இதுவரை இந்த குழம்பை ருசிக்காத நாக்கு அதிர்ஷ்டமே இல்லாத நாக்கு தான். வெங்காயம் தக்காளி கூட சேர்க்காமல், 10 நிமிடத்தில் கறி குழம்பை மிஞ்சும் சுமையில் சூப்பரான மருத்துவ குழம்பு ரெசிபி இதோ உங்களுக்காக.

kuzambu
- Advertisement -

கருவேப்பிலை குழம்பு செய்வது எப்படி

இந்த குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது அவ்வளவு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும், தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்தவர்களுக்கு சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழந்தை போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். வாங்க அந்த சூப்பரான மருத்துவக் குழம்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

கருவேப்பிலை குழம்பு செய்முறை:

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கழுவி சுத்தம் செய்த கருவாப்பிலை – 1 கைப்பிடி அளவு, கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு, இஞ்சி தோல் சீவி நறுக்கியது – 1 இன்ச், மிளகு – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுந்துபோல அரைத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை தழையும் கொத்தமல்லி தழையும் சம அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விழுது இப்போது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு மண்சட்டி அல்லது அடி கனமான கடாய் வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் – நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, தோல் உரித்த பூண்டு பல் – 10 லிருந்து 15, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக வதக்க வேண்டும். பூண்டு எண்ணெயில் வதங்கி வரட்டும். ரொம்பவும் நிறம் மாற வேண்டாம். இரண்டு நிமிடம் போல பூண்டு எண்ணெயிலேயே வதங்கட்டும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை எடுத்து கடாயில் ஊற்றி நன்றாக எண்ணெயில் வதக்க வேண்டும். தாளித்த பூண்டு, அரைத்த இந்த கருவேப்பிலை கொத்தமல்லி தழை எல்லாம் வதங்கி சுருள சுருள நமக்கு கிடைக்கும். அப்படியே இந்த விழுதின் பச்சை நிறம் மாறும். அப்போது குழம்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு தேவையான அளவு, போட்டு நன்றாக கலந்து விட்டு, நெல்லிக்காய் அளவு – புளி கரைசலை, இதில் ஊற்றி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மீண்டும் குழம்பை ஒரு மூடி போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

புளியில் இருக்கும் பச்சை வாடை நீங்கி குழம்பு சுண்டி எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் – 1/2 ஸ்பூன் சேர்த்து, நன்றாக குழம்பை கலந்து விட்டு, வெல்லம் கரைந்த உடன் அடுப்பை அணைத்து, மேலே கொஞ்சமாக கொத்தமல்லி தழையை தூவி, சுடச்சுட சாப்பிட்டு பாருங்க. இதோட டேஸ்ட் வேற லெவல்.

இதையும் படிக்கலாமே: காரசாரமா ஆந்திரா ஸ்டைல் கருவேப்பிலை பூண்டு காரப்பொடி இப்படி அரச்சு பாருங்க. சுடச்சுட வடித்த குண்டான் சாதமும் வீட்டில் இருப்பவர்களுக்கு பத்தவே பத்தாது..

குழம்பு தண்ணீராக இருக்கக் கூடாது. திக்காக வரும் வரை குழம்பை அடுப்பிலேயே சுண்ட விட்டு விடுங்கள். இந்த குழம்புக்கு, குழம்பு மிளகாய்த்தூள் தான் சேர்க்க வேண்டும். சாம்பார் பொடி போடக்கூடாது. சுவை மாறிவிடும். அப்படி இல்லை என்றால் மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், சேர்த்து இந்த குழம்பை வையுங்கள். ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. டேஸ்ட் பண்ணி பாருங்க. ஆரோக்கியமா வாழுங்க.

- Advertisement -