை பயன்படுத்த வேண்டாம். கட்டி கற்பூரம் தான் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

ஒரு மண் அகல்விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமையில் நல்லெண்ணெயை விட, பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றுவது சிறப்பான பலன்களை நமக்கு கொடுக்கும். அகல் விளக்கில் ஊற்றி இருக்கும் நெயில் ஒரு துண்டு, சிறிய கற்பூரத்தை நன்றாக நசுக்கி தூள் செய்து நெய்யோடு சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பின்பு மஞ்சள் நிற திரியை அந்த விளக்கில் போட்டு தீபத்தை ஒளிர வைக்க வேண்டும். இந்த தீபத்தை ஏற்றிய உடனே நம்முடைய வீட்டில் லேசாக ஒரு வாசம் வரும். அந்த வாசம் ஆனது மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் நிலை வாசல் படியில் இதேபோல் இரண்டு தீபங்களையும், உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, மகாலட்சுமிக்கு பூஜை செய்து பாருங்கள். எங்கிருக்கும் மகாலட்சுமியும், எங்கிருக்கும் நேர்மறை ஆற்றலும், அதிர்ஷ்டமும் சந்தோஷமும் உங்கள் வீடு தேடி வருவதை நிச்சயமாக உங்களால் உணர முடியும். பிறகு என்ன? உங்கள் வீட்டில் வறுமையே இருக்காது.

deepam1

வீட்டில் உள்ளவர்கள் இந்த தீப ஒளியிலிருந்து வரும் வாசத்தை சுவாசிக்கும் போது, மன அமைதி பெறும். இனம் புரியாத சந்தோஷம் மனதில் ஏற்படும். வீட்டில் சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கவே இருக்காது. சண்டை சச்சரவுகள் இல்லாத வீட்டில் வீட்டிற்குள் வந்த மகாலட்சுமி நிச்சயமாக வெளியே செல்ல மாட்டாள்.

deepam

ஆக இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கிடைப்பதோடு, மன நிம்மதியும் சந்தோஷமும் ஆரோக்கியமும் நமக்கு கிடைக்கப் போகின்றது. நாளை வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்றி உங்களுக்கு மனநிறைவு ஏற்படும் பட்சத்தில், வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் இந்த தீபத்தை ஏற்றி எல்லோரும் பயன் அடைய வேண்டும் என்று அந்த மகாலட்சுமியிடம் மனதார வேண்டுதலை வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -