காலம் காலமாக விடாமல் பின்தொடரும் கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கரு மிளகு. இனி உங்கள் வாழ்க்கையில் கசப்பான சம்பவம் நடக்க கூடாது என்றால் இதை பண்ணுங்க.

sivan-vilakku
- Advertisement -

உன்னுடைய மனநிலை நன்றாக இருந்தால் போதும். கிரகநிலை சரியில்லை என்றாலும் என்றாலும் உங்கள் வாழ்க்கை நல்லா தான் இருக்கும். உன்னுடைய மனநிலை சரியில்லாமல் போனால், கிரகநிலை என்னதான் உச்சகட்டத்தில் இருந்தாலும் உனக்கு கஷ்டம் வரத்தான் செய்யும். வாழ தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் கஷ்டம் என்பது இருக்காதுங்க. இவ்வளவு தான். இதை புரிந்து கொண்டு வாழத் தொடங்குங்கள். நீங்கள்தான் உங்கள் வாழ்க்கையில் ராஜா.

என்னதான் அடுத்தவர்கள் அட்வைஸ் செய்தாலும், நம்முடைய மனதிற்குள் ஒரு குழப்பம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்க்கையில் என்ன பாவம் செய்தோமோ, தெரியவில்லை. இன்று இவ்வளவு கஷ்டப் படுகின்றோம். இந்த கஷ்டத்திற்கு ஏதாவது தீர்வு கிடைக்க வழி உண்டா. அதுவும் ஆன்மீக ரீதியாக. கர்மவினைகளை, நம்மை துரத்தும் கஷ்டங்களை குறைக்கும் சுலபமான ஒரு பரிகாரம் உங்களுக்காக.

- Advertisement -

தோஷங்கள், நம்மைத் துரத்தும் கஷ்டங்கள், கர்மவினைகள், எல்லாவற்றிற்கும் தீர்வை கொடுக்கக்கூடிய நாள் தான் பிரதோஷம். சிவபெருமானை நினைத்து பிரதோஷ காலத்தில், சிவன் கோவிலில் இருந்து சிவ பெருமானை மனதார தரிசனம் செய்து, பிரார்த்தனை வைத்தாலே நம்முடைய கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து போகும். இதுதான் முதல் பரிகாரம்.

அடுத்தபடியாக பிரதோஷ காலத்தில் உங்கள் வீட்டில் இருந்து நீங்கள் கிளம்பும்போது உங்களுடைய கையில் 3 வரமிளகாய், 1 ஸ்பூன் அளவு மிளகு, இந்த இரண்டு பொருட்களையும் ஒரு பேப்பரில் வைத்து மடித்து எடுத்துச் செல்லுங்கள். கோவிலுக்கு சென்று பின்பு அந்த பிரதோஷ காலம் முடிவதற்குள். அதாவது மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள் பேப்பரில் மடித்து வைத்திருக்கும் இந்த இரண்டு பொருட்களையும் உங்கள் உள்ளங்கையில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நந்திக்கு அருகில் செல்லுங்கள். சிவபெருமானை பார்த்தவாறு ‘எனக்கு இருக்கக்கூடிய தோஷங்கள் கர்ம வினைகள் அனைத்தும் கரைந்து போக வேண்டும்’ என்று மனதார வேண்டிக்கொண்டு உங்கள் கையில் வைத்திருக்கும் மிளகாயையும் வர மிளகாயையும் அப்படியே 3 முறை உங்களுடைய தலையில் சுற்றி, மீண்டும் அதே காகிதத்தில் வைத்து மடித்து கோவிலில் இருந்து வரும் போது உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்து விடுங்கள். (நந்தி தேவருக்கும் சிவபெருமானுக்கும் வழியை மறித்துக் கொண்டு நடுவே போய் நிற்கக் கூடாது. கொஞ்சம் ஓரமாக நின்று இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள்.)

வீட்டிற்கு வந்தவுடன் சாம்பிராணி தூபம் போடும் இரும்பு தூபக்கால் இருந்தால் அதில் ஒரு கட்டி கற்பூரம் வைத்து, ஒரு கொட்டாங்குச்சி வைத்து நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் இந்த மிளகாயையும், மிளகையும் போட்டு பொசுக்கி விடுங்கள். அவ்வளவு தான். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் பொசுங்கிப் போய்விடும். அறிந்தும் அறியாமலும் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஒருவழியாக ஒரு தீர்வினை அந்த ஆண்டவன் கொடுப்பான்.

பரிகாரத்தின் மூலம் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் குறைக்கப்படும். பாவம் செய்துவிட்டு பரிகாரத்தையும் தேடக் கூடாது. பரிகாரத்தை செய்துவிட்டு பாவச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது. ‌அறியாமல் செய்த பாவத்திற்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு பரிகாரத்தை தேடிக் கொள்கின்றோம். இந்த மனநிறைவு நம்முடைய வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை நல்லதை கொடுக்கத் தொடங்கும். வரக்கூடிய கஷ்டங்களும் பெரிய பாதிப்பை கொடுக்காது.

நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்யுங்கள். பரிகாரதுடன் சேர்ந்து உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு உதவி செய்து வரும் பட்சத்தில், கர்ம வினைகளையும் கஷ்டங்களையும் நினைத்து நீங்கள் ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். உங்கள் கஷ்டத்தை அந்த ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -