சுட சுட இட்லிக்கு மேல இந்த சட்னியை ஊத்தி ஊறவெச்சு சாப்பிட்டு இருக்கீங்களா? கூரை கடையில், பாட்டி அரைக்கிற தண்ணி சட்னி ரெசிபி.

idli
- Advertisement -

சில இடங்களில் பாட்டி இட்லி சுட்டு விற்பனை செய்யும். அந்த கடையில் பெரியதாக சாம்பார் கார சட்னி ஒன்றும் கொடுக்க மாட்டாங்க. நாலு இட்லிக்கு, மேல இப்படி வெள்ளையா சட்னி ஊத்தி கொடுப்பாங்க. அந்த இட்லியை, அந்த சட்னியில் ஊறவைத்து சாப்பிடும் போது அவ்வளவு ருசி இருக்கும். காரம் அப்படியே நாக்கில் நிற்கும். பெரியதாக அதில் தேங்காய் சேர்த்திருப்பது போல கூட நமக்கு தோணாது. ஆனால் ருசிக்கு எந்த குறையும் இருக்காது. அதே சுவையில் ஒரு தண்ணி சட்னியை நம்ம வீட்லயும் ட்ரை பண்ணி பாக்கலாமா. வாங்க அந்த ரெசிபியை தெரிஞ்சுப்போம்.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் – 5 இரண்டாக வெட்டி அந்த எண்ணெயில் போட்டு 1 நிமிடம் வதக்கி விடுங்கள். பின்பும் ஓரளவுக்கு மீடியம் சைஸில் இருக்கும் பெரிய வெங்காயம் – 1, நீளவாக்கில் வெட்டி பச்சை மிளகாயுடன் போட்டு சட்னிக்கு தேவையான அளவு உப்பு போட்டு, நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கங்கள். பிரவுன் கலருக்கு வெங்காயம் மாறக்கூடாது.

- Advertisement -

அடுப்பை அணைத்துவிட்டு இந்த வெங்காயம் பச்சை மிளகாயை நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டுக்கொள்ள வேண்டும். இதோடு பொட்டுக்கடலை – 4 டேபிள் ஸ்பூன் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த சட்னியை கிண்ணத்தில் ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும். இந்த சட்னி தண்ணீராகத்தான் இருக்கும்.

காரத்திற்கு 5 பச்சை மிளகாய்கள் தான் சேர்த்திருக்கின்றோம். இன்னும் உங்களுக்கு கூடுதல் காரணம் தேவை என்றால் பச்சை மிளகாயை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இதற்கு ஒரு சிறப்பு தாளிப்பு கொடுக்க வேண்டும். அடுப்பில் கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 2 கிள்ளி போட்டு, கருவாப்பிலை – 2 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், போட்டு மிகப் பொடியாக நறுக்கிய – 5 சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு தோல் உரித்து மிகப் பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 5 போட்டு இரண்டு நிமிடம் போல வதக்கி இந்த தாளிப்பை அப்படியே சட்னியில் கொட்டி கலந்து இட்லிக்கு மேலே ஊற்றி சாப்பிட்டு பாருங்கள்.

- Advertisement -

சும்மா டேஸ்ட் வேற லெவல்ல இருக்குங்க. மிஸ் பண்ணவே பண்ணாதீங்க. இந்த சட்னில நாம தேங்காய் கூட சேர்க்கல. இன்ஸ்டண்டா அவசர அவசரமா செஞ்சா கூட காலையில 5 நிமிஷத்துல இந்த சட்னி ரெடி. உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

பாக்கும்போதே சாப்பிட ஆசையா இருக்குதுல்ல. நிச்சயமா வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 10 இட்லியை கூட சுலபமாக சாப்பிட வைக்க இந்த சட்னி ஒரு ஐடியா.

- Advertisement -