பொன் பொருள் சேர, நாளை கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்திக்கு, விநாயகருக்கு இப்படி வேண்டுதல் வைத்து பாருங்கள். வேண்டியது உடனே கிடைக்கும்.

vinayagar
- Advertisement -

மிக மிக எளிமையாக வழிபடக்கூடிய தெய்வம் தாங்க இந்த விநாயகர். மனம் உருகி தோப்புக்கரணம் போட்டு, இரு கைகளைக் கூப்பி நம்பிக்கையோடு வேண்டுதல் வைத்தாலும், அந்த வரங்களை உடனே கொடுத்து விடுவார். குழந்தை மனம் கொண்ட இந்த விநாயகர் வழிபாட்டை, சங்கடஹர சதுர்த்தி அன்று எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதை பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிலும் கார்த்திகை மாதத்தில் வந்திருக்கும் விசேஷமான இந்த சங்கடகர சதுர்த்தி வழிபாட்டை யாரும் தவற விடாதிங்க.

நாளைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு ‘ஓம் விக்னங்களை தீர்க்கும் தீர்க்கும் விநாயகா போற்றி’ என்ற வார்த்தையை சொல்லி உங்களுடைய விரதத்தை தொடங்குங்கள். விரதம் இருப்பது அவரவர் விருப்பம். எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருக்கலாம் அல்லது பால் பழம் ஒருவேளை உணவு சாப்பிட்டு விரதம் இருக்கலாம். அது உங்களுடைய ஆரோக்கியத்தை பொருத்தது. மூன்று வேளை சாப்பிட்டு விநாயகர் வழிபாடு செய்தாலும் தவறு கிடையாது.

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டிற்கு உகந்த நேரம் மாலை நேரம் தான். மாலை 6:00 மணிக்கு வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். வீட்டில் விநாயகரின் சிலை இருந்தால், அதற்கு கட்டாயம் அபிஷேகம் செய்ய வேண்டும். விநாயகருக்கு மிகவும் பிடித்த வெள்ளருக்கன் பூ, அருகம்புல், அல்லது செம்பருத்தி பூ இந்த பூக்களால் அலங்காரம் செய்து வைத்துவிட்டு விநாயகருக்கு பிடித்த மோதகம் நிவேதியமாக வைக்க வேண்டும்.

வீட்டில் இந்த நிவேதினத்தை செய்து வைத்து மனதார உங்களுடைய பிரார்த்தனையை விநாயகரிடம் சொல்லி, பூஜையை நிறைவு செய்ய வேண்டும். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து விநாயகருக்கு பிடித்த மந்திரங்கள் ஏதாவது இருந்தால் அதை சொல்லி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு செல்லுங்கள். கோவிலில் விநாயகருக்கு உங்களால் முடிந்த அருகம்புல் பூக்கள் வாங்கி கொடுக்கலாம். கட்டாயமாக சிதறு தேங்காய் உடைக்க வேண்டும். உங்களுக்கு இருக்கும் ஏதாவது ஒரு சங்கடம், ஏதாவது ஒரு கஷ்டத்தை மனதில் நினைத்து அந்த கஷ்டம் அடுத்த சங்கடஹர சதுர்த்திக்குள் தீர வேண்டும் என்று சிதறு தேங்காயை உடைத்து விட்டு அடுத்த மாதம் 51 கொழுக்கட்டை செய்து, கோவில் நெய்வேத்தியமாக வைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக கொடுக்கிறேன் என்று வேண்டிக் கொண்டால், அந்த வேண்டுதல் உடனே பலிக்கும். (எண்ணிக்கை என்பது உங்கள் விருப்பம் தான். ஒற்றைப்படையில் 11 கொழுக்கட்டை, மோதகம் எது செய்து கொடுத்தாலும் நல்லது.)

இந்த மாதம் இந்த வேண்டுதலை விநாயகரிடம் வைத்துப் பாருங்களேன். அடுத்த மாதத்திற்குள் உங்களுடைய சங்கடங்கள் எல்லாம் பறந்து போய்விடும். பொன் பொருள் சேர, அல்ல அல்ல ஐஸ்வர்யம் கிடைக்க, கடன் சுமை குறைய, திருமண தடை விலக ஏழரை சனி பாதிப்பில் இருந்து விலக, கிரக தோஷங்கள் நீங்க, நோய் நொடி இல்லாமல் வாழ நம்பிக்கையோடு சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை செய்து பாருங்களேன். வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

- Advertisement -