கடைகளில் மைசூர் போண்டா புசுபுசுன்னு வர இதுதான் காரணமா. இந்த ஐடியா மட்டும் தெரிந்தால், மைசூர் போண்டா செய்வதில் நீங்கதான் குயின்.

bonda
- Advertisement -

இப்போது மாலை நேரத்தில் லேசாக குளிர்ச்சி நிறைந்த சூழ்நிலை காணப்படுகிறது. சுடச்சுட டீ குடிக்கும் போது, இரண்டு போண்டா இருந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றுகிறது. இதற்காக கடைக்கு சென்று தினமும் போண்டா வாங்கி வர முடியுமா. நம்முடைய வீட்டிலேயே தேவைப்படும் போது சுலபமாக போண்டா சுடலாம். அதுவும் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே எளிமையாக. வாங்க சூப்பரா புசுபுசு மைசூர் போண்டா செய்வது எப்படி பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

செய்முறை

ஒரு அகலமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கோதுமை மாவு 1 கப், மைதா மாவு 1 கப், பச்சரிசி மாவு 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, சீரகம் 1 ஸ்பூன், ஆப்ப சோடா 1/4 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட்டு விடுங்கள். அதன் பிறகு 2 கப் அளவு கொஞ்சம் புளித்த மோரை எடுத்து ஊற்றி இந்த மாவை கட்டிகள் இல்லாமல் கரைக்க வேண்டும். இறுதியாக சூடாக இருக்கும் எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் இதில் ஊற்றி, கலந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.

- Advertisement -

நாம் இதில் கோதுமை மாவு மைதா மாவும் சரிசமமாக எடுத்திருக்கின்றோம். உங்களுக்கு தேவை என்றால் இதை முழுமையாக மைதாமாவில் செய்யலாம். மொத்தமாக 2 கப் அளவு மாவுக்கு 2 கப் அளவு புளித்த மோர் சரியாக இருக்கும். கூடுதலாக தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவை கிடையாது. மாவு 1/2 மணி நேரம் ஊறி வந்த பிறகு இதில் துருவிய இஞ்சி 1 ஸ்பூன், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 2, கருவேப்பிலை கொத்தமல்லி தழைகள் பொடியாக நறுக்கியது, போட்டு நன்றாக கலந்து விட்டால் சூப்பரான மைசூர் போண்டா மாவு தயார்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து போண்டா பொறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அது மிகதமாக சூடானதும், இந்த போண்டா மாவை கையில் அள்ளி சின்ன சின்ன போண்டாவாக அந்த எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்தால் சூப்பரான மைசூர் போண்டா தயார். போண்டா புசுபுசுவென உப்பி வந்திருக்கும். மேலே மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

- Advertisement -

இந்த போண்டாவை மிதமான தீயில் வைத்து தான் சுட்டு எடுக்க வேண்டும். அதிக சூட்டில் உள்ள எண்ணெயில் போண்டாவை போட்டால், போண்டா மேலே கருகிவிடும் உள்ளே வேகாது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தேவை என்பவர்கள் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து செய்யலாம். தொட்டுக் கொள்ள ஒரு கார சட்னி அல்லது தேங்காய் சட்னி பரிமாறி பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: மீன் சாப்பிட முடியாத நேரத்தில் கருணைக்கிழங்கு வறுவலை இப்படி வறுத்து வையுங்கள். மீன் வறுத்தா என்ன வாசம் வருமோ, அதே வாசம் இந்த கருணைக்கிழங்கு வறுவலிலும் வரும்.

ஈவினிங் இதைவிட அசத்தலான ஸ்நாக்ஸை வேற யாரால செஞ்சு தர முடியும். ரெசிபி பிடிச்சவங்க ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -