கிவி பழம் நன்மைகள்

kiwi
- Advertisement -

இயற்கையில் விளையும் பெரும்பாலான பழங்கள் மனிதர்கள் உண்ணத்தக்கதாகவே இருக்கின்றன. உலகெங்கிலும் பல விதமான பழங்கள் விளைகின்றன. அதில் ஒரு சில பழங்கள் சமீப வருடங்களிலேயே மக்களிடம் அதிகம் பிரபலம் அடைந்துள்ளன. அப்படிப்பட்ட பழங்களில் ஒன்று தான் கிவி பழம். இக்கிவி பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

கிவி பழம் நன்மைகள்

நோய் எதிர்ப்பு
கிவி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் திறன் கொண்டது. எத்தகைய ஒரு நோயையும் எதிர்த்து நின்று, உடல்நலனை பாதுகாப்பதில் உடலின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி வீரியமிக்கதாக இருக்க தினமும் கிவி பழங்களை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி மிகும்.

- Advertisement -

சரும நலம்

கிவி பழத்தை சாப்பிடும் நபர்களுக்கு தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். காலை மற்றும் மதிய வேளைகளில் கிவி பழங்களை பழமாகவோ அல்லது சாறு பிழிந்து அருந்தி வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

- Advertisement -

கண்பார்வை

கிவி பழத்தில் வைட்டமின் “ஈ ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண கிவி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.

- Advertisement -

இதய நோய்கள்

இதய நோய்கள் மற்றும் பாதிப்புகள் கொண்டவர்கள் இயற்கை உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்து கொள்வது அவசியம் ஆகும். கிவி பழங்களில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்த பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவது தடுக்கப்படும். நரம்புகளில் ரத்தம் கட்டி கொள்ளாமல் செய்கிற சக்தி கிவி பழத்திற்கு உண்டு.

சர்க்கரை வியாதி

பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் ஏற்படும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. கிவி பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த இயற்கை உணவாக இருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைப்பதோடு, நீரிழிவு நோயாளிகளின், சிறுநீரில் அதிகளவு சர்க்கரை சத்துகள் வெளியேறாமல் கிவி பழம் தடுக்கிறது.

வயிறு நலம், செரிமான சக்தி

கிவி பழத்தில் உணவை செரிமானம் செய்ய கூடிய அமிலச்சத்துகள் அதிகம் உள்ளன. இப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும். வயிற்றில் உணவை செரிமானிக்க உதவும் ஜீரண அமிலங்களின் உற்பத்தியை தூண்டும். குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் நலன் மற்றும் சீரான இயக்கத்திற்கும் கிவிபழம் பேருதவி புரிகிறது.

நச்சு நீக்கி

நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள் மற்றும் அருந்தும் பலவகையான பானங்களில் இருக்கும் நச்சுகள் நமது கல்லீரலில் தங்கி விடுகின்றன. கிவிபழம் சிறந்த ஒரு நச்சு முறிப்பான் ஆகும். கிவி பழம் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் நீங்க பெற்று கல்லீரல் பலம் பெறும். கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் புண்களையும் ஆற்றும்.

உடல் எடை குறைப்பு

அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் கிவி பழம் சிறப்பாக செயல் படுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

உடல் சத்து

கடின உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சுலபத்தில் நீர்ச்சத்து மற்றும் உடலில் இருக்கும் உப்புகளின் இழப்பு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட நபர்கள் தினமும் கிவி பழங்களையும் அல்லது அதன் சாற்றை அருந்துவதாலும் சாப்பிடுவதால் உடல் இழக்கும் சத்துகளை மீண்டும் ஈடு செய்யும். உடல் அசதி மற்றும் களைப்பும் நீங்கும்.

தலைமுடி

ஆண்கள் மற்றும் பெண்கள் பலருக்கும் இக்காலங்களில் தலைமுடி கொட்டுதல், பொடுகு, தலைமுடியில் ஈரப்பதம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கிவி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “எ” மற்றும் “ஈ” சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் பலாப்பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
6 முக ருட்ராட்சம் பலன்கள்

இது போன்று மேலும் பல சித்த மருத்துவம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kiwi fruit benefits in Tamil. It is also called as Kiwi palam payangal in Tamil or Kiwi palam palangal in Tamil or kiwi palam nanmaigal in Tamil or Kiwi palam maruthuvam in Tamil.

- Advertisement -