உழைக்கிற காசு வீட்டில் தங்காமல் போக, எல்லோரது வீட்டிலும் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு இது! இந்த தவறை செய்பவர்கள் வீட்டில் நிச்சயமாக பணம் காசு சேர்வதற்கு வாய்ப்பே இல்லை.

பொதுவாகவே நடுத்தரவர்க்க வர்க்கமாக இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கையில், பெரிய அளவில் பணக்காரராக மாறுவது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். நம்மிடத்தில் சொந்தமாக ஒரு வீடு, ஒரு நிலம் இருந்தால் கூட போதும். அதற்கு பின்பு நம்முடைய வாழ்க்கையை மேல்நோக்கி உயர்த்தி செல்வதில் சிரமங்கள் குறைவாக இருக்கும். அதுவே ஒரு வாடகை வீட்டில், நடுத்தர வர்க்கத்தில் வசித்துக் கொண்டு, இருப்பவர்களால் நேர்மையான முறையில் அவ்வளவு சுலபமாக முன்னேற்றப் பாதையில் சென்று விடமுடியாது. வாடகை வீட்டில் நடுத்தர வர்க்கத்தில், நடுத்தர வருமானத்தில் வசிக்கக்கூடிய எல்லோருக்கும் இது நன்றாகவே புரியும்.

cash-sadman

இப்படி நடுத்தர வாழ்க்கையிலிருந்து தங்களுடைய வாழ்க்கையை அடுத்த லெவலுக்கு உயர்த்தி செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஒரு தவறை உங்கள் வீட்டில், நீங்கள் செய்து வந்தால் அதில் ஒரு சிறிய மாற்றத்தை கொண்டு வந்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அது என்ன தவறு? அதற்கு ஆன்மீக ரீதியாக என்ன அர்த்தம் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை பற்றிதான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே ஒருவருக்கு கெட்ட நேரத்தில் கஷ்டத்தை கொடுப்பது ராகு கேது தான். இந்த கேதுவின் அம்சமாக சொல்லப்படுவது கயிறு. இதைப்பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த கயிறை, எந்த வீட்டின் உள்ளே, கொடிகட்டி துணிகளை அதன்மேல் தொங்கவிட்டு இருக்கின்றார்களோ, அந்த வீட்டில் எல்லாம் தரித்திரம் பிடிக்கத்தான் செய்யும்.

rahu-ketu

கேது என்றாலே அவர் வீட்டின் பின்பக்கத்தில் இருக்க வேண்டும். அல்லது வீட்டின் மொட்டை மாடியில் இருக்க வேண்டும். கேதுவின் அம்சம் கொண்ட கயிறை கொண்டுவந்து வீட்டிற்குள் கட்டி, அதன் மேலே துணியை காய வைத்தால் நிச்சயமாக உங்கள் வீட்டில் பண கஷ்டம் வரத்தான் செய்யும்.

- Advertisement -

வீட்டில் இடவசதி இல்லாமல் இருப்பவர்கள் கட்டாயம் இதை செய்து ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சிறிய வீட்டில் வசிப்பவர்களால், எல்லோராலும் துணியை வெளிப்பக்கத்தில் காயப் போட முடியாது. இருப்பினும் இதற்கு என்ன தீர்வு? உங்களுடைய வீட்டிலேயே ஒதுக்குப்புறமான இடத்தில் சுவர் ஓரத்தில் கொடியை கட்டிக்கொள்ளுங்கள்.

cloth-drying1

வரவேற்பறையின் நடுப்பக்கத்தில் குறுக்கும் நெடுக்குமாக கொடி கட்டுவது, படுக்கை அறையில் குறுக்கும் நெடுக்குமாக கொடி கட்டுவது, வீட்டு வாசலில் நுழையும் போது குறுக்கும் நெடுக்குமாக கட்டுவது, என்ற பழக்கத்தை கொஞ்சம் மாற்றிப் பாருங்கள். குறிப்பாக நம்முடைய வீட்டில் நாம் நடக்கும் போது நம்முடைய தலைக்கு மேல் கொடி இருக்கக் கூடாது.

cloth

இதை எல்லாவற்றையும் உங்களால் கடைபிடிக்க முடியவில்லை என்றால் செலவோடு செலவாக, துணியை உலர வைப்பதற்கு ஸ்டாண்டுகள் இப்போது விற்கின்றது. அப்படி ஒரு ஸ்டாண்டை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டு அதில் துணியை காய வைத்து மடித்து வைத்துக் கொள்ளுங்கள். அழுக்கு துணியாக இருந்தால் அதற்கு என்று ஒரு கூடையை வைத்து அதன் உள்ளே போட்டு வையுங்கள் துணியை கொடியில் தொங்க வைத்தால் நிச்சயமாக உங்களுடைய வீட்டில் அதிர்ஷ்டம் குறையும். தரித்திரம் பிடிக்கும். உழைத்த பணம் கையில் தங்காது.

stand

கொஞ்சம் சற்று சிந்தித்து பாருங்கள். வசதி படைத்தவர்களாக இருந்தால் அவர்கள் அழுக்குத் துணியை துவைக்காமல் இருந்தாலும், அவர்களுடைய வீட்டிற்குள் கொடியை கட்டி அதில் தொங்க விட மாட்டார்கள். கண்ணுக்குத் தெரியாத பக்கெடிலோ அல்லது கப்போர்டில் சுருட்டிப் போட்டு வைத்து இருப்பார்களே தவிர, அவர்களுடைய வீட்டில் கொடியோ அல்லது அழுக்கு துணியை தொங்குவதை நம்மால் காணமுடியாது. உங்களுக்கும் இந்த குறிப்பில் நம்பிக்கை இருந்தால் உங்களுடைய வீட்டில் உள்ள கொடிகளை சிரமம் பார்க்காமல் சீரமைத்து பாருங்கள். உங்களுடைய கஷ்டத்திற்கு நிச்சயமாக ஒரு விமோசனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்கலாமே
குக்கர் விசில் வழியாக பருப்பு வெளியே வருகிறதா? எவ்வளவு நேரம் ஆனாலும் குக்கர் விசில் சத்தம் கொடுக்கவில்லையா? அப்படின்னா இத ஃபாலோ பண்ணுங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.