வெறும் 10 நிமிடத்தில் பச்சைப் பயிறு வைத்து சூப்பரான ஒரு கிரேவி தயார் செய்யலாம். இந்த கிரேவி செய்ய பருப்பு வேகும் நேரம் கூட எடுக்காதுன்னா பார்த்துக்கோங்க.

gravy_tamil2
- Advertisement -

வெறும் பத்து நிமிடத்தில் மிக மிக எளிமையான முறையில் ஆரோக்கியம் தரும் பச்சை பயிறு வைத்து ஒரு சுவை தரும் கிரேவியை எப்படி செய்வது என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இட்லி, தோசை, சப்பாத்தி, சுடச்சுட சாதம் இவைகளுக்கு தொட்டு சாப்பிட இது சூப்பரான சைடு டிஷ். காலையில் அவசர அவசரமாக சமைக்கும்போது கூட சட்டென இந்த கிரேவியை செய்து முடிக்கலாம். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த எளிமையான பச்சைபயிறு ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

செய்முறை

அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 1 கப் அளவு பச்சை பயிரை போட்டு வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். வருத்த பச்சைப் பயிரில் 3 கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, 5 விசில் விட்டால் பச்சைப்பயிறு சூப்பராக வெந்து நமக்கு கிடைக்கும். குக்கரில் இருக்கும் வேக வைத்த பச்சை பயிறு அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. அதில் தோலுரித்த பூண்டு பல் 3, சின்ன வெங்காயம் 5 பல், 2 கைப்பிடி அளவு தேங்காய் துருவல், சீரகம் 1 ஸ்பூன், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

குக்கரில் வேகவைத்த பச்சைபயிர் இருக்குது அல்லவா, அதை அப்படியே எடுத்து மீண்டும் அடுப்பில் வையுங்கள். அடுப்பை மிதமான தீயில் வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை பச்சைப் பயிரில் ஊற்றி மஞ்சள் தூள் 2 சிட்டிகை, நறுக்கிய பச்சை மிளகாய் 4, கருவேப்பிலை 1 கொத்து போட்டு கிரேவியை ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

இன்னொரு அடுப்பில் சின்ன தாலிப்பு கரண்டியை வைத்து 2 ஸ்பூன் எண்ணெயில் கடுகு 1/2 ஸ்பூன், கிள்ளிய வரமிளகாய் 2, கருவாப்பிலை 1 கொத்து, சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது 4 பல் போட்டு, நன்றாக வதக்கி விட்டு இந்த தாளிப்பை அப்படியே கொதித்துக் கொண்டிருக்கும் கிரேவியில் ஊற்றி உப்பு சரிபார்த்து நன்றாக கலந்து அடுப்பை அணைத்து சுடச்சுட பரிமாறினால் சூப்பரான பச்சை பயிறு கிரேவி தயார்.

இதையும் படிக்கலாமே: ஜலதோஷமும் தும்பலும் மாறி மாறி வந்து தொல்லை கொடுக்குதா? சட்டுன்னு இந்த தூதுவளை சூப்பை குடிங்க. சளி இருமல் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

இதில் மிளகாய் தூள் சேர்க்கவில்லை. வெறும் பச்சை மிளகாய் காரம் தான். தேவைப்பட்டால் உங்களுக்கு இரண்டு பச்சை மிளகாய்களை தேங்காய் விழுதோடு அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம். கேரளாவில் பச்சை பயிறு கிரேவியை இப்படித்தான் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. சூப்பரான புட்டுக்கு சைடிஷ் ஆக வைத்துக் கொண்டாலும் அட்டகாசமா இருக்கும்.

- Advertisement -