அருமையான கெட்டி தக்காளி சட்னி இப்படி மட்டும் செஞ்சு பாருங்க, வேற சட்னியே தேட மாட்டீங்க! இட்லி, சப்பாத்தி, சாதத்துக்கு கூட தொட்டுக்கலாம்.

tomato-mint-chutney-recipe
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் தக்காளி சட்னிக்கு ஈடு இணை கிடையாது. எல்லோருக்குமே தக்காளி சட்னி என்றால் ரொம்பவே விருப்பம் தான். அதிலும் தக்காளியை கொண்டு ஏகப்பட்ட வெரைட்டிகள் உண்டு. அந்த வரிசையில் அருமையான இந்த கெட்டி தக்காளி சட்னி ஒருமுறை இதே மாதிரி நீங்களும் செஞ்சு பாருங்க, இதை இட்லி, தோசை சப்பாத்தி, சாதம் என்று எல்லாவற்றுக்குமே தொட்டுக் கொண்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும். கெட்டியான தக்காளி சட்னி ஈசியாக எப்படி செய்யலாம்? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 3, சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – இரண்டு, வரமிளகாய் – 3, உளுந்து – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு, பூண்டு பல் – ஐந்து, இஞ்சி – ஒரு இன்ச், கருவேப்பிலை – அரை கைப்பிடி, புதினா இலை – ஒரு கைப்பிடி, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, தேங்காய் துருவல் – அரை கப், கடுகு – அரை டீஸ்பூன்.

- Advertisement -

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
இந்த தக்காளி சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் இஞ்சி தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள் தக்காளியை நறுக்குங்கள் மல்லி புதினா ஆகியவற்றை அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் உளுந்து, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய், இரண்டு வர மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் தோல் உரித்து எடுத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கி கொள்ளுங்கள். பின் தக்காளி பழங்களை சேர்த்து கொஞ்சம் போல உப்பு போட்டு நன்கு வதக்குங்கள்.

- Advertisement -

தக்காளி மசிய வதங்க வேண்டும். தக்காளியுடன் இஞ்சி, பூண்டு மற்றும் புளி ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை மசிய வதங்கி வரும் பொழுது கருவேப்பிலை, மல்லி தழை மற்றும் புதினா இலைகளை சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். இவைகள் சுருள வதங்கியதும் நீங்கள் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு முறை நன்கு பிரட்டி விடுங்கள். வாசம் வர ஆரம்பிக்கும், அந்த சமயத்தில் நீங்கள் அடுப்பை அணைத்து ஆற விட வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே:
ரிச் லெவல் பாதாம் அல்வா கடையில் தான் வாங்கணுமா என்ன? 15 நிமிடத்தில் குறைந்த பொருளில் நாவில் கரையும் பாதாம் ஹல்வா எப்படி செய்வது?

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவைகளை சேர்த்து நைசாக கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை சட்னியாகவும், துவையல் ஆகவும் இரு வேறு விதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு சிறு தாளிப்பு ஒன்றை கொடுத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சட்னியுடன் சேர்த்து இறக்கினால் ரொம்ப சூப்பரான கெட்டி தக்காளி சட்னி ரெசிபி ரெடி! இதே மாதிரி நீங்களும் செஞ்சு பார்த்து அசத்துங்க, இனி வேற சட்னியே தேட மாட்டீங்க.

- Advertisement -