இப்படி சமைத்தால் உங்கள் சமையல் இன்னும் டாப்பாக மாறிவிடும் தெரியுமா? அட்டகாசமான சமையல் குறிப்புகள் 10!

veggitables
- Advertisement -

ஒவ்வொரு சமையலும் ருசி பெறுவதற்கு மிக முக்கிய காரணம் அதை சமைக்கும் பக்குவம் மற்றும் நிதானம் தான். நிதானமாக பார்த்துப் பார்த்துப் ஒவ்வொரு விஷயங்களை சேர்த்து செய்யும் சமையல் ஆனது என்றும் வீண் போனதில்லை. ஒரு பருக்கை கூட தட்டில் மிச்சம் வைக்காமல் சாப்பிடும் பொழுது சமைப்பவர்களுகு மன நிறைவைத் தருகிறது. அந்த மனநிறைவை நீங்களும் பெற குட்டி குட்டியான சில ஆலோசனைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்! வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

corn-brinji

குறிப்பு 1:
நீங்கள் காய்கறி பிரிஞ்சி, புலாவ் மற்றும் பிரைட் ரைஸ் போன்ற ஐட்டங்களை செய்யும் பொழுது கொஞ்சம் சோளத்தை வேக வைத்து சேர்த்தால் சாப்பாடு ருசியாக அமையும், மேலும் பார்ப்பதற்கு அட்டகாசமான நிறத்தில் சூப்பராக இருக்கும். ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
இலைகள் உள்ள காய்கறியை வாங்கும் பொழுது அது நமக்கு கூட்டு மற்றும் சூப் தயாரிக்க உதவும். குறிப்பாக முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகளில் இலைகளோடு சேர்த்து வாங்கிக் கொள்வது நமக்கு மிகவும் நல்லது. அதன் இலைகளை நறுக்கி சூப் செய்து குடிக்கலாம்.

Mullangi-keerai

குறிப்பு 3:
அரைத்து விட்ட சாம்பாருக்கு மசாலா அரைக்கும் பொழுது கொஞ்சம் அதனுடன் கசகசாவை சேர்த்து வறுத்து அரைத்து சேர்த்தால் சாம்பாரின் மணமும், குணமும் அலாதியானதாக மாறிவிடும். சாம்பார் கெட்டியாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
புதிதாக பாயாசம் செய்பவர்களுக்கு தேவையான குறிப்பு இது. பாலை ஆற வைக்காமல் பாயாசம் செய்யக் கூடாது. பால் திரிந்து விடும். அப்படி பாயாசத்தில் சேர்க்கப்படும் பால் திரிந்து போனால், அதனுடன் கொஞ்சம் 2 சிட்டிகை அளவிற்கு சமையல் சோடா சேர்த்தால் போதும், திரிந்த பால் சரியாகிவிடும்.

payasam

குறிப்பு 5:
நீங்கள் சாலட், பச்சடி போன்ற அயிட்டங்களை செய்யும் பொழுது அதில் கொஞ்சமாக தேங்காய் எண்ணெயில் தாளித்த கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்தால் மணமானது இரண்டு தெருவிற்கு மணக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
எப்பொழுதும் தேங்காய் திருகும் பொழுது கடைசி வரை துருவக் கூடாது. தேங்காய் ஓட்டையும் சேர்த்து சமைக்கும் பொழுது நமக்கு குடல் புண்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது! எனவே தேங்காயை மட்டும் துருவி சேர்த்தால் போதும். அதில் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.

silver-things

குறிப்பு 7:
நீங்கள் வைத்திருக்கும் வெள்ளி பொருட்கள் கறுத்து போகாமலிருக்க அதன் டப்பாவில் கொஞ்சம் கற்பூரத்தை நசுக்கி தூவி வையுங்கள்.

குறிப்பு 8:
மாதவிலக்கு ஏற்படும் சமயங்களில் பெண்களுக்கு அடிவயிற்றில் வலி இருந்தால் அவர்கள் அந்த சமயங்களில் உளுந்து கஞ்சி அல்லது கோதுமை கஞ்சி தொடர்ந்து சாப்பிட்டு வர உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் இதன் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகிவிடும்.

veggitables

குறிப்பு 9:
சமையல் செய்யும் பொழுது காய்கறிகளை இறுதியாக தான் நீங்கள் வெட்டி சேர்க்க வேண்டும். சமையலை ஆரம்பிக்கும் பொழுதே காய்கறிகளை வெட்டி வைத்தால் அதன் சத்துக்கள் அனைத்தும் இழக்க நேரிடும். காய்கறிகளை நறுக்கி காற்று படும்படி வைத்து விட்டால் அதில் இருக்கும் சத்துக்கள் வீணாகும் எனவே கடைசியாக சமையலில் சேர்க்கும் பொழுது காய்கறிகளை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் ஆரோக்கியம் சிறக்கும்.

குறிப்பு 10:
ஃப்ரிட்ஜில் இருக்கும் காய்கறிகள் வதங்கி வாடி போய்விட்டால் அதனை தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை. குளிர்ந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாற்றை கலந்து சிறிது நேரம் காய்கறிகளை ஊற வைத்து பின் நறுக்கினால் எளிதாக நறுக்கி விட முடியும். இதனால் காய்கறிகள் வீணாவது தடுக்கப்படும்.

- Advertisement -