உங்களுக்கு வர போகும் கெடுதல், வாசல் வரைக்கும் வந்தால்கூட, வாசலை தாண்டி, உங்க வீட்டுகுள்ள நுழையவே முடியாது. வாசல் தெளிக்கும் தண்ணீர்ல் இத 1 சிட்டிகை கலந்துருங்க!

nilavasal

நமக்கு வரக்கூடிய நல்லது கூட சிறிது தாமதமாகன் வரும். ஆனால், வரக்கூடிய கெடுதல் முந்தி அடித்துக்கொண்டு எந்த ரூபத்தில் வந்தது என்றே தெரியாது. ஆனால், வீட்டிற்குள் பிரச்சனையாக, சண்டையாக, பண கஷ்டம் ஆக, மன கஷ்டமாக, உடல்நல கோளாறாக வந்து நிற்கும். என்ன செய்வது? நல்லதை ஏற்றுக்கொள்ளும் மனது, கெட்டதை மட்டும் உடனே ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இது எல்லோருக்கும் இருக்கும் இயல்பான ஒன்று தான். சரி, நமக்கு வரக்கூடிய கெடுதலை வாசலிலேயே தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி கொண்ட ஒரு சின்ன பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sukku

பொதுவாகவே தாந்த்ரீக முறைகளில் சுக்குத்தூள், லவங்கம், பட்டை, வசம்பு இவைகளுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு என்று சொல்லுவார்கள். இது, நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இந்த பொருட்களுக்கெல்லாம் ஏன் பணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது என்று முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.

குறிப்பாக, வாசம் அதிகம் உள்ள பொருட்களுக்கெல்லாம் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கும். எதிர்மறை ஆற்றலை அழிக்கக் கூடிய சக்தியும் அதிகமாக இருக்கும். அந்த வரிசையில் வசம்பு பொடி, லவங்கப்பட்டை பொடி, பச்சைக் கற்பூரம், சுக்கு இதுதவிர நறுமணத்தை தரக்கூடிய, அத்தர், ஜவ்வாது, புனுகு இந்த பொருட்களுக்கு எல்லாமே பாசிட்டிவ் எனர்ஜியை அதிகப்படுத்தக் கூடிய தன்மை இருக்கிறது. இதனால் தான் இந்தப் பொருட்களை வைக்கும் இடத்தில் பணம் காசு சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எதிர்மறை ஆற்றல் விலகிவிட்டால், தானாக அந்த இடத்தில் நல்லது நடக்க ஆரம்பிக்கும் அல்லவா? இதுவும் ஒரு காரணம்.

krambu

நம்முடைய வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து தினமும் கோலம் போடுவோம். அந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூளை தெளித்து கோலம் போட்டால், நம் வீட்டிற்கு மிகவும் நல்லது என்று சொல்லுவார்கள். இந்த மஞ்சள் பொடியோடு சேர்த்து, இன்னும் சில பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்களேன். சுக்குத்தூள், வசம்புத் தூள், பட்டைத் தூள்,  லவங்க தூள் இந்த பொருட்களில் எல்லா வகையான தூளையும் ஒரு டீ ஸ்பூன் எடுத்து கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

அதிலிருந்து ஒரு கால் ஸ்பூன் தினமும் காலை வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்கும் போது, அந்த தண்ணீரில் கலந்து வாசல் தெளித்து விட்டு விடுங்கள். இந்த வாசனை மிகுந்த தூள்களை, வாரத்திற்கு ஒருநாள் உங்களுடைய வீட்டை சுத்தப்படுத்தி விட்டு, மூலைமுடுக்குகளில் போட்டாலும் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும்.

nila-vasal

உங்களுடைய வீட்டிற்குள் வருபவர்களுக்கு பாதங்களில், எதிர்மறை ஆற்றல் இருந்தாலும், அவர்களது மனதில் எதிர்மறை ஆற்றல் இருந்தாலும், அதை ஈர்த்துக் கொள்ளக் கூடிய சக்தி இந்த பொடிகளுக்கு உள்ளது. உங்க வீட்டுக்கு, குறிப்பா சில பேர் வந்துட்டு போனதுமே, வீட்ல பெரிய பிரச்சனை வந்துரும். அந்தப் பிரச்சனை ஏன் வந்தது, எப்படி வந்தது, எதுக்கு வந்ததுனே தெரியாது. ஆனா, உங்க மனநிம்மதியைக் கெடுக்கிற அளவுக்கு பிரச்சனைகள் வரும். இப்படிப்பட்ட எதிர்பாராத பிரச்சினைகளை குறைப்பதற்கு இது ஒரு சுலபமான தாந்திரிக வழி என்று சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் முயற்சி செய்து பார்த்தால் போதும்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் கைமாத்தாக கொடுத்த பணத்திலிருந்து, கடனாக கொடுத்த பணம் வரைக்கும், ஒரு ரூபாய் மிச்சம் இல்லாமல் வசூலாகிவிடும்! வாராக் கடனை வசூல் செய்யும் சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.