இந்த ஐடியா தெரிஞ்சா 1 மணி நேர சமையல் வேலையை, 1 நிமிடத்தில் முடிக்கலாம். 1 மாசத்துக்கு வரக்கூடிய கேஸ் 3 மாதத்திற்கு வரும்.

cooking
- Advertisement -

இன்றைக்கு சமையல் செய்யும்போது வெங்காயம் தக்காளி காய்கறிகளை வதக்கி வேக வைக்க நேரம் அதிகமாக எடுக்கிறது. அதற்கு காரணம் என்ன தெரியுமா. வாங்கிய காய்கறிகளை அன்றன்றே யாரும் சமைப்பது கிடைக்காது. குறிப்பாக மீன், சிக்கன், மட்டன் என்று வாங்கினால் கூட அதை ஃப்ரீசரில் மசாலா போட்டு ஸ்டோர் செய்து தான் அடுத்த நாள் பயன்படுத்துகின்றோம். இப்படி ஃப்ரீசரிலும் பிரிட்ஜிலும் வைக்கப்பட்ட பொருட்களை எடுத்து அடுப்பில் வைத்து சமைக்கும் போது அதற்கு நேரம் கொஞ்சம் கூடுதலாக தான் இருக்கும். கேஸ் வேற வேஸ்டா போகும். குறிப்பாக இறைச்சியை எல்லாம் ஃப்ரீசரில் வைத்துவிட்டு அதை மீண்டும் வெளியே எடுத்தால் அந்த ஐஸ் உருகவே ஒரு மணி நேரத்திற்கு மேல் எடுக்கும். இந்த வேலைகளை எல்லாம் நாம் எப்படி சுலபமாக மாற்றுவது. இதோ சின்ன சின்ன ஐடியா இல்லத்தரசிகளுக்காக.

முதலில் பிரிட்ஜில் வைத்த காய்கறிகளுக்கு ஒரு குறிப்பு. முக்கியமாக தக்காளியை போட்டு என்னதான் எண்ணெயில் வதக்கினாலும் ஜூஸியாக வதங்கி வருவதை கிடையாது. சமைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காய்கறியை எடுத்து, வெளியில் வைக்க வேண்டும். அப்படி இல்லையா ஒரு காட்டன் டவலை சுடுதண்ணியில் நனைத்து பிழிந்து கொள்ளுங்கள். அந்த காட்டன் டவலின் மேல் கொஞ்சமாக தூள் உப்பு அல்லது கல் உப்பு தூவி, இன்று சமைக்க வேண்டிய காய்கறிகளை அதன் உள்ளே வைத்து அப்படியே சுருட்டி வைத்து விடுங்கள். ஐந்து நிமிடத்தில் ஐஸ் இல்லாத காய்கறி உங்களுக்கு கிடைத்துவிடும். சமைக்கும் போது இது சீக்கிரம் வதங்கும். சீக்கிரம் வேகும்.

- Advertisement -

அடுத்தபடியாக மசாலா போட்டு பிரட்டி வைத்த இறைச்சி. அதாவது சிக்கனை மசாலா போட்டு ஃப்ரீசரில் வைத்திருந்தாலும் சரி, மட்டனை மசாலா போட்டு ஃப்ரீசரின் வைத்திருந்தாலும் சரி, அல்லது இறால் அல்லது மீன் எதை மசாலா தடவி நீங்கள் ஃப்ரீசரில் ஸ்டோர் செய்து வைத்திருந்தாலும் சரி அதை ஃப்ரீசரில் இருந்து டப்பாவோடு வெளியே எடுப்பீங்க. (மீன் மேலே மசாலாவை தடவி அப்படியே அதை ஃப்ரீசரில் வைத்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்தால், மீனுக்குள் அந்த மசாலா சூப்பராக இறங்கி இருக்கும். நிறைய பேர் வீட்டில் இப்போது இதை பின்பற்றுகிறார்கள் அல்லவா.)

ஒரு காட்டன் துண்டை சுடச்சுட தண்ணீரில் போட்டு நனைத்து பிழிந்து கொள்ள வேண்டும். அந்த காட்டன் துண்டின் மேலே உப்புத்தூள் தூவ வேண்டும். இந்த துண்டுக்கு நடுவே ஃப்ரீசரில் வைத்த இறைச்சி டப்பாவை வைத்து அந்த தூண்டில் சுற்றி விடுங்கள் அவ்வளவுதான். ஐந்தே நிமிடத்தில் ஃபிரீசான இறைச்சி, ஒன்றோடு ஒன்று ஒட்டி பிடிக்காமல் ஐஸ் கட்டி உருகி அப்படியே உங்கள் கைக்கு கிடைத்துவிடும். பிறகு அதை எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்தால் சீக்கிரமும் வெந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

சில சமயங்களில் நாம் குக்கர் ரப்பரை ஃப்ரீசரில் வைத்திருப்போம். கேஸ் கட் என்று சொல்லுவார்கள் அல்லவா. சமயத்தில் அதன் மேலே ஐஸ் கட்டிகள் பிடித்து விடும். அவசரம் எனும் போது அந்த ஐஸ் கட்டியிலிருந்து கேஸ் கட்டை எடுப்பது பெரும் சிரமமாக இருக்கும். அப்போது வெதுவெதுப்பான உப்பு கலந்த தண்ணீரை அந்த ஐஸ் கட்டியின் மேல் ஊற்றிவிட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுத்தால் ஐஸ் கட்டியிலிருந்து குக்கர் ரப்பர் சுலபமாக கைக்கு வந்து விடும். என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இறுதியாக எல்லோருக்கும் தேவைப்படும் படியான ஒரு குறிப்பு. முட்டையை வேக வைக்கக்கூடிய பாத்திரத்தில் எப்போதும் அந்த முட்டையின் நீச்ச வாடை அடிக்கும். முட்டையை வேக வைக்கும் போது அந்த தண்ணீரோடு பழைய எலுமிச்சம் பழ தோலை போட்டு வேக வைத்தால், அந்தப் பாத்திரம் வெள்ளை வெள்ளையாக மாறாது முட்டை வேக வைத்த வாடையும் அந்த பாத்திரத்தில் அடிக்காது. (குப்பையில் தூக்கிப் போடும் எலுமிச்சை பழ தோலை, ஒரு கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் தேவைப்படும் போது எடுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.) முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -