சமையல் செய்யும் பொழுது இந்த தவறுகளை கண்டிப்பாக செய்துவிடாதீர்கள்! சமையல் ரகசியங்கள் 10!

sambar-perungayam
- Advertisement -

சமைக்கும் பொழுது ஒவ்வொரு சமையலின் ருசியும் அதில் சேர்க்கப்படும் பொருட்களில் அடங்கியுள்ளது. எந்த பொருளை எப்போது சேர்க்க வேண்டும்? எந்தப் பொருளை எப்படி சேர்க்க வேண்டும்? என்பதில் தான் சூட்சமம் ஒளிந்து கொண்டுள்ளது. இந்த சில குறிப்புகளை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால் இனி இப்படியான தவறுகளை தவிர்க்கலாம். சமையல் ரகசியங்கள் பத்தினை இனி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

குறிப்பு 1:
பெருங்காயம் தாளிக்கும் போது எண்ணெய் மிதமான தீயில் இருக்க வேண்டும். நன்றாக கொதித்து கொண்டிருக்கும் போது பெருங்காயம் சேர்த்தல் நல்லதல்ல! கருகி விடுவதால் உடலுக்கு தீமை விளையும்.

- Advertisement -

குறிப்பு 2:
குழம்பு, பொரியல் வகையறாக்கள் செய்யும் போது அடுப்பை அணைத்து இறக்கிய பின்பு தான் கொத்தமல்லித் தழை சேர்க்க வேண்டும். கொதிக்கும் போது மல்லியை நறுக்கி சேர்க்க கூடாது. அதன் தன்மை மாறி விடுவதால் ருசி கெட்டுவிடும்.

குறிப்பு 3:
கீரை சமைக்கும் போது மூடி போட்டு வேக விடக் கூடாது. அதன் இயற்கை தன்மை கெட்டுவிடும். சிறிதளவு எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்தால் கீரையின் நிறம் மாறாமல் ருசியும் அபாரமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
சாம்பார் செய்ய வாய்வு தரும் துவரம் பருப்பை குறைத்து ஆரோக்கியமும், சுவையும் கூட கொஞ்சம் மஞ்சள் பூசணி அல்லது சக்கரை வள்ளி கிழங்கு வெட்டி சேர்த்து பாருங்கள். சாம்பார் வீடே மணக்க ருசியாக இருக்கும்.

குறிப்பு 5:
சாம்பார் வைத்த பின்பு இறுதியாக கொஞ்சம் தனியாவை வாணலியில் இட்டு லேசாக வறுத்து பொடித்து கால் ஸ்பூன் போட்டு சாம்பாரை மூடி வைத்து விட்டால் சாப்பிடும் போது ஆஹா… ஓஹோ.. என்று சொல்லிக் கொண்டே சாப்பிடலாம் அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
பஜ்ஜி சுடும் போது பஜ்ஜி சப்பையாக வருகிறதா? புஸ்சென்று உப்பலாக வருவதற்கு ஒரு ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி மாவுக்கு பதிலாக சோள மாவும் பயன்படுத்தலாம். பிறகு பஜ்ஜி சுட்டு பாருங்க உப்பலாக வரும்.

குறிப்பு 7:
கசப்பென்று நினைக்கும் பாகற்க்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சுத்தமாகும் எனவே பாகற்காயுடன் மாங்காய் துண்டுகளை நறுக்கி சேர்த்து சமைத்துப் பாருங்கள். கசப்பு கொஞ்சம் கூட தெரியாது.

குறிப்பு 8:
காலிபிளவர் சமைக்கும் வாசனை சிலருக்கு பிடிக்காமல் போகலாம். காலிஃப்ளவர் நல்ல வாசம் வீச சிறிது இஞ்சியை துருவி சேர்த்து சமைத்து பாருங்கள். காலிஃப்ளவரை பத்து நிமிடமாவது சுடுதண்ணீரில் போட்டு எடுத்து பின்னர் தான் சமைக்க வேண்டும். அதில் கண்ணுக்கு தெரியாத புழுக்கள் இருக்கும்.

குறிப்பு 9:
சூப் வகையறாக்களை செய்யும் பொழுது சோளமாவு சேர்க்க வேண்டும். அப்படி சோளமாவு இல்லாத பட்சத்தில் கொஞ்சம் அவலை லேசாக வறுத்து நன்கு நைசாக அரைத்து பின்னர் சலித்து எடுத்துக் கொள்ளுங்கள். சலித்து வைத்த இந்த அவல் மாவை சேர்த்து சூப் செய்து பாருங்கள். சூப் நல்ல சுவையுடன் திக்காகவும் வரும்.

குறிப்பு 10:
ஆப்ப சட்டியில் மாவு ஒட்டாமல் வரவில்லை என்றால் கொஞ்சம் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்பு கடுகை கொட்டிவிட்டு எண்ணெய் விட்டு நன்கு துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு மாவை ஊற்றி பாருங்கள். ஆப்பம் ஒட்டாமல் அழகாக எடுக்க வரும்.

- Advertisement -