இந்த தவறை செய்வதால் தான் உங்கள் கஷ்டம் இரட்டிப்பாகிறது. இன்றிலிருந்து இந்த தவறை நிறுத்துவதாக உறுதிமொழி எடுத்தால், நாளையே உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக மாறும்.

- Advertisement -

கஷ்டம் என்ற ஒன்று எங்கிருந்தோ வருவது கிடையாது. கஷ்டத்தை நாம்தான் உருவாக்கிக் கொள்கின்றோம். அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாமலேயே நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் தான், நம் வாழ்க்கையில் கஷ்டங்கள் வருவதற்கு காரணமாக இருக்கின்றன. கர்மவினைகள், பாவ புண்ணிய கணக்குகள் என்று பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி எல்லாம் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது கிடையாது. அன்றாடம் நம் வாழ்வில் தினம் தினம் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொண்டாலே போதும். நம் வீட்டில் இருக்கும் கஷ்டத்தை துரத்தி அடித்து விடலாம். அது என்ன தவறு. எப்படி திருத்திக் கொள்வது சுருக்கமாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

sad

நாம் எதை அனுதினமும் நினைத்துக்கொண்டே இருக்கின்றோமோ, அதுதான் நம்மிடம் தங்கும். எடுத்துக்காட்டாக பாசம் உள்ள இடத்தில்தான் உறவுகள் போய் சேரும். இந்த உறவுகள், நம்மை நினைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் நம்மிடம் பேசி நம்மை அழித்துக் கொண்டே இருக்கின்றது அவர்கள் வீட்டிற்கு தான் நாம் அடிக்கடி செல்வோம். நாம் எதை அன்போடு அரவணைத்துக் கொண்டு தினம்தோறும் அந்தப் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கின்றோமோ, அந்த நபர் நம்முடனே இருப்பார்கள். இதுதானே இயல்பு.

- Advertisement -

இன்று நாம் அதிகமாக நினைப்பது சந்தோஷத்தையா, துக்கத்தையா. எதை அதிகமாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். எதை அன்போடு அரவணைத்துக் கொண்டிருக்கின்றோம் என்று சற்று சிந்தித்து பாருங்கள். யாராவது உங்களிடம் வந்து எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் உங்கள் வாயிலிருந்து வரக்கூடிய முதல் பதில் என்னவாக இருக்கும். ‘ஏதோ இருக்கின்றேன், விடாப்பிடியாக கஷ்டம் என்னை துரத்திக் கொண்டுதான் இருக்கின்றது’.

sad-crying

இப்படியாக உடனடியாக நம்மிடத்தில் இருக்கும் கஷ்டங்களை புராண பாட்டு பாடி விடுவோம். இது தான் தவறு. இந்த பழக்கத்தை மாற்றிப் பாருங்கள். கஷ்டம் இருக்கின்றது என்று நாம் அடுத்தவர்கள் இடத்தில் சொல்ல சொல்ல அந்த கஷ்டம் நம்மை விடாமல் பிடித்துக் கொள்ளும். யாராவது உங்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டால் ‘நலமாக உள்ளேன், வாழ்க்கை சந்தோஷமாக இருக்கின்றது என்ற வார்த்தைகளை பேச வேண்டும்’.

- Advertisement -

குறிப்பாக நீங்கள், உறவினர்களது வீட்டிற்கு சென்றாலோ அல்லது உங்களுடைய வீட்டிற்கு யாரேனும் உறவினர்கள் வந்தாலும், அவர்களிடம் உங்களுடைய கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதாவது சதாகாலமும் கஷ்டத்தை சொல்லி புலம்பக் கூடாது. நம் கஷ்டங்களை பகிர்ந்து கொள்வதற்கு என்று சில நபர் இருப்பார்கள். அவர்களிடம் சில நேரங்களில் மட்டும்தான் நம்முடைய கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, எந்நேரமும் யாரை பார்க்கும் போதும் என்னுடைய வாழ்க்கையில் ‘கஷ்டம் கஷ்டம் கஷ்டம்’ என்ற வார்த்தையை சொல்லி கொண்டே இருக்கக் கூடாது.

sad

இந்த கஷ்டம் என்ற வார்த்தையை தூக்கி வைத்து நீங்கள் கொண்டாட கொண்ட, அந்த கஷ்டத்திற்கு உங்கள் மீது இஷ்டமாகி விடுமாம். அதன் பின்பு நீங்கள் அதை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டாலும், அது உங்களை விட்டு செல்லாது. யாருக்குத்தான் இல்லை கஷ்டம். இருப்பினும் உங்களை சந்திக்கும் நபர்கள் உறவினர்கள் நண்பர்கள் இவர்களிடத்தில் நீங்கள் நன்றாக இருப்பதாக, நன்றாக வாழ்க்கையை நடத்திச் செல்வதாக சந்தோஷமாக இரண்டொரு வார்த்தைகளை பேசினாலே போதும். சந்தோஷத்தை சந்தோஷமாக சொல்லி தூக்கி வைத்துக் கொண்டாடி பாருங்கள். சந்தோஷம் உங்களிடம் நிரந்தரமாக தங்கம். முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -