கஷ்டங்களை மட்டுமே அனுபவிப்பவரா நீங்கள்? உங்கள் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் தவிடு பொடியாகும் அதிசயத்தை உங்களால் காண முடியும்.

Vinayagar
- Advertisement -

அனைவரின் வாழ்க்கையிலும் கஷ்டம் என்பது ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் கஷ்டம் இருந்தால் அதை சமாளித்து விடலாம். ஆனால் வாழ்க்கையே கஷ்டமாக இருப்பவர்கள் அந்த கஷ்டத்தை எண்ணி எண்ணி வருத்தப்படுவார். அப்படிப்பட்டவர்களுக்கான அருமையான ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு நம்முடைய கர்ம வினைகளே காரணம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அந்த கஷ்டங்களில் இருந்து வெளி வருவதற்காக நாம் வழிபட வேண்டிய தெய்வமாக கருதப்படுபவர் விநாயகப் பெருமானே. ஆதலால் தான் அவரை சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர விநாயகர் என்று கூறுகிறோம். மேலும் விக்ணங்களை தீர்க்கும் விக்னேஸ்வரர் என்றும் அழைக்கிறோம். அப்படிப்பட்ட விநாயகருக்கு நாம் ஒரே ஒரு முறை இவ்வாறு வழிபடுவதன் மூலம் அந்த விநாயகர் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து விடுவார் என்பது அனுபவபூர்வமான உண்மை.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான பொருள் தேங்காய். இந்த வழிபாட்டை நாம் ஆரம்பிக்கும் கிழமை திங்கட்கிழமையாக இருக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். மேலும் முதல் நாள் ஒரு தேங்காயும், இரண்டாவது நாள் இரண்டு தேங்காயும், மூன்றாவது நாள் மூன்று தேங்காயும், நான்காவது நாள் 4 தேங்காயும், ஐந்தாவது நாள் ஐந்து தேங்காயும் நமக்கு தேவைப்படும். ஆக மொத்தம் நாம் 15 தேங்காயை வாங்கி நம் வீட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

திங்கட்கிழமை அன்று காலை சுத்தமாக நீராடி, வீட்டு பூஜை அறையில் பூஜை செய்த பிறகு ஒரு தேங்காயை எடுத்து நம் தலையை 3 முறை சுற்ற வேண்டும். பிறகு அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரின் பாதத்தில் அந்த தேங்காயை வைத்து அவருக்கு அர்ச்சனை செய்து, அந்த தேங்காயை எடுத்து வந்து சிதறு காயாக உடைக்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று முறை வலம் வந்து வீடு திரும்ப வேண்டும்.

- Advertisement -

மறுநாளும் இதே போல் இரண்டு தேங்காயை எடுத்து ஒவ்வொரு தேங்காயையும் மூன்று முறை நாம் தலையை சுற்றி அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகருக்கு அர்ச்சனை செய்து அந்த தேங்காய்களை சிதறு காயாக உடைக்க வேண்டும். இவ்வாறு ஐந்து நாட்களும் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். ஐந்தாவது நாள் அருகம்புல்லால் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கழுத்தை நெரிக்கும் கடனில் இருந்தும் உங்களை வாழவே விடாமல் பாடாய்படுத்தும் எதிரிகளின் தொல்லையிலிருந்தும் வெளிவர வளர்பிறை அஷ்டமி நாளான இன்று இரவுக்குள் பைரவருக்கு இந்த இரண்டு தீபத்தை ஏற்றி விடுங்கள்.

இவ்வாறு நாம் தேங்காய் உடைப்பதன் மூலம் தேங்காய் எவ்வாறு சிதறுகிறதோ அதேபோல் நம் வாழ்க்கையில் இருக்க கூடிய கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும் தூள் தூளாக சிதறிவிடும் என்பதே விநாயகருக்கு சிதறு காய் உடைப்பதன் நோக்கமாகும். இந்த சிதறுகாய் பரிகாரத்தை நம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை செய்து நம்முடைய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து மகிழ்ச்சியோடு வாழலாம்.

- Advertisement -