ரோட்டில் காசு கிடைத்தால், அதிர்ஷ்டமா? துரதிருஷ்டமா? கீழே கிடக்கும் காசை எடுத்துக்கலாமா? கூடாதா? இந்த சந்தேகம் உங்களுக்கு இருந்தா அதற்கு உண்டான சரியான தீர்வு இதோ.

coin
- Advertisement -

சில சமயங்களில் வீதியில் நாம் நடந்து செல்லும் போது நமக்கு கீழே காசு கிடைக்கும். அந்த காசை எடுக்கலாமா வேண்டாமா என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கும். சில பேர் அந்த காசை ரொம்ப ரொம்ப அதிசயமான காசு கடவுள் கொடுத்த காசு என்று கூட சொல்லுவார்கள். இந்த காசை எடுப்பதன் மூலம், அதாவது அடுத்தவர்களுடைய பொருளை நாம் எடுப்பதன் மூலம் நமக்கு ஏதாவது பாதிப்பு வந்து விடுமோ என்ற சந்தேகமும் சிலருக்கு இருக்கிறது. இப்படிப்பட்ட குழப்பத்திற்கு உண்டான தீர்வைதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இனிமே காசு கிடைச்சா அதை எடுத்து என்ன செய்வது என்று யாருமே குழம்ப மாட்டீங்க.

சிலருக்கு ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்கள் என்று வீதியில் கிடைக்கும். இந்த நாணயங்களை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொள்வார்கள். இது எனக்கு கடவுள் தந்த காசு, இது அதிர்ஷ்டம் நிறைந்த காசு என்று. சரிதான் அது அடுத்தவர்களுடைய காசாக இருந்தாலும், அதை உங்களுடைய கையில் கொண்டு வந்து சேர்க்க வைத்தது அந்த கடவுள் தான். அந்த நாணயத்தின் மூலம் உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

என்னதான் அது கடவுள் தந்த காசாக இருந்தாலும், அது அடுத்தவர்களுடைய பணம் தானே. ஒரு ரூபாயாக இருந்தால் என்ன, பத்து ரூபாயாக இருந்தால் என்ன. அதை நாம் கைகளால் எடுத்து விட்டோம். அடுத்தவர்கள் பொருளை அபகரித்ததற்கு சமம் தான், இந்த செயலும். எடுத்த ஒரு ரூபாய் நாணயத்தை முதலில் ஒரு மஞ்சள் தண்ணீரில் கழுவி சுத்தமாக துடைத்து நீங்கள் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது வீட்டில் வேறு ஏதாவது இடத்திலோ பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம். கீழே இருந்து நீங்கள் எவ்வளவு காசு எடுத்தீர்களோ, அதே தொகையை உங்கள் கை காசை கொண்டு கோவில் உண்டியலில் சேர்க்கலாம்.

அதாவது கடவுள் கொடுத்த, கீழே இருந்து எடுத்த காசு உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் கையில் இருக்கும் உங்கள் சொந்த காசை நீங்கள் உண்டியலில் சேர்த்து விடுங்கள், எவ்வளவு காசு கீழே எடுத்தீர்களோ அவ்வளவு காசுக்கு இணையாக. இது ஒரு வழி.

- Advertisement -

அப்படி இல்லாவிட்டால், ஒரு ரூபாய் உங்களுக்கு கீழே காசு கிடைக்கிறது அதை நீங்கள் உங்கள் கையைக் கொண்டு எடுத்து விட்டீர்கள். பத்து ரூபாய்க்கு கூட யாராவது கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்தாலும் அது இன்னும் நல்லது. ரொம்பவும் குறைந்த பணமாக இருந்தால் மேல் சொன்ன இந்த வழியை நீங்கள் பின்பற்றிக் கொள்ளலாம்.

சரி சில பேருக்கு 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் கூட கீழே கிடைக்கும். என்ன செய்வது. கஷ்டத்திற்கு காசு கிடைத்தது என்று நாம் எடுத்துக் கொள்வோம். ஆனால், இப்படி அடுத்தவர்களுடைய நிறைய பணம் நம் கைக்கு கிடைக்கும் போது அதை நம்முடைய தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது.

- Advertisement -

இந்த காசை அவர்கள் எந்த சூழ்நிலையில் தொலைத்து இருப்பார்களோ. அவர்களுடைய கஷ்டமும் மனக்குமுறலும் இந்த காசை நாம் பயன்படுத்தும் போது நமக்கு வந்து சேர்ந்து விடும். முடிந்தால் கூடுமானவரை அந்த பணத்தை யார் தொலைத்தார்கள் என்று கேட்டு அக்கம் பக்கத்தில் விசாரித்து அவர்களிடம் திருப்பிக் கொடுப்பது நல்லது. ஒரு கடையின் வாசலில் காசு கிடந்தால் அதை எடுத்து, அந்த கடைக்காரரிடம் சொல்லி கொடுத்துவிட்டு வரலாம். யாராவது பணத்தை தொலைத்து விட்டேன் என்று தேடி வந்தால் இந்த காசை அவர்களுக்கு திருப்பி கொடுத்து விடுங்கள் என்று.

திருப்பிக் கொடுக்கவே முடியாத சூழ்நிலையில் நமக்கு ஒரு இடத்தில் பணம் கிடைக்கிறது என்றால் அந்த பணத்தை எடுத்து, அதாவது அதிக அளவில் இருக்கும் பணத்தை எடுத்து நீங்கள் உங்களுடைய தேவைக்காக செலவு செய்யக் கூடாது. கோவில் உண்டியலில் செலுத்துபவர்களாக இருந்தால் அதை அங்கு செலுத்தி விடலாம். அப்படி இல்லையா யாராவது ரொம்பவும் கஷ்டப்படுபவர்கள், ஆசிரமங்கள் போன்ற இடங்களுக்கு அந்த காசை கொண்டு போய் தானமாக கொடுத்து விடலாம். அந்த காசுக்கு ஏதாவது ஒரு பொருளை வாங்கி ரொம்பவும் பசியாக இருப்பவர்களுக்கு உங்கள் கையாலேயே கூட உணவு பண்டங்கள் வாங்கிக் கொடுத்து விடலாம். ரொம்பவும் கஷ்டப்படுபவர்களுக்கு ஏதாவது மருத்துவ உதவி செய்யலாம். இப்படி செய்து கொள்ளுங்கள்.

நீங்க ரொம்ப ரொம்ப கஷ்டத்தில் இருக்கும்போது இப்படி கீழே பணம் கிடைக்கிறது. அதை எடுத்து நீங்களே பயன்படுத்திக் கொண்டீர்கள் என்றாலும், பணம் காசு வரும் போது நினைவு வைத்துக் கொண்டு, நீங்கள் எவ்வளவு பணத்தை கீழே இருந்து எடுத்தீர்களோ அந்த தொகையை தானமாக கொடுத்து விட வேண்டும். அடுத்தவர்களுடைய பாவத்தை ஒருபோதும் நாம் சேர்த்துக் கொள்ளக்கூடாது. பாவ புண்ணிய கணக்குகள் பார்ப்பவர்களுக்கு தான் இந்த குறிப்பு. இனி கீழே காசு கிடந்தால் அதை எடுத்து என்ன செய்வது என்று தடுமாறாதீங்க. மேலே சொன்ன விஷயத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்துச்சுன்னா முயற்சி செய்து பாருங்கள். நிச்சயமாக நல்லது நடக்கும்.

- Advertisement -